வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒருமுறையாவது 'வைரசினால்' பதிக்கப் பட்டிருப்பார்கள். அதிலும் ட்ரோஜன் (Trojan) எனப்படும் மால்வேரினால் (Malware) அவஸ்தையை அனுபவித்திருப்பார்கள். பெரும்பாலும் எதாவது ஒரு இணைய தலத்தில் நுழையும் போதோ அல்லது எதாவது லிங்கை சொடுக்கும் போதோ வைரஸ் எனப்படும் மென்பொருட்களை
தெரியாமல் தரவிறக்கம் செய்து விடுகிறார்கள். Registry யில் உட்கார்ந்து கொண்டு பாடாய் படுத்திவிடும்.சரி, இந்த மாதிரி வைரசை பரப்புவதினால் என்ன லாபம்? சும்மா கடுப்பேத்த இருக்கலாம்.சாதரண Malware கள் வலுக்கட்டயமாக விளம்பரங்களை நம் மீது தினிப்பதொடு நிறுத்திக் கொள்கின்றன. சில ட்ரோஜன் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை எல்லாம் திருடிக் கொண்டு போகலாம். கிரெடிட் கார்டு எண்கள், வங்கிக் கணக்குகள், சில முக்கிய கடவு சொற்கள் களவு போகலாம்.
ஆனால், இதையெல்லாம் விட சில ஆபத்தான வேலைகளை செய்ய இது பண்யன்படுதப் படுகிறது. முக்கிய நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களின் இணைய தளத்திற்கு சென்று கோப்புகளை திருடவும், மாற்றவும் ஒரு 'உளவாளியாக' (Cyber-espionage) இந்த ட்ரோஜன் அனுப்பப்படுகிறது. இதை சிரத்தையாக செய்துக் கொண்டிருப்பது வெறும் யாரும் இல்லை - நமது அண்டை நாடான சீனாதான். சமீபத்தில் இணையதள உளவு பற்றிய ஒரு ஆய்வில் 103 நாடுகளை சேர்ந்த 1295 கணினிகள் உளவுப் பார்க்கப் பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் பதிக்கப் பட்டியலில் முக்கியமாக தலாய் லாமாவின் அலுவலகம், திபெத் அரசாங்க அலுவலகங்கள், அமெரிக்காவில் உள்ள இந்தியன் எம்பசி, நட்டோவின் (NATO) தலைமை அலுவலகம் ஆகியவை அடங்கும்.
சைனாவிலிருந்து அனுப்பப்படும் இந்த வைரசுக்களுக்கு "கோஷ்நெட்" (GhostNet) என்று பெயர் வைத்துள்ளனர்.கோப்புகலை திருடுவதொடில்லாமல் , அந்த கணினியில் இருக்கும் புகைப்படக் கருவியையும், ஒலிக் கருவிகளையும் தானாக இயக்க செய்து அதன் மூலம் உளவு பார்க்கும் வேலையும் நடந்து வருகிறது. இது மாதிரி வேலைகளை எல்லாம் அமெரிக்காவிம் CIA , ரஷ்யவும் தான் செய்து வந்தது. இப்போது இவர்களை எல்லாம் விஞ்சி விடுவது போல சீனா தன் வேலையே ஆரம்பித்துள்ளது. இதை வழக்கம் போல் சீன அரசாங்கம் மறுத்துள்ளது.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட கனடாவில் உள்ள University of Toronto இதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அவர்கள் கூற்றுப்படி உளவு பார்க்கப்பட்ட கணினிகளில் முப்பது சதவிகிதம் மிக முக்கியமான கோப்புகளை கொண்டிருந்தது.இந்த கணினிகளில் கோஷ் ராட் (gh0st RAT) என்னும் ட்ரோஜனை தரவிறக்கம் செய்து , அந்த கணினிகளை தான் கட்டுப் பட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்பறம் கோப்புகளை திருடுவதில் இருந்து ஆரம்பித்து மற்ற எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார்கள். இதை ஆய்வு செய்த வல்லுனர்கள் மிகவும் சிக்கலான முறையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் , கண்டுபிடித்து அழிப்பது கடினமான வேலை எண்டும் தெரிவித்துள்ளனர். இந்த இணைய தல கிருமிகளை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என்றல் , பாதுகாப்பிலாத இணையம் கொடிய அரக்கனாக மாறிவிடும்!
முழு அறிக்கையை இங்கே தரவிறக்கம் செய்யவும்.
ஆதாரம்: http://webapp.mcis.utoronto.ca/
No comments:
Post a Comment