Wednesday, February 25, 2009

மும்பை குப்பம் - சிறு பார்வை!

ஸ்லம் டாக் படம் வெளி வந்ததிலிருந்து பல சர்ச்சைகளை கிளப்பியது மும்பை குப்பம் பற்றிய காட்சியமைப்புகள். குப்பத்து மக்களின் வாழ்கையை மிக கேவலமாக காட்டியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அனைவரிடமும் இருந்து வந்தது. இது தொடர்பாக பல போராட்டங்கள், வழக்குகள் என்று பல எதிர்ப்புகள் மும்பை வாசிகளிடமிருந்தும் , குப்பத்து வாசிகளிடமிருந்தும் வந்தன.ஆனால் படம் பார்த்த சிலருக்கு இன்னொரு கருத்தும் இருந்தது. "உள்ளதை தானே காட்டியுள்ளனர். இந்தியாவில் இது போல பகுதிகளும் இருக்கிறதே! உண்மையை சொன்னால் கசப்பாக இருக்கிறது. இதை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் இல்லை என்று நம்மால் நாமே ஏமாற்றிக் கொள்ள கூடாது".- இப்படி சொல்பவர்களையும் மறுத்து பேச முடியாது. ஆக, உண்மை நிலை என்ன என்பதை அங்கு உள்ளவர்கள் தான் சொல்ல வேண்டும். மும்பை தாரவி குப்பத்து வாசியான , சமூக சேவைக்காக 'மகசேசே' விருது பெற்றவருமான ஜோக்கிங் அற்புதம் எனும் தமிழர் ஜுனியர் விகடனுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அவருடைய பேட்டி கீழே: 

''மும்பையில் குப்பங்கள் உருவானது எப்படி?''
''இதற்குக் காரணமே தமிழர்கள்தான். 1938-ல் ஒரு முறை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக மாவட்டத்தை விட்டே வெளியேறி, மகாராஷ்டிரா வந்தனர். இதில் பாதிப் பேர் சூரத்திலும் மீதிப் பேர் மும்பை நகரின் வெளிப்புறத்திலும் குடிசைகள் போட்டுத் தங்கினர். அப்போது காடாக இருந்த இங்கு, மலை சாதி மக்களுக்காக தாரா தேவி கோயில் இருந்தது. அதுவே, இந்தப் பகுதியின் பெயரானது. நாளடைவில் இந்தப் பெயர் மருவி, தாராவி என்று ஆனது. மற்ற மாநிலத்தவர்களும் தமிழர்களுடன் சேர்ந்துகொள்ள, ஆசியாவின் மிகப் பெரிய குப்பமாகி விட்டது தாராவி. சுமார் 520 ஏக்கர் பரப்புள்ள இங்கே 93 பகுதிகளைக் கொண்ட 3,600 குப்பங்கள் உள்ளன!'

''தாராவியை வைத்து எடுக்கப்பட்ட 'ஸ்லம் டாக் மில்லியனர்' படம் பற்றி...''
''எங்கள் குப்பங்களைப் பற்றி அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அப்பட்டமான பொய்! குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதது போல சித்திரிக்கப்பட்டுள்ளதும் அதில் ஒன்று. 2001-ல் நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில், அதிக மார்க் வாங்கி பாஸ் செய்தவர், தாராவி குப்பத்துக்காரர்தான். தற்போது மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனராக இருக்கும் எஸ்.எஸ்.ஷிண்டே உட்படப் பலர்

இந்தக் குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். தற்போதுகூட இங்கு 46 எம்.பி.பி.எஸ், 38 இன்ஜினீயரிங் மாணவர்கள் உள்ளனர். மும்பையில் தென் இந்திய உணவு வகை களுக்குப் பிரசித்தி பெற்ற 'முத்துசாமி கேட்டரர்ஸ்' இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், இந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்தான். இவர் போல நியாயமாக, உழைத்துச் சம்பாதித்த ஏராளமான கோடீஸ்வரர்கள் இந்தக் குப்பத்துக்குச் சொந்தக்காரர்கள். ஏற்கெனவே, மீரா நாயர் தன்னுடைய 'சலாம் பாம்பே' படத்தில் மும்பைக் குப்பங்களைத் தவறாகச் சித்திரித்தார். அதையும் தாராவி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அது போலவே இந்தப் படத்தையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.''

''படங்களில் காட்டப்படுவது போல் இங்கு உண்மை யிலேயே வறுமை நிலவுகிறதா?''
''நாங்கள் வறுமையாக இருப்பதாகச் சொல்லி உலக அளவில் நன்றாகக் கல்லா கட்டிவிட்டது அந்தப் படக்குழு. இந்தியாவிலேயே விலை குறைவான உணவு தாராவியில்தான் கிடைக்கும். வெறும் 15 ரூபாயில் மூன்று வேளையும் பசியாறிக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு சுமார் எட்டு லட்சம் இட்லிகள் இங்கு தயாராகி, மும்பை முழுவதும் சப்ளையாகிறது. ஒரு நாய்கூட இங்கே பட்டினியால் செத்ததில்லை. இதனால்தான், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் இருந்து இன்றும் கூடப் பலர் தாராவிக்கு வந்து தங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். பசி, பட்டினியில் அடிபடவா இங்கே வருவார்கள்? சொல்லப் போனால், மும்பைவாசியினர் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு இந்தக் குப்பங்களில்தான் கிடைக்கிறது!''

''ஆனால், தாராவியில் இன்னும் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படும் சூழல் நிலவுகிறதே?''
''இங்கே 10 வயது முதல் குப்பை பொறுக்கி விற்ற முகம்மது அலி என்ற சிறுவன், இன்று தாராவியின் கோடீஸ்வரர்களில் ஒருவர். இன்றும் சுமார் 300 குடும்பங்கள், அந்தக் குப்பைகளில் கிடைத்தவற்றை விற்று தினம் ரூபாய் 300 முதல் 1,000 வரை சம்பாதிக்கிறார்கள். அதே போல், இங்குள்ள பழைய பொருட்கள் சந்தையில் வாங்கப்படும் பிளாஸ்டிக்குகளை வைத்து, பி.வி.சி. பைப்புகளுக்கான மூலப் பொருட்கள் ஏராளமாகத் தயாராகின்றன. இது தடைப்பட்டால் பொருட்கள் கிடைக்காமல், இந்தியா முழுவதும் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துவிடும். அறுவை சிகிச்சையின்போது தையல் போடப் பயன்படும் ஒரு வகை நூல், இதே தாராவியிலிருந்துதான் 40 நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதனால் குப்பையைக் கூட தொழிலாக மாற்றிக் காட்டிய அதிசய பூமி இது!'

