Friday, February 20, 2009

போர் பயிற்சியில் கபில்தேவ்!

இந்திய பாதுகாப்பு படையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கவுரவ "லெப்டினென்ட் கர்னலாக' இணைந்த கபில் தேவ், டில்லியில் நடந்த ராணுவ போர் பயிற்சி முகாமில் உற்சாகமாக கலந்து கொண்டார். கடந்த 1983 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி, உலககோப்பை பெற்றுத் தந்தார் கபில்தேவ். சர்வதேச கிரிக் கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின், இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்பின் தலைவராக உள்ளார். நாட்டுப் பற்று கொண்ட இவர், ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். இதனை ஏற்றுக் கொண்ட, இந்திய ராணுவம் இவருக்கு கவுரவ லெப்டினென்ட் கர்னல்' பதவி வழங்கி பெருமை படுத்தியது. தீவிர பயிற்சி: பஞ்சாப் ரெஜிமென்ட் சார்பில் டில்லியில் நடந்து வரும் தரைப்படை வீரர்களுக்கான போர் பயிற்சி முகாமில் கபில்தேவ் நேற்று கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடக்கும் இம்முகாமில் துப்பாக்கி சுடுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் கபில்தேவ் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களாக போர் பயிற்சி முகாம் இங்கு நடந்து வருகிறது. இன்று இரண்டாவது நாள். போர் படை அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது புதிய அனுபவமாக உள்ளது. அவர் களது வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டு வருகிறேன். ராணுவத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒழுக்க முறைகளை, ஒரு விளையாட்டு வீரர் தெரிந்து கொள்வது நல்லது. இங்குள்ள நடவடிக்கைகளை பார்க்கையில், இப்போது கூட நான் கிரிக்கெட் விளையாடலாம் என எண்ணத் தோன்றுகிறது.

 இங்கு நான் போர் வீரனாக வரவில்லை. நாட்டை காக்கும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராணுவத்தில் இணைந்து உள்ளேன். ராணுவ உடை அணிந்தவுடன் புதிய உணர்ச்சி வருகிறது. பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதலும் கற்று கொண்டேன். இருப்பினும் துப்பாக்கி தூக்கும் கலாசாரம் சிறந்தது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 50 வயதில் ராணுவ பயிற்சி மேற் கொள்வது என்பது மிகவும் சிரமம். ஆனால் ஆர்வம் இருந் தால், எதையும் சாதிக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைக்காதது துரதிருஷ்டம் தான். ஆனால் எனது கனவு தற்போது மெய்யாகி உள்ளது. நான் ஒரு முழுமையான இந்தியக் குடிமகனாகி விட்டதாக கருதுகிறேன். ஒரு சமயத் தில் ஒரு வேலை தான் செய்ய வேண்டும். தற்போது நான் செய்யும் பணிகளில் மனமகிழ்ச்சியுடன் உள்ளேன். நாளைக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.இவ்வாறு கபில்தேவ் கூறினார். 

அரசியலுக்கு அழைப்பு:அரசியலில் சேரும்படி பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்பு வருவதாக கபில் தேவ் தெரிவித்தார். இவர் கூறுகையில்,"" பல அரசியல் கட்சிகள் என்னிடம் பேசி வருகின்றன. ஆனால் நான் அரசியல் வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து வருகிறேன். இப்போதைக்கு அரசியலில் இணையும் ஆர்வம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்," நல்ல மனிதர்கள் மட்டுமே அரசியலில் இணைய வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது,''என்றார்.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com