செய்தி: சேலத்தில் நடந்த உலக கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மாணவர் சாதனை புரிந்தனர்.சேலத்தில் நடந்த வேல்டுகப் 2009 க்கான வேல்டு ஆல்ட் மார்ஷியல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, கொரியா நாடுகளில் இருந்து மாணவமாணவிகள் பங்கேற்றனர்.
சப்ஜுனியர் 10 வயதுக்கான 20 முதல் 25 கி., பிரிவுக்கான கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மெட்ரிக்., பள்ளி மாணவர் ராகுல்பாபு ( கோல்டு மெடல்) முதலிடம், 16 வயதுக்கான ஜுனியர் 40 முதல் 45 கி., எடை பிரிவில் லூயிஸ்லெவல் மெட்ரிக்., உயர்நிலை பள்ளி மாணவர் மருதுபாண்டி(சில்வர் மெடல்) இரண்டாம் இடம், 40 முதல் 50 கி., எடை பிரிவில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகமதுபாசில் (சில்வர் மெடல்) இரண்டாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ராமநாதபுரம் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் ராஜாகுரன்சேதுபதி, செயலாளர் செல்லத் துரை அப்துல்லா, தலைமை பயிற்சியாளர் குகன், துணை பயிற்றுனர் பாலமுருகன், விளையாட்டு ஆசிரியர்கள் ரமேஷ் பாபு, ஜான்சன், கிழவன்சேதுபதி, நவநீதன், பிரபாகரன் பாராட்டினர்.
"கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் பணம், புகழ், போன்றவை எளிதாக கிடைத்து விடுகிறது. திறமை இருந்தால் முன்னேறலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் தடகளம், மல்யுத்தம், கிக் பாக்சிங் போன்ற விளையாட்டு வீரர்கள் திறமையும், கனவுகளையும் சுமந்து கொண்டு, சரியான பண உதவி, பயிற்சி இல்லாமல் தவிக்கிறார்கள்.
நம்மால் பண உதவி செய்ய முடியவில்லை என்றாலும், பாராட்டி உற்சாகப் படுத்தினால் இவர்கள் பிற்காலத்தில் சாம்பியன்கள் ஆவார்கள். தோனி, சனியா மிர்சா வகையறாக்களை பாராட்டுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், இவர்களையும் கொஞ்சம் கண்டு கொள்வோம்."
Go go gobi.
ReplyDeleteஇந்த பெற்றோருக்கு உதவுங்களேன்
ReplyDeleteநண்பர்களே நீங்க நினைச்ச உதவலாம். ப்ளீஸ் இந்த பதிவே உங்களால் முடிஞ்ச அளவு எல்லோருக்கும் அனுப்புங்க.