"மும்பையின் கிரிமினல்கள் குப்பங்களிலிருந்துதான் உருவாவது போல் படத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தோற்றம் உண்மையானதா?''
''ஆரம்பத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, இங்கே கிரிமினல்கள் உருவானது உண்மைதான். அதிலும், மும்பை குப்பங்களில் தொடக்க காலத்தில் தமிழர்கள் இருந்ததால், பிரபல தாதாக்களாக உருவெடுத்தவர்கள் பலரும் தமிழர்களாகவே இருந்தார்கள். ஆனால், இந்த நிலைமை முற்றிலுமாக மாறிப் பல வருடங்களாகி விட்டன. இப்போது இங்கு வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சம் இல்லை. அதனால், மும்பை நகரைவிட இங்கே கிரிமினல்கள் குறைவுதான்!''

''இந்தக் குடிசைகள் மாற ஏதாவது வழிகள் உண்டா?''
''மகாராஷ்டிர அரசு பன்னாட்டு வங்கியுடன் இணைந்து 'தாராவி புனரமைப்புத் திட்ட'த்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கோடிக்கணக்கில் உயர்ந்துவிட்ட தாராவியின் ஒரு பகுதி நிலங்களை தொழில் அதிபர்களுக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகைகளில் அடுக்குமாடி வீடுகள் கட்டி, அனைவருக்கும் மறு பகுதியில் இடம் தரும் திட்டம் நடந்து வருகிறது. தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், மீண்டும் அடுத்த இரு வருடங்களில் தொடங்கும். அதன் பிறகு, மும்பைக் குப்பங்களின் முகம் நிச்சயமாக மாறிவிடும்!'
நன்றி: விகடன்

Sunday, February 22, 2009

மனசு வலிக்குது - கவிதை


நன்றி : விகடன், மாணிக்கவாசகம்

ஆஸ்கார் 2009 - நேரடி ஒளிபரப்பு


வாழ்த்துக்கள் ! ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே!
Free Webcam Chat at Ustream

Saturday, February 21, 2009

ஆஸ்கார், A R ரஹ்மான்ஸ்கார் விருது (ஒஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகடமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் தொடங்கும் ஆஸ்கார் அலை, முடிவுகள் தெரிவிக்கப்படும் நாள் வரை தொடர்கிறது. சினிமா துறை 25 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்த தனி நபர்களுக்கும், குழுக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. சுமார் 6000 உறுப்பினர்களைக் கொண்ட அகாடமி ஒப் மோசன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சாஸ் (Academy of Motion Picture Arts and Sciences) இந்த ஆஸ்கார் விருதுகளை கொடுக்கிறது. இந்த 6000 உறுப்பினர்களும் அவரவர் துறை களை, சார்ந்த விருதுகளை தேர்தெடுக்கிறார்கள். உதரணமாக, நடிகர்களாக உள்ள உறுப்பினர்கள், சிறந்த நடிகரை ஓட்டு போட்டு தேர்வு செய்கின்றனர்.வேற்று மொழி திரைப்படங்கள், அனிமேசன் தெயரைப்படங்களை மட்டும் அனைவரும் சேர்த்து தேர்ந்து எடுக்கிறார்கள்.

தேர்வு முறை:

ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த திரைப்படங்களை பார்க்கும் உறுப்பினர்கள்,  டிசம்பர் இறுதியில் சிறந்த ஐந்து நபர்களை , படங்களை ஒவ்வொரு துறைக்கும் பரிந்துரைகிறார்கள். இந்த முடிவுகளை ஓட்டு சீட்டுகளில் பதிவு செய்து அதை, ப்ரைஸ் வட்டார் கோபெர் (PricewaterCooper) என்ற ஆடிட்டிங் நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முடிவுகள் ஜனவரி மூன்றாம் வாரம் அறிவிக்கப் படுகிறது. 


இரண்டாம் கட்டமாக, ஐந்து பேரில் ஒருவரை தேர்வு செய்து அதை ப்ரைஸ் வட்டார் க்கு அனுப்பி வைக்கிறார்கள். ப்ரைஸ் வட்டார் நிறுவனத்தின் இரண்டு பேர்கள் மட்டும் ஓட்டுகளை சேகரித்து, முடிவுகளை ரகசியமாக வைத்திருந்து, விழாவில் அறிவிக்கிறார்கள். (இந்த வருடம் அந்த லிஸ்ட் லீக் ஆகி விட்டதாக வதந்தி!).


ஆஸ்கார் சிலை:


விருதுக்காக கொடுக்கப்படும் சிலை, 13 1/2 இன்ச் உயரமுடையது. பிரிட்டனியாம் என்ற உலோகக் கலவையால் செய்யப்படும் இந்த சிலைக்கு தங்க முலம் பூசப் படுகிறது.
சரி....இந்த ஞாயிறு அன்று அறிவிக்க படப்போகும் 81 வது விருதுகளை இந்தியர்கள் அனைவரும் ஆர்வத்தோடு கவனிக்க காரணம், ரஹ்மான்!!! ரஹ்மனோடு சிறந்த பின்னணி இசைக்கு போட்டியில் இருப்பவர்கள்...
 
  • Alexandre Desplat - “The Curious Case of Benjamin Button”
  • James Newton Howard - “Defiance” 
  • Danny Elfman - “Milk”
  • Thomas Newman - “WALL-E”

சிறந்த பாடலுக்கான போட்டியில் இருப்பவர்கள்:

  • “Down to Earth” from “WALL-E”  Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
  • “Jai Ho” from “Slumdog Millionaire” , Music by A.R. Rahman, Lyric by Gulzar
  • “O Saya” from “Slumdog Millionaire” , Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam  

பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் ஆஸ்கார் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வெல்வாரா என்பது தெரிந்துவிடும்.  இதற்கு முன் இந்திய அளவில் எந்த ஒரு  இசையமைப்பாளரும் அல்லது எந்த திரைப்படக் கலைஞரும்  மூன்று பிரிவுகளில் தேர்வு  செய்யப்பட்டு கிடையாது இதுவே முதல் முறையாகும். Slumdog Millionaire திரைப்படம்10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.சிறந்த இசை அமைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  போட்டியிருந்தாலும்சிறந்த பாடலுக்கு அவரின் இரண்டு பாடல்கள் பரிந்துரைக்கப் பட்டிருப்பதும்அவருக்கு போட்டியாக இருப்பது ‘Wall –E’ என்கிற அனிமேஷன் திரைப்படம் மட்டும்தான் என்பதும்அவருக்கு விருதை உறுதி செய்வது போலதான் உள்ளது.

 

 ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துவோம்.....

Friday, February 20, 2009

போர் பயிற்சியில் கபில்தேவ்!

