Wednesday, February 4, 2009

கதை ஒன்று... ஸ்டைல் நான்கு!!

காக்காய் நரி கதைதான் - காலம் மாற மாற நடை எப்படி மாறும் என்று எண்ணிப் பார்த்ததன் விளைவுதான் இது!

லோகத்திலே சகல ஜீவ ராசிகளும் க்ஷேமமாக ஜீவித் துக்கொண்டிருந்த காலம் அது. நத்தம்பட்டி நத்தம்பட்டி என்று ஒரு கிராமம். அங்கே கடைத் தெருவில் ஒரு ஏழைப் பாட்டியம்மாள் வடை சுட்டு விற்றுத் தன் ஜீவியத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது சனீஸ்வர பக வானின் வாகனமான காகம் அங்கு வந்து வடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு பறந்தது. கிராமத்திற்கு வெளியே அரச விருட்சம் ஒன்றில், சற்றே சிரம பரிகாரம் செய்து கொண்டு வடையை உண்ண லாம் என்று அமர்ந்தது.

அப்போது தந்திரங்களிலே வல்ல குள்ளநரி ஒன்று அவ் வழியே வந்தது. காக்கை தன் அலகில் வடை ஒன்று வைத் திருப்பதைக் கண்டது. உடனே அது சும்மாயிருக்குமோ? அது சும்மாயிருந்தாலும் அதன் குணம் அதைச் சும்மாயிருக்க விடுமோ?

''காகமே! பாட்டில் உனக்கு இணை யாரே உளர்! உன் சங் கீதத்தை நான் கேட்டு ஆனந் திக்கலாகாதா? என்னை சந் தோஷிக்க ஒரு பாட்டுப் பாடு வாயாக!'' என்று கேட்டது.

காகமும் புளகாங்கிதமுற்று ''தங்கள் சித்தம் என் பாக்கியம்'' என்று சொல்லிப் பாட ஆரம் பித்தது. வடை தரையில் விழ தந்திரசாலியான நரி அதைக் கல்விக்கொண்டு ஓடியது.

ஸ்தம்பித்து நின்றது காகம்!

து நத்தம்பட்டியோ நார்த்தம்பட்டியோ... அந்த விவாத-தர்க்க-வாதங்களுக்கு யாருமே முன்வராத ஒரு கால கட்டத்தில், அந்தக் குக்கிராமத் தின் ஒரு மூலையில்...

வாழ்க்கையின் விளிம்பைத் தொட்டுக்கொண்டிருந்த கிழவி ஒருத்தி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள்.

காலையிலே கடமை தவறா மல் கரைந்து ஊரையே உசுப்பி எழுப்பித் தங்கள் தங்கள் பணி களில் அவரவர்களை அனுப்பி வைக்கும் காக்கை ஒன்று பாட்டியின் இட்லிக் கடையி லிருந்து வடை ஒன்றினை மிக நாசூக்காக, நளினமாகக் கவ்விக்கொண்டு ஓடியது.

கிராமத்திற்கு வெளியே, சிறுவர்கள் திருட்டு 'தம்' அடிக்க வாகாக இருந்த ஓர் அரச மரத்தின் கிளையில் வந்து அமர்ந்தது அக்காகம். பலரை ஏமாற்றிப் பழக்கப்பட்டே உண்டு கொழுத்த வஞ்சக நரி ஒன்று அவ்வழியே வந்தது.

''காகமே! நீ இசையில் குயிலையும் மிஞ்சிவிடுவாயாமே? எங்கே, ஒரு பாட்டு பாடு!'' என்றது.

உள்ளம் குளிர்ந்த காகம் பாட ஆரம்பித்தது. இமைப் பொழுதில் வடை கீழே விழ, வடையுடன் நரி ஓட, அந்தப் பரிதாபக் காகம் ஏமாந்து நின்றது.

அதன் பார்வை, 'உலகமே இவ்வளவுதான்! சூதும் வாதும், போலியும் நீலியும், புளிப்பும் கசப்பும் நிறைந்தது தான்' என்பதைச் சொல்லா மல் சொல்லிற்று.

செர்ரி, ஆப்பிள் மரங்கள் நிறைந்த ஒரு ஸ்மால் வில்லேஜ் நத்தம்பட்!

அங்கே ஒரு ஓல்டு உமன் ஷூட் பண்ணிக்கொண்டி ருந்த (சுட்டுக்கொண்டிருந்த... ஹி..ஹி!) வடையை ஒரு டார்க் பிளாக் க்ரோ கவ்விச் சென்று, ஒரு மரத்தில் உட் கார்ந்தது.

அந்த வழியே ஒரு கன் னிங் ஃபாக்ஸ் வந்தது. அது க்ரோவிடம் இருந்த வடை யைப் பார்த்துவிட்டது.

''க்ரோ, க்ரோ! நீ எல்விஸ் பிரெஸ்லியைவிடப் பிரமாத மாகப் பாடுவாயாமே... கமான், ஸிங் எ ஸாங்!''

க்ரோ ரொம்ப ஹாப்பி யாகி ''ஓ.. ஷ்யூர்!'' என்று சொல்லிப் பாட ஆரம்பித்தது. வடை விழ, நரி அதை கபால் என்று கவ்விக்கொண்டு ரன்னிற்று.

புவர் க்ரோ, தான் இப்படி ஃபூலிஷாக நடந்துகொண் டோமே என்று பிறகு ரொம் பவும் ஃபீல் பண்ணிற்று!

(உங்கள் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் இதைக் கொடுங்கள். கம்ப்யூட்டர் கதையைச் சொல்லும்!)

கதையை





நன்றி : விகடன்

1 comment:

 
Watch the latest videos on YouTube.com