அனேகமாக நாம் எல்லோரும் ஒருமுறையாவது பட்டம் விட்டு மகிழ்ந்திருப்போம். அல்லது பட்டம் விடுவதை அருகில் இருந்தாவது பார்த்திருப்போம். மேமாத விடுமுறை வந்துவிட்டால் வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறப்பதை பார்க்கலாம். ஈர் குச்சி என அழைக்கப்படும், மெல்லிய , வளையக்கூடிய கொச்சியை எடுத்துக் கொண்டு அதை வளைத்து, கலர் காகிதங்களால் அலங்கரித்து, அதற்கு வால் ஒன்று இணைத்து...இப்படி அதை தயார் செய்வதே ஒரு பெரிய கலை தான். அப்பறம் நூலில் கட்டி இணைத்து, உயர உயர பறக்க விட்டு, யார் பட்டம் அதிக உயரம் பறக்கிறது என்று போட்டிபோடுவதும் ஒரு சுகம் தான்...ஓகே மேட்டருக்கு வருவோம்...
இந்த பட்டதை வைத்து மின் ஆற்றலை உருவாக்க முடியும் என்று கண்டுப் பிடித்துள்ளனர். காற்றில் உள்ள ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது புதிதல்ல. காற்றாலை கொண்டு மின்சாரம் தயாரிக்கப் பட்டு வருகிறது. காற்றின் விசையால் உந்தப்பட்டு பட்டம் மேலே பறக்கும் போது, அதன் மறு முனையில் உருவாகும் ஆற்றலை வைத்து மின்சாரம் தயாரிக்க படுகிறது. நாம் பட்டம் விடும் பொழுது இதை உணர்ந்திருப்போம். நம் பட்டம் மிக உயரமாக பறக்கும் பொது, நம்மை அது இழுத்து செல்லும். பத்து மீட்டர் சுற்றளவுள்ள பட்டதை வைத்துக்கொண்டு பத்து கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் அது பத்து வீடுகளின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கணக் கிட்டுள்ளனர் நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். மிக உயரத்தில் பறக்க விட்டு , அதிக பட்சமாக நூறு மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் சுமார் ஒரு லட்சம் வீடுகளின் மின்சார தேவை பூர்த்தி செய்ய படும். இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தின் செலவு மிகக் குறைவு. இதனால் ஆராய்ச்சிகள் மும்முரமாக நடைப் பெற்று வருகிறது. அமெரிக்காவில் சால் கிரிபித் என்பவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரது சொந்த நிறுவனமான மகனி பவர் மிகபெரிய் அளவில் மின்சாரத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கூகிள் கூட சுமார் பத்து மில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்த வீடியோவை பாருங்க: புரியும்.
No comments:
Post a Comment