இந்திய பாதுகாப்பு படையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கவுரவ "லெப்டினென்ட் கர்னலாக' இணைந்த கபில் தேவ், டில்லியில் நடந்த ராணுவ போர் பயிற்சி முகாமில் உற்சாகமாக கலந்து கொண்டார். கடந்த 1983 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி, உலககோப்பை பெற்றுத் தந்தார் கபில்தேவ். சர்வதேச கிரிக் கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின், இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்பின் தலைவராக உள்ளார். நாட்டுப் பற்று கொண்ட இவர், ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். இதனை ஏற்றுக் கொண்ட, இந்திய ராணுவம் இவருக்கு கவுரவ லெப்டினென்ட் கர்னல்' பதவி வழங்கி பெருமை படுத்தியது. தீவிர பயிற்சி: பஞ்சாப் ரெஜிமென்ட் சார்பில் டில்லியில் நடந்து வரும் தரைப்படை வீரர்களுக்கான போர் பயிற்சி முகாமில் கபில்தேவ் நேற்று கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடக்கும் இம்முகாமில் துப்பாக்கி சுடுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் கபில்தேவ் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களாக போர் பயிற்சி முகாம் இங்கு நடந்து வருகிறது. இன்று இரண்டாவது நாள். போர் படை அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது புதிய அனுபவமாக உள்ளது. அவர் களது வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டு வருகிறேன். ராணுவத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒழுக்க முறைகளை, ஒரு விளையாட்டு வீரர் தெரிந்து கொள்வது நல்லது. இங்குள்ள நடவடிக்கைகளை பார்க்கையில், இப்போது கூட நான் கிரிக்கெட் விளையாடலாம் என எண்ணத் தோன்றுகிறது.

 இங்கு நான் போர் வீரனாக வரவில்லை. நாட்டை காக்கும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராணுவத்தில் இணைந்து உள்ளேன். ராணுவ உடை அணிந்தவுடன் புதிய உணர்ச்சி வருகிறது. பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதலும் கற்று கொண்டேன். இருப்பினும் துப்பாக்கி தூக்கும் கலாசாரம் சிறந்தது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 50 வயதில் ராணுவ பயிற்சி மேற் கொள்வது என்பது மிகவும் சிரமம். ஆனால் ஆர்வம் இருந் தால், எதையும் சாதிக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைக்காதது துரதிருஷ்டம் தான். ஆனால் எனது கனவு தற்போது மெய்யாகி உள்ளது. நான் ஒரு முழுமையான இந்தியக் குடிமகனாகி விட்டதாக கருதுகிறேன். ஒரு சமயத் தில் ஒரு வேலை தான் செய்ய வேண்டும். தற்போது நான் செய்யும் பணிகளில் மனமகிழ்ச்சியுடன் உள்ளேன். நாளைக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.இவ்வாறு கபில்தேவ் கூறினார். 

அரசியலுக்கு அழைப்பு:அரசியலில் சேரும்படி பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்பு வருவதாக கபில் தேவ் தெரிவித்தார். இவர் கூறுகையில்,"" பல அரசியல் கட்சிகள் என்னிடம் பேசி வருகின்றன. ஆனால் நான் அரசியல் வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து வருகிறேன். இப்போதைக்கு அரசியலில் இணையும் ஆர்வம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்," நல்ல மனிதர்கள் மட்டுமே அரசியலில் இணைய வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது,''என்றார்.

நன்றி : தினமலர்

Thursday, February 19, 2009

குடிபோதையில் ஜப்பான் நிதி அமைச்சர்!

ரோமில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் சோய்ச்சி நககாவ 'போதையோடு" வந்து உளறிக் கொட்டியதை அடுத்து அவர் பதவி விலகினார். ஜலதொசதிர்காக போட்ட மாத்திரையோடு சிறிது ஒயினும் சேர்ந்ததால் அப்படி ஆகிவிட்டது என்று விளக்கமளித்த அவர், "என்னோட உடல் நிலையை கவனிக்காமல் இப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் நாட்டு மக்களிடன் கோரி யுள்ளார். ஏற்கனவே பொருளாதார தேக்கத்தால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் பிரதமர் தரோ அசோ, தேர்தல்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தினால் கடுப்படைந்துள்ளார்.வீடியோ இங்கே:
------------------

Wednesday, February 18, 2009

'பாத்திரமறிந்து பிச்சை போடுவோம்! - தமிழருவி மணியன்

ழத்தமிழர் நலனுக்காகப் போராடப் புறப்பட்ட வர்கள், இந்தியத் தமிழரைத் திராவிடத் தமிழராக மாற்றுவதற்குப் புதிய புறநானூற்றுப் போர்க்கோலம் பூண்டுவிட்டது ஏன்?' என்று புரியவில்லை. 'தமிழீழம் மலர்ந்தால், தனித் தமிழ்நாடு உருவாவது தவிர்க்க முடியாது!' என்று சொல்லியே ஈழத்தமிழருக்கு எதிராகச் செயற்படும் சில சக்திகளின் விஷவலையில் விழுகின்ற மனிதர்களால், எந்த நற்பயனும் ஏற்படப் போவதில்லை. காங்கிரஸ் மீதுள்ள கோபம், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக ஏன் எழவேண்டும்? சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும்தான் இந்தி யாவா?
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினம் நாற்பது தொகுதிகளிலும் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் ஆதரவின்றி, மன்மோகன் சிங் அரசு அமைந்திருக்க முடியாது! மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜபக்ஷேவின் சிங்களப் பேரினவாத பாசிச அரசுக்கு ஆதரவாகவும்,தமிழினத்துக்கு எதிராக வும் செயற்படுவதைக் கண்டித்து நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய எம்.பி-க்கள் அனைவரும் இனவுணர்வுடன் இணைந்து ஆதரவை திரும்பப் பெற்றிருந்தால்... மன்மோகன் சிங்கின் பிரதமர் நாற்காலி ஆட்டம் கண்டிருக்குமே! சோனியா காந்தியின் செல்வாக்கு சரிந்திருக்குமே! மத்திய அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ராஜசுகம் அனுபவிப்பவர்களின் இனத்துரோகத்துக்கு இந்திய ஒருமைப்பாடு என்ன செய்யும்?

'தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்னைகளிலும் இந்திய அரசு, நம்மைப் புறக்கணித்தே வருகிறது. கேரளத்தோடு முல்லை பெரியாறு, கர்நாடகத்தோடு காவிரி, ஆந்திராவோடு பாலாறு எனப் பல ஜீவாதாரப் பிரச்னைகளில் தமிழகத்தின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, நாம் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். இதனால், 'தமிழ்நாடு இனியும் இந்தியா வோடு இருக்க வேண்டுமா?' என்ற கேள்வி இப்போது மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. மீண்டும் திராவிட நாடு தேவைப்படுகிறது!' என்று தீக்குளித்த தியாகிகளுக்கான அஞ்சலிக் கூட்டத்தில் ஆர்ப்பரித்திருக்கிறார் திருமாவளவன். அவருடைய கருத்தில் அவரே முரண்படுகிறார். கர்நாடகமும், ஆந்திரமும், கேரளமும், தமிழகமும் இணைந்தது தானே திராவிடம்! திராவிட நாடாகிவிட நாங்கள் தயார் என்று திருமாவளவனிடம் கன்னடரும், ஆந்திரரும், மலையாளிகளும் தனியாக வந்து வாக்குறுதி வழங்கினார்களா? திராவிட நாடு கண்டதும் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு தண்ணீரைத் தமிழருக்குத் தடையின்றித் தருவதாக உறுதிமொழி கொடுத்தார்களா? இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியே பிரிந்துவிட்டால்... தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களின் மீது போர் தொடுப்பாரா? திருமாவளவன் விளக்க வேண்டும்.

தமிழனத்தின் நலன்களை இந்திய அரசு புறக்கணிப் பதால்... தமிழ்நாடு தனியாகப் பிரிந்துவிட்டதாகக் கொஞ்சம் கற்பனை செய்வோம். 'காரைக்குடி தண் ணீரைத் திருப்பத்தூருக்குத் தரக்கூடாது!' என்று உண்ணாவிரதம் இருந்தது திருமாவுக்குத் தெரியாதா? தமிழகத்தின் வட மாவட்டங்களைப் போல் தென் மாவட்டங்கள் கல்வி, தொழில், போக்குவரத்து போன்றவற்றில் வளர்ச்சியுறாமல் தேங்கி நிற்பதால், 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!' என்று கோஷம் எழுப்பி, தங்கள் நலன் காக்கத் தனியே பிரிகிறோம் என்று சொன்னால் என்ன செய்வது? மீண்டும் தொண்டை மண்டலம், சோழ மண்டலம், தென்பாண்டி மண்டலம் தேவையா? கொசு கடிக்கிறது என்பதற்காக, குடியிருக்கும் வீட்டின் கூரையையா இடிப்பது?

'திராவிட நாட்டைப் பெறவும், அதற்கான காரியம் செய்யவும் நாம் தயாராக இருக்கவேண்டும். திராவிட நாடு, தனிநாடாகிவிட்டால் நமக்கு நம் ஆயுள்வரை ஓய்வு கிடைக்காது. திராவிடன் என்ற பெயரையும், 'திராவிட நாடு' தனி சுதந்திர நாடாக வேண்டும் என்பதையும் நாம் குறிச் சொல்லாகவும், லட்சியத் திட்டச் சொல்லாகவும் கொண்டாக வேண்டும்' [குடியரசு-29.01.1944] என்று அறைகூவல் விடுத்த பெரியார், தன்னுடைய குரலுக்கு ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மூன்றும் சிறிதும் செவிசாய்க்கவில்லை என்றதும் 'திராவிடநாடு' கோரிக்கையைக் கைவிட்டு, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கொடியைக் கையில் எடுத்தார். 'திராவிடர் கழகம்' என்ற பெயரை மட்டும் அவர் மாற்றவில்லை. 'ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன் வந்துவிடுவார்கள். அவர்களைத் தவிர்க்கவே 'தமிழர்' என்று சொல்வதற்கு பதில் 'திராவிடர்' என்கிறேன்' என்றார் பெரியார். திருமாவளவன் கேட்பது திராவிட நாடா? அல்லது பெரியார் விளக்கிய திராவிடத் தமிழ்நாடா? புரியவில்லை!

தன்னுடைய தள்ளாத வயதிலும் குடலிறக்க நோய் தந்த துயரத்தைச் சகித்து, மூத்திரச் சட்டி யுடன் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தன்னலமின்றி, பதவி வேட்கையற்றுமக்களைச் சந்தித்த பெரியாரின் பிரிவினை முழக்கத்துக்குத் தமிழகம் தலைசாய்க்கவில்லை.'திராவிடப் பெருங்குடி மக்களின் உரிமைகள் அழிக்கப்படு கின்றன; வளங்கள் பறிக்கப்படுகின்றன; தனித் தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன; வாழ்வு அடிமைப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களி லிருந்து மீளத்தான் நாங்கள் தனிநாடு கேட்கிறோம் என்று (நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் - 25.01.1963) அண்ணா முழங்கினார்.

பின்னர், 'திராவிட நாடே கழகத்தின் குறிக் கோள்!' என்று பிரகடனம் செய்த கழகத்தின் 2-வது விதியை நீக்கி, அதற்கு பதிலாக, 'தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது...' என்று ஒருமனதாக மாற்றியது தி.மு.கழகத் தலைமை. அந்த 'திராவிடக் கூட்டமைப்பு' கூக்குரலும் காலநடையில் ஓசையற்றுப் போனது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அண்ணல் அம்பேத்கர், 'இந்தியா பல நாடுகள் இணைந்ததால் ஏற்பட்ட ஒரு நாடல்ல. ஓர் ஒப்பந்தத்தின் மூலமாகப் பல நாடுகள்இணைந்து இந்தியக் கூட்டாட்சி உருவாகாத தால்,இந்தியாவிலிருந்து பிரிந்து போகக்கூடிய உரிமை எந்த மாநிலத் துக்கும் இல்லை. அது அழிக்க முடியாத கூட்டாட்சி என்பதால் 'ஒன்றியம்' எனப்படுகிறது. இந்த நாடும், அதன் மக்களும் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்திய நாடு ஒன்றாகக் கலந்துவிட்ட ஒரு முழுமையான நாடு. அதன் மக்கள் ஒரே மூலத்திலிருந்து பிரிந்த, தனித்த ஓர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்ந்து வருபவர்கள்!' என்று விளக்கியதை 'திராவிடர் நாடு திருமாவளவன்கள்' அறிதல் நலம். காந்தியிடம் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்த காரணத்துக்காக, வருணாசிரம இந்து மதம் தீண்டாமை மூலம் தலித்களைத் தாழ்த்தப் பட்டவர்களாக ஆக்கியதற்காக, காந்தியையும் காங்கிரஸையும் இந்து மதத்தையும் தீவிரமாக எதிர்த்த அம்பேத்கர், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகக் குழி தோண்டவில்லை!

ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும், மலையகத் தோட்டத் தமிழரின் ஜீவாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் தமிழகத்திலுள்ள தமிழர் அனைவரும் கட்சி வேலிகளைத் தாண்டி, கருத்து வேற்றுமைகளை மீறி ஒன்றாகக் கைகோத்து ஓங்கிக் குரல் கொடுக்கவேண்டிய தருணத்தில் தங்கபாலுவும் திருமாவளவனும் ஒருவர் மேல் ஒருவர் விமர்சனக் கணைகளை வீசிக்கொண்டிருப்பதால்... கசப்பான எதிர்விளைவுகளே ஏற்படும்.


அங்குலம் அங்குலமாக... சாவை நோக்கி நகரும் உண்ணாவிரதத்தை மகாத்மா 18 முறை தன் வாழ்வில் மேற்கொண்டார். ஒரு முறைகூட உண்ணாவிரத நோக்கம் நிறைவேறாமல், அதிலிருந்து அவர் விலகியதில்லை. பூனா ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையப்பம் இட மறுத்திருந்தால், எரவாடா சிறையில் மகாத்மா மரணத்தைத் தழுவி யிருப்பார். மகாத்மா மேற்கொண்ட உண்ணா விரதம் வேள்வி. இன்றைய அரசியல் மேடைகளில் அரங்கேறும் உண்ணாவிரதம் நாடகம். முத்துக்குமார், சென்னை அமரேசன், சீர்காழி ரவிச்சந்திரன் பாதையைப் பின்பற்றி எந்த இளைஞரும் தீக்குளிக்கவேண்டிய அவசியமில்லை. அஞ்சலிக் கூட்டங்களில் வீரவுரையாற்றும் எந்த அரசியல் தலைவராவது தீக்குளிப்பாரா? அந்த அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் யாராவது தீக்குளிக்க அவர்கள் அனுமதிப்பார்களா?


சென்ற நாடாளுமன்றத் தேர்த லில் நாற்பது இடங்களையும் ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணிக்கு அளித்த தமிழினம், வரும் தேர்தலில் ஈழத் தமிழர் நலனுக்கு எதிராக நின்ற கட்சிகளை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். இப்போதிருக்கும் மத்திய அரசு, ஈழ மண்ணில் மரணத்துடன் போராடும் தமிழர்களுக்கு மருந்தும் உணவுப் பொருளும் பிச்சை போடுவதே புண்ணியம் என்ற போக்கில் செயற்படுகிறது. 'பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாருமில்லை; பிச்சை எடுப்பவனைக் காட்டி லும் பரிதாபத்துக்குரியவன் யாருமில்லை' என்றார் ருஷ்யப் படைப்பாளி மாக்ஸிம் கார்க்கி. அரசியல் கட்சிகளுக்கு வாக்குப் பிச்சையும், அதன் மூலம் வாழ்க்கைப் பிச்சையும் அளிப்ப வர்கள் வாக்காளர்கள். நாம், பாத்திரமறிந்து... வரும் தேர்தலில் பிச்சை போடுவோம்.

இப்போதைய நம் நோக்கம், ஈழத் தமிழரும் மலையகத் தமிழ ரும் இன்னல் தீர்ந்து வாழ்வதுதான். அதற்கு திராவிட நாடு, தனித் தமிழ்நாடு கோஷங்கள் கால் காசுக்கு உதவாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்றும் எதிரெதிராகக் கொடி பிடித்து, கோஷம் இடுவதை நிறுத்திவிட்டு... இனியாவது கூடிக் குரல் கொடுப்போம். 'என் வீரர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்... ஒருவர்கூட படையில் இருக்கமாட்டார்கள்!' என்றான் மகா ஃபிரெடரிக். ஈழப் பிரச்னையில் நம் அரசியல் தலைவர்கள் அன்றாடம் நடத்தும் நாடகத்தைப் புரிந்துகொண்டால்... அதன் பின் ஒருவர்கூட இவர்கள் பின்னால் இருக்கமாட்டார்கள்!

 நன்றி : விகடன், தமிழருவி மணியன் 

Sunday, February 15, 2009

ஆஸ்திரேலியா -நியூஸ்லாந்து ட்வென்டி - 20 கிரிக்கெட் ஹை-லைட்ஸ்


பரபரப்பான ட்வென்டி-ட்வென்டி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது. கடைசி ஓவருக்கு முன்னால் மக்கெல்லம் ஆட்டம் இழந்தது, ஆட்டத்தில் திருப்பு முனை..


Saturday, February 14, 2009

விகடன் விமர்சனம்: நான் கடவுள்

தறவைக்கிற பாலா ஸ்பெஷல் 'ருத்ர தாண்டவம்'!

'அஹம் பிரம்மாஸ்மி' - அத்வைதத்தின் அடிப்படைச் சூத்திரத்தின் அதிரவைக்கும் உச்சாடனம்தான் படம். காசியில் கைவிட்ட தன் மகனைத் தேடி 14 வருடங்கள் கழித்து வருகிறார் ஒரு தந்தை. பிண வாடையையே மூச்சுக் காற்றாகக்கொண்ட, பிணங்களுக்கு மோட்ச வரம் கொடுக்கிற 'அகோரி'யாக அலைகிற மகன் ஆர்யாவை, சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். ஆனால், உறவுகள் மேல் பற்றற்று கஞ்சா போகத்திலும் மோனத் தியானத்திலும் மூழ்கிக்கிடக்கிறார் முரட்டு ஆர்யா. அதே ஊரில் இருக்கிறது, உடல் சிதைந்த மனிதர்களையும் ஊனப்படுத்தப்பட்டவர்களையும் பிச்சை எடுக்கவைக்கிற தாண்டவனின் 'ஊனமுற்றவர்கள் தொழிற்சாலை.' அதில் சிக்கிக்கொள்கிறார் பார்வையற்ற பூஜா. இரக்கமற்ற அரக்கர்களிடம் சிக்கிச் சிதையும் பூஜாவுக்கு ஆர்யா அளிக்கும் மோட்சம் என்ன என்பதே கடவுள் கதை!

ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' நாவலைத் தழுவி, விரிகிறது திரைக்கதை. கவன எல்லைக்குள் வராத பிச்சைக்காரர்களின் துயரங்கள், கொண்டாட்டங்கள், உறவுகள் ஆகியவற்றை முதன்முதலாகத் திரையில் கொண்டுவந்ததற்காக இயக்குநர் பாலாவுக்குப் பாராட்டு! உடல் கலைந்த, உயிர் மிஞ்சிய ஜீவன்களை உருப்படிகளாக்கி பரிதாபப் பிச்சை எந்திரங்களாக மாற்றும் கொடூரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதே போல, இது வரை நாம் அதிகம் அறிந்திராத அதிர்ச்சியாக, 'நான் கடவுளாகி' வரமும் சாபமும் வழங்கும் அகோரி சாமியார்களைப் பற்றி பாலீஷாகச் சொல்கிறார். இரண்டு வகை மனிதர்களையும் ஒரே புள்ளியில் இணைத்திருப்பது ரசிக்கத்தக்க புத்திசாலித்தனம்!

