புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், தடுக்கும் முறைகள், சிகிச்சை பற்றிய தகவல்களைப் பரப்பவும், புற்றுநோய் தினம் இன்று ( பிப்ரவரி 4 ) அனுசரிக்கப் படுகிறது. "உலக புற்று நோய் எதிர்ப்புக் கழகம்" என்கிற அமைப்பு இதை முன்னின்று நடத்துகிறது.
புற்றுநோய் (Cancer) கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள்,சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
- புகையிலை பயன்படுத்தக்கூடாது.
- கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
- முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி - புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது. ஒரே கண்டிஷன், நோயைக் கண்டுபிடிப்பதிலும் சிகிச்சை தொடங்குவதிலும் தாமதம் கூடாது. இப்போது நிறையவே மருத்துவம் முன்னேறிவிட்டது. 'போட்டோவுக்கு மாலை போட்டுக் கண்ணீர் விடுவதுதான் முடிவு' என்று சீரியல்களிலும் சினிமாக்களிலும் காட்டுவது சமூக துரோகம்!
புற்றுநோயைப் பற்றிய சில தகவல்கள்.....
- இன்று மனித உயிர்களை பறிப்பதில் புற்றுநோய் க்குதான் முதலிடம்.
- உலகம் முழுவதும் 2005 இருந்து 2015 வரை புற்றுநோயால் இறக்கப் போவோரின் எண்ணிக்கை எட்டு கோடி
- சிகரட் பிடிப்பதினால் புற்றுநோய் வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 2008 ல் மட்டும் 170000 பேர்
- உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது மற்றும் சரிவிகித உணவு இல்லாதலால் மட்டும் சுமார் 200000 பேர் புற்றுநோய் வந்து 2008 ல் இறந்துள்ளனர்
- இந்தியாவில் புகைப் பிடிப்போரின் சதவிகிதம் 16%; அதில் ஆண்கள் 30% பெண்கள் 2.5%
தகவலுக்கு நன்றி...Here in Trichy, tamil Nadu...lots of cancer patiens are getting treated in G.V.N. INSTITUTE OF ONCOLOGY....and they have been doing lots of services for the poor people, by giving MEDICATIONS, FOOD, PLACE in one roof, depending upon the sevearity of the ailment...G.V.N. HOSPITALS IS ONE OF THE RENOWNED HOSPITALS IN THE TREATMENT OF CANCER CURE AND FOR OTHER GI DISORDERS...PRIMARILY DOING LOTS OF SERVICES ON THEIR OWN ,FOR POOR PATIENTS...FOR THE PAST 75 YEARS...NOW HEADED BY Dr K.GOVINDARAJAN,M.S.(GEN),MIS(GER & FRANCE)...A VERY SKILLED SURGEON, AND THE HOSPITAL HAS BEEN DOING LOTS OF RESEARCHES IN CANCER RELATED DISORDERS, AND PUBLIC AWARENESS PROGRAMMES ALONG WITH FREE CAMPS FOR THE NEEDY PATIENTS....out of my intrest...I have given details about G.V.N. HOSPITALS...and for them no advertisement required....Patients from All parts of Southern Tamil Nadu and even from KERALA are getting benefited, with their treatments...
ReplyDeleteThank you for your information!
ReplyDelete