Saturday, March 14, 2009

வீடு வாங்கலையோ வீடு!: அமெரிக்காவில் ரூ. 5லட்சத்துக்கு வீடு வேண்டுமா?

ம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ரூ.50க்கு ஒரு சதுர அடி நிலத்தை உங்களால் வாங்க முடியுமா? முடியாது. ஆனால், அமெரிக்காவில் அதே ரூ.50க்கு ஒரு வீட்டை வாங்கிவிடலாம். ஏங்க, ஏப்ரல் 1ஆம் தேதி பிறக்க எத்தனையோ நாள் இருக்க இப்பவேவா என்கிறீர்களா.

சொல்வது எல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவுமில்லை. ஆமாங்க, நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் குடியிருப்புகளின் விலை வரலாறு காணாத வகையில் மட்டமான ரேட்டுக்கு போய்விட்டது. நிதி நெருக்கடி காரணமாக வங்கி அடமானத்தில் உள்ள வீடுகளை விற்கத் துவங்கியிருக்கிறார்கள். கிடைத்தவரை லாபம் என்கிற ரீதியில் விற்கப்படுவதால் வீடுகள் சல்லிசான விலைக்குக் கிடைக்கின்றன.

டெட்ராய்ட் நகரின் ஒரு பகுதியில் 1800 குடியிருப்புகள் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 லட்ச ரூபாய்வரை விற்ற ஒரு குடியிருப்பு இப்போது 5 லட்ச ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆக, ரியல் எஸ்டேட் ரேட் 10 மடங்கு சரிந்திருக்கிறது அங்கு. ஒரு சில குடியிருப்புகள் ரூ.50க்கு கூட கிடைக்கிறது. என்னவொன்று, வங்கிக் கடனை நீங்கள் அடைத்துக்கொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் வீடு மட்டமான ரேட்டுக்கு கிடைக்கிறது என்றவுடன் பிரிட்டன், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் வீடுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டனர். அதுவும் ஒருவரே 50, 100, 1000 வீடுகளை வாங்கிப் போட்டு மொத்தமாக வளைக்கிறார்கள்.

டெட்ராய்ட் நகரில் குடியிருப்புகளின் சராசரி விற்பனை மதிப்பு 2003ஆம் ஆண்டு ரூ.24.28 லட்சமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ4.5 லட்சமாக சரிந்தது. இவ்வாண்டு ரூ.3.13 லட்சமாக குறைந்துவிட்டது.

பேசாம விளையாத நம்ம காட்டை வித்து அமெரிக்காவில் ஒரு வீடு வாங்கிடலாமா?அங்கே வீடு வாங்கினா, விசா, வேலைல்லாம் இலவசமாகக் கிடைக்குமான்னு யாராச்சும் கேட்டுச் சொல்லுங்களேன்.

நாங்கல்லாம் எதாச்சும் ப்ரீயாஃ கொடுத்தாதான் ஒரு பொருளையே வாங்குவோமாக்கும். அது இலவசப் பொருளானாலும் சரி!

-கிருஷ்ணாசேகர்

நன்றி: www.tamilvanan.com

4 comments:

  1. அமெரிக்கால அஞ்சு லட்சமா? வெல ரொம்ப அதிகமாத்தெரியுதுங்களே?

    நம்ம பக்கமா இருந்தா வெல அதிகமாப்போனாலும் வேலியப்போட்டு மாட்டக்கீட்டக் கட்டிக்கலாம்.

    ReplyDelete
  2. I heard that some houses were sold for 10000$! Blame it on the subprime crisis!

    ReplyDelete
  3. கொஞ்ச நாள் பொறுங்க கோகுல்! ஆயிரத்திற்கு வந்துடும்

    ReplyDelete
  4. Yes Joe. It is true. American people are afraid to spend money.

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com