கங்கைக் கரையெங்கும் பிணங்கள் எரிய, வேதகோஷங்கள் முழங்க, சந்நியாசிகள் நர்த்தனமாட... தலைகீழ் தவம் புரிந்தபடி ஆக்ரோஷமாக ஆர்யா அறிமுகம் ஆகும் காட்சி, ஒரு தமிழ் சினிமா நாயகனுக்கு 'ரௌத்ர ஆரம்பம்'. அலை பாயும் கண்களும், அலட்சிய மேனரிஸமுமாகப் பார்த்துப் பழகிய ஆர்யாவா இது? சிவந்த கண்களில் வெறித்த பார்வை, விறைப்பான உடம்பு, முறைப்பான நடை, கனல் வெப்பத்தையும் கனமான அர்த்தத்தையும் சுமந்து வரும் சிக்கன வார்த்தைகள், ரணகளச் சண்டையின்போதும் சடாரென ஆசனம் போட்டு அமரும் லாகவம் என நிஜ காலபைரவனாக நம் மனதில் ஆசனமிடுகிறார் ஆர்யா.

பார்வையற்ற பிச்சைக்காரப் பாடகியாக பூஜா, உருக்கத்தால் உலுக்கி எடுத்திருக்கிறார். குழந்தைக்குப் புத்திமதி சொல்வது போல ஆர்யாவுக்கு 'அம்மாவை மதிக்கணும்... சரியா சாமீ?' என்று டீச்சர் டைப்பில் அறிவுரை சொல்லி, 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்று பாடுகிறபோது... சபாஷ் பூஜா. தன் கேர் டேக்கரின் முதுகில் தொற்றிக்கொண்டு வருவது, புழுதிக் காட்டில் புரள்வது என இவர்தான் கதையின் நாயகி!

'உருப்படி'களின் ஏஜென்ட்டாக வரும் கிருஷ்ணமூர்த்தியின் பாத்திரப் படைப்பு மனுஷத்தனம் மிக்க அழகு. 'வசூலைக் கெடுத்துராதீங்கடா!' என்று தன் கீழுள்ள பிச்சைக்காரர்களிடம் கெஞ்சும்போதும், போதையில் அவர்களை இழுத்துவைத்துக் கொஞ்சும்போதும் ரசிக்கவைக்கிறார். வில்லன் தாண்டவனாக வரும் ராஜேந்திரனின் விஸ்வரூபம் அசத்தல். மொட்டைத் தலை, நரம்பு உடம்பு, கடவுள் பக்தி, துளியும் இரக்கமில்லாத கொடூரம் என வித்தியாச வில்லன். கால் திருகிப் பிறந்திருக்கும் ஓர் ஊனமுற்ற பையனைப் பார்த்து, 'நல்ல உருப்படி... நமக்கு வேலை வைக்கல' என்று சந்தோஷம் காட்டும்போதும், பூஜாவை அடித்துத் துவைக்கும்போதும் மிரட்டி எடுக்கிறார்.

'தாயே மகாலட்சுமி, ஆதிலட்சுமி, வரலட்சுமி...' என்றெல்லாம் இறைஞ்சியும் காசு போடாத பெண்ணை 'ஏய்! ஜோதிலட்சுமி' என்கிற குசும்பிலும், 'அம்பானி யாரு?' என்றதும், 'செல்போன் விக்கிறவய்ங்க. அதெல்லாம் உனக்குத் தெரியாது' என்ற நக்கலிலும் தெறித்துச் சிரிக்கவைக்கிறான் வடுகப்பட்டி செந்தில்.

கடவுளைக் கண்டபடி வசை பாடும் கவிஞர் விக்கிரமாதித்யன், பிச்சைக்காரர்களிடம் பரிவு காட்டும் திருநங்கை கீர்த்தனா, மாங்காட்டுச் சாமியாக வரும் 'கோவை' கிருஷ்ணமூர்த்தி, கூத்தாடும் 'நயன்தாரா' என சின்னச் சின்ன கேரக்டர்கள் சுவாரஸ்யத்துக்குக் கை கொடுக்கிறார்கள். 'இவனையும் சீக்கிரம் தொழிலதிபர் ஆக்கிட்டா, ஏதாவது ஒரு நடிகைக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிடலாம்' என்று பிச்சைக்காரர்கள் கதைத்துக்கொள்ளுமிடங்களில் சிரிக்கவைக்கும் ஜெயமோகனின் வசனம், கடவுளைப் பற்றிய சுரீர் வசனங்களில் சீரியஸாகக் கவனிக்கவைக்கிறது.

சிதிலமுற்ற மனிதர்கள், அகோரி சாமியார்கள் என்று நாம் இதுவரை அறிந்திடாத இரு பெரும் உலகின் தரிசனங் களை அசாத்திய இசையால் சாத்தியப்படுத்துகிறார் இளையராஜா. 'பிச்சைப் பாத்திரம்...' பாடலில் உருக் கத்தின் உச்சமாகத் தாலாட்டுகிறது இசை.

காசியின் மொத்த குணத்தையும் சில நிமிடங்களில் சொல்லிவிடுகிற கட் ஷாட்கள், பொட்டல் காட்டின் நடுவே அண்டர்கிரவுண்ட் பிச்சைக்காரர்களின் கிடங்கு, மலைக் கோயில் சண்டைக் காட்சிகள் அனைத்திலும் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா அனலும் அழகுமாக வெளிப்படுகிறது.

ஒரிஜினல் அடியும் உக்கிர வேகமுமாகச் சண்டைக் காட்சிகளில் ஆர்யாவின் ரௌத்ரத்துக்கு ஏற்ப மிரட்டல் மேஜிக் செய்திருக்கிறார் 'சூப்பர்' சுப்பராயன்!

இத்தனை இருந்தாலும், மீண்டும் மீண்டும் பாலாவின் முந்தைய படங்களைப் பார்ப்பது போன்ற களைப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை!

விறைத்த உடம்புடன் நடக்கும் அசாதாரண மனிதர்களைத் தாண்டி, பாலாவிடம் வேறு கதை நாயகர்கள் உருவாக மாட்டார்களோ? போலீஸையும் கோர்ட்டையும் மையமாக்கிய காமெடிகளும் பாலாவின் வழக்கமே! ஆர்யாவின் தாய் அழும் காட்சிகள் சீரியல் எபிசோட். என்னதான் கிராமமாக இருந்தாலும் ஒரு பொட்டல் காட்டில், கட்டி முடிக்கப்படாத கோயிலின் அடியிலேயே பிச்சைக்காரர்கள் கோடவுன் இயங்குகிறது என்பதும், வெளிநாட்டுத் தூதர்கள் கணக்காக பிசினஸ் பேச ஆட்கள் வந்து போகிறார்கள் என்பதும் நம்ப முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகராமல் கோயில் படிக்கட்டுகளிலும் பிச்சைக்காரர்கள் கோடவுனிலும் தேங்கி நின்றுவிடுகிறது.

இறுதிக் காட்சியில் பாலாவின் வழக்கமான படங்களுக்கு நேர் எதிராக பூஜா பேசும் அத்தனை நீளமான டயலாக் அலுப்பு. பிச்சைக்காரர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் அதிர்ச்சி கொடுத்தாலும், போகப் போக காமெடியாகி அவர்கள் வாழ்க்கையின் அவலச் சுவையே நகைச்சுவையாகிப் போவதால், அழுத்தம் குறைகிறது. தனித்தனிக் காட்சிகளில் தென்படும் பிரமிப்பு, ஒட்டுமொத்தப் படத்தை இணைத்து இழுத்துச் செல்லும் மைய இழை மிஸ் ஆவதால்... கடவுளின் கழுத்து மாலையில் ஏதோவொரு நெருடல்!

இருந்தாலும், இந்தக் களம் புதிது! அந்தப் புது அனுபவத் துக்கும் புயல் உழைப்புக்கும் தரிசிக்கலாம், பாலாவின் கடவுளை!

 
நன்றி - விகடன் விமர்சனக்குழு

Friday, February 13, 2009

காதலர் தின ஸ்பெஷல்

 15% of U.S. women send themselves flowers on Valentine's Day.


**************************************************************************************

73% of people who buy flowers for Valentine's Day are men, while only 27% are women                            **************************************************************************************


The Kama Sutra is believed to be the oldest sex manual in existence. Generally considered the standard work on love in Sanskrit literature, the book is thought to have been written around 300 A.D.   .**************************************************************************************


About 1 billion Valentine's Day cards are exchanged each year. That's the largest seasonal card-sending occasion of the year   **************************************************************************************

Wednesday, February 11, 2009

உலக கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மாணவர் சாதனை


செய்தி: சேலத்தில் நடந்த உலக கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மாணவர் சாதனை புரிந்தனர்.சேலத்தில் நடந்த வேல்டுகப் 2009 க்கான வேல்டு ஆல்ட் மார்ஷியல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, கொரியா நாடுகளில் இருந்து மாணவமாணவிகள் பங்கேற்றனர். 

சப்ஜுனியர் 10 வயதுக்கான 20 முதல் 25 கி., பிரிவுக்கான கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மெட்ரிக்., பள்ளி மாணவர் ராகுல்பாபு ( கோல்டு மெடல்) முதலிடம், 16 வயதுக்கான ஜுனியர் 40 முதல் 45 கி., எடை பிரிவில் லூயிஸ்லெவல் மெட்ரிக்., உயர்நிலை பள்ளி மாணவர் மருதுபாண்டி(சில்வர் மெடல்) இரண்டாம் இடம், 40 முதல் 50 கி., எடை பிரிவில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகமதுபாசில் (சில்வர் மெடல்) இரண்டாம் இடம் பெற்றனர். 

வெற்றி பெற்ற மாணவர்களை ராமநாதபுரம் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் ராஜாகுரன்சேதுபதி, செயலாளர் செல்லத் துரை அப்துல்லா, தலைமை பயிற்சியாளர் குகன், துணை பயிற்றுனர் பாலமுருகன், விளையாட்டு ஆசிரியர்கள் ரமேஷ் பாபு, ஜான்சன், கிழவன்சேதுபதி, நவநீதன், பிரபாகரன் பாராட்டினர்.

"கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் பணம், புகழ், போன்றவை எளிதாக கிடைத்து விடுகிறது. திறமை இருந்தால் முன்னேறலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் தடகளம், மல்யுத்தம், கிக் பாக்சிங் போன்ற விளையாட்டு வீரர்கள் திறமையும், கனவுகளையும் சுமந்து கொண்டு, சரியான பண உதவி, பயிற்சி இல்லாமல் தவிக்கிறார்கள்.
நம்மால் பண உதவி செய்ய முடியவில்லை என்றாலும், பாராட்டி உற்சாகப் படுத்தினால் இவர்கள் பிற்காலத்தில் சாம்பியன்கள் ஆவார்கள். தோனி, சனியா மிர்சா வகையறாக்களை பாராட்டுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், இவர்களையும் கொஞ்சம் கண்டு கொள்வோம்."

Sunday, February 8, 2009

அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை


இட்லி என்னடா தோசை என்னடா அவசரமான உலகத்திலே

மெக்டானல்ட்ஸ் போகிறார் வாங்கித் தின்கிறார் ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே

ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே


தாயும் தந்தையும் ராவும் பகலுமாய் ஓடி உழைக்கிறார் பாரடா

இவர் பெற்ற பிள்ளைகள் தனித்து வீட்டிலே இருக்கும் சேதியும் கேளடா

இருக்கும் சேதியும் கேளடா


தனித்து வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் என்ன செய்கிறார் பாரடா

அவர் நிண்ட்டிண்டோவிலும் இண்டெர்நெட்டிலும் பொழுதைக் கழிக்கிறார் பாராடா

பொழுதைக் கழிக்கிறார் பாராடா


செல்வம் சேர்க்கவே இங்கு வந்ததாய் என்றும் சொல்கிறார் கேளடா

இவர் மார்ட்டுகேஜையும் காரு லோனையும் அடைப்பது எந்த நாளடா

அடைப்பது எந்த நாளடா


கொலஸ்டராலையும் கேலரீயையும் எண்ணிப் பார்க்கிறார் பாரடா

இவர் கருணைக் கிழங்கையும் முருங்கைக் காயையும் பார்த்து எத்தனை நாளடா

பார்த்து எத்தனை நாளடா


பத்து மைல்களோ நூறு மைல்களோ பார்ட்டி என்றதும் பாரடா

இவர் ஒட்டு மொத்தமாய் குடும்பத்தாருடன் ஓட்டிச் செல்கிறார் காரடா

காரோட்டிச் செல்கிறார் பாரடா


ஆண்டுக்கொரு முறை வீட்டு ஞாபகம் வந்து விட்டதும் பாரடா

இவர் மூட்டை முடிச்சுடன் இரண்டு வாரங்கள் இந்தியாவில் இருப்பாரடா

சொந்த ஊரில் இருப்பாரடா


பெற்ற தாயையும் சுற்றத்தாரையும் பிரிந்து வந்தவர் தானடா

இவர் பெற்ற பிள்ளைகள் பிரிந்து போகையில் வருத்தப் படுகிறார் ஏனடா

வருத்தப் படுகிறார் ஏனடா


குழந்தை வளர்ப்பிலே தமிழுக்கிடமின்றி ஆகிப் போனது ஏனடா

அட அமெரிக்காவிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை இது தானடா

வாழ்க்கை முறை இது தானடா

 - ஆசை ஆசைத்தம்பி

Saturday, February 7, 2009

காதலர் தினம் : சதிகாரர்களின் சதுரங்கம்
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி பதினான்காம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் ஆனந்தக் கூச்சலிடஇது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினர் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  

மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ என்னும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு.வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்ததினங்கள்’. அன்னையர் தினம்தந்தையர் தினம்நண்பர் தினம்மனைவியர் தினம்எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும்,பூங்கொத்துகளிலும்சாக்லேட் பாக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.


காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்ஏதேனும் அதிகமாய்ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.

 


 

அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும்,அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ்ஈஸ்டர்ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம். ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்.

 

உணவகங்கள்கடைகள் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிற இதய வடிவ பலூண்களும்மன்மதன் அம்புடன் நிற்கும் படங்களும்பூக்களும் தான். இவையெல்லாம் காதலின் சின்னங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறப்பு உணவுகள் காதலர் தினத்துக்கென்றே தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல காதலர் தின திட்டங்களும் உள்ளன. சிறிய அளவில் ஆரம்பித்து இரண்டு கோடி ரூபாய் வரை செலவில் இவை நடைமுறையில் உள்ளன. ஹெலிகாப்டரில் சுற்றுதல்மிக மிக ஆடம்பர உணவகத்தில் உணவுஅரச மரியாதை என பணத்தை உறிஞ்சும் திட்டங்கள் அவை.

 

காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவில் பள்ளி இறுதியாண்டு முடித்து வெளியே வரும் மாணவ மாணவியர் கற்போடு இருந்தால் கேலிக்குரியவர்களாய் பார்க்கப் படுவார்கள். இந்தியாவிலும் அதே போன்ற ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிக்க ஊடகங்களும்காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.

 

நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.டிஸ்கோதேக்இரவு உணவக விடுதிகள்கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும்பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

 

காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும்தலைவர்களும் சொல்லவில்லை.பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து …. கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலாஅகநாநூறில் இல்லாத காதல் ரசமாகாமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

 

இந்த காதலர் தினத்தின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

 

கிபி இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும்காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திலும்பிரான்ஸிலும் புனித வாலண்டைன் மிகவும் பிரசித்தம்.

 

பண்டைய ரோமில் பிப்ரவரி என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம்வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் அன்றைக்கு இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

 

எப்படியெனினும்வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக ஆரம்பித்தது கவனிக்கத் தக்கது.சீனர்களிடம் ஏழின் இரவு’ எனும் பெயரில் அறியப்படும் இந்த காதலர் தினம் ஏழாம் மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல்அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ஹாம்லெட்நாடகத்திலும் நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் காணப்படுகிறது.

 

பிரிட்டனில் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் சிறிய அளவில் 1700 களிலேயே துவங்கிவிட்டதாக ஊர்ஜிதமற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கிபி 1840 ல் எஸ்தர் எ ஹாலண்ட் என்பவர் வாலண்டைன் தின விற்பனையை அமெரிக்காவில் துவங்கினார். அவருடைய வாழ்த்து அட்டையே வாலண்டைன் தினத்தைத் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான வாழ்த்து என்பது குறிப்பிடத் தக்கது.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும்பூக்கள் கொடுப்பதும்சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது.காதலர் தின வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதை அறிந்த வியாபாரிகள் மார்ச் 24ம் தியதியை வெள்ளை தினம் என்று பெயரிட்டு ஒரு புதிய விழா நாளாக்கினார்கள். அதாவது பிப்ரவரி 14ம் தியதி பரிசு வாங்கியவர்கள் மார்ச் 14ம் தியதி பதில் பரிசு வழங்க வேண்டும் எனும் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த தினம். கொரியாவில் இன்னும் ஒரு படி மேலே போய் ஏப்ரல் பதினான்காம் நாளை கருப்பு தினமாகக் கொண்டாடினார்கள். எந்த பரிசும் காதலர் தினத்தன்று கிடைக்கா தவர்கள் ஒன்று கூடி கருப்பு நிற உணவை உண்பார்களாம்.

 

தென்கொரியாவில் நவம்பர் 11ம் தியதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின் படி ஆவே மாதத்தின் பதினைந்தாம் நாள் ( ஆகஸ்ட் கடைசி பகுதி ) காதலர் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளை உடை உடுத்தி காதலியர் ஆடுவதைக் காணும் வேலை ஆண்களுக்கு.

 

பிரேசில் நாட்டில் டயா டாஸ் நமோரதாஸ் எனும் தினம் ஜூன் பன்னிரண்டாம் தியதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வாழ்த்து அட்டைகள் பூக்கள் கொடுத்து நாளை சிறப்பிப்பது அவர்கள் வழக்கம். அதற்கு அடுத்த நாள் திருமணங்களின் பாதுகாவலனான புனித அந்தோணியார் தினம் அங்கே கொண்டாடப்படுகிறது.

 

கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. அமீகோ சீக்ரட்டினோ - எனப்படும் ரகசிய ஸ்நேகிதனே விழாவும் அங்கே பிரபலம். பின்லாந்தில் நண்பர்கள் தினமாக இது கொண்டாடப்படுவதால் காதலுக்கு உரிய முக்கியத்துவம் இந்த விழாவிற்கு இல்லை. ரொமானியாவில் பிப்ரவரி 24ம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர். வாழ்த்து அட்டை தயாரிக்கும் ஹால்மார்க் போன்ற நிறுவனங்களுக்கு இது வேட்டை நாள். ஏதேனும் நான்கு காதல் வரிகளைப் போட்டு ஒரு அம்பை இதயத்தில் சொருகி விட்டால் அவர்களுடைய விற்பனை சூடு பிடித்துவிடும்.

 

தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும்பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து டாஸ்மார்க் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

வாழ்த்து அட்டைகள்பரிசுகள்பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா காதல் என்பது மைல் கல்லா பயணமா சிந்திப்போம். வர்த்தக வலையில் விழுந்து விடாமலும்சதிகாரர்களின் சதுரங்கத்தில் வெட்டுப்படாமலும் நம்மைக் காத்துக் கொள்வோம்.

நன்றி : அ.சேவியர்

 

 
Watch the latest videos on YouTube.com