Friday, April 24, 2009

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்

ச்சினின் கிரிக்கெட் போலவே அவருடைய குடும்பப் பாசமும் நம்மை பிரமிக்க வைக்கிறது.

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள். பிறந்த நாள் அதுவுமாக தன்னுடையக் குடும்பத்தாரிடமிருந்து வந்த வாழ்த்துக்களை எண்ணி பூரித்துப் போகிறார் சச்சின். குறிப்பாக மனைவி அஞ்சலி மீதும் மகள் சாரா மீதும் சச்சின் காட்டும் அன்பு அலாதியானது. மனைவி சொல்லே மந்திரம் என்கிறார் சச்சின். அவளில்லையேல் அணுவும் அசையாது என்றும் சொல்கிறார் (ஆஹா என்ன அன்பு, எத்தனை அன்பு!).

சச்சினைக் கண்டாலே அலறும் உலகப் பந்துவீச்சாளர்கள் அவருடைய மறுபக்கத்தை அறிந்தால் ஆச்சர்யப்படுவார்கள். கிரிக்கெட்டை தவிர்த்து சச்சினின குடும்பப் பிணைப்பைப் பற்றி அறியும்போது நமக்கும் ஆச்சர்யம் வருகிறது.கிரிக்கெட் நுணுக்கங்களைப் போல குடும்ப நுணுக்கங்களான அன்பு, பாசம், அக்கறை, நகைச்சுவை எல்லாம் கலந்து கட்டியவர் சச்சின்.பேட்டால் பந்தை அடித்து ரன்களைக் குவிக்கும் சச்சின், அன்பால் மனங்களை அடித்து அதே அன்பை நிறையவே பெறுபவர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சச்சின். மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் அமர்ந்திருந்த சச்சினை மேடைக்கு அழைத்தனர். மேடையில் ஏறி மைக் பிடித்த சச்சின், முன்வரிசையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த மனைவி அஞ்சலியைப் பார்த்து சிரித்தபடியே,

”வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். ஆனால், என்னைப் பொருத்த வரை, அவள் பின்னால் இல்லை எனக்கு முன்னால் இருக்கிறாள்” என்றாரே பார்க்கலாம்.மனைவி குறித்த சச்சினின் இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.அதேசமயம் சச்சின் தன்னுடைய வெற்றியின் பின்னால் மனைவி மட்டுல்லாமல் மற்றும் இரண்டு பெண்களுக்கு இடமுண்டு என்றார்.

”என்னுடைய மன உறுதிக்கு அஞ்சலிதான் தூண். நான் தொய்வடையும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பவள் அவள். அதன் பிறகு என்னுடைய அம்மா. இவர்கள் இருவரும்தான் என் வாழ்க்கையின் பெரும்பான்மை பகுதியை ஆள்பவர்கள். மேலும் தற்போது அந்த குரூப்பில் என் குட்டி மகள் சாராவும் சேர்ந்துவிட்டாள்” என்றார்.சச்சின் தன்னுடைய பிறந்தநாளுக்கு வந்த பரிசுகளில் உச்சி முகர்வது மகளும் மகனும் தங்கள் கைகளால் செய்து அனுப்பிய வாழ்த்து அட்டைகளைத்தான்.

”அவர்களுடைய அன்பையும் அக்கறையையும் பார்க்கும்போது தந்தையுடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அதேநேரம் மனைவியின் வாழ்த்தும் எனக்கு முக்கியமானது” என்கிறார் சச்சின்.அவருடையப் பிறந்தநாளின்போது நடந்த மறக்க முடியாத ஒன்றைப் பற்றி கேட்டால், ”1998 ஏப்ரல் 24ஆம் தேதி சார்ஜாவில் நடந்த  ட்ரைஆங்குலர் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் அடித்த சதம் அணியின் வெற்றிக்கு உதவியது” என்று நினைவுகூர்கிறார்.

உங்கள் எதிர்கால கனவு என்ன என்றால், ”நம்மை மறந்து உறங்கும் போதுதானே கனவு வரும்?” என்று கலாய்ப்பவர், ”உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்று சொல்கிறார்.சச்சின் சகலகலா வல்லவர்தான். பின்னே, என்னதான் மாபெரும் சாதனையாளராக இருந்தாலும் வீட்டில் பொண்டாட்டி மனம் கோணாமல் நடந்துகொள்ள ஆம்பளைக்கு தனித்தகுதி வேண்டாமா என்ன?

நன்றி : தமிழ்வாணன்


Thursday, April 23, 2009

தேர்தல் காமெடி

பின்னுறாரு விஜய டி.ஆரு!

கடந்த 16-ம் தேதி... ல.தி.மு.க. (அதாங்க லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்...என்ன லட்சியம்னு ஆராய்ச்சியெல்லாம் நடத்தக் கூடாது!) தலைவரான விஜய டி.ராஜேந்தர் பிரஸ் மீட் வச்சிருந்தார்.பத்திரிகைகள்தான் அவரை வச்சு காமெடி பண்றாங்கன்னா, அவரே அவரைப் பத்தி காமெடி பண்ணிக்கிறதை எங்கே போய் சொல்றதுன்னே தெரியலை!

''நாங்க கூட்டணி சம்பந்தமா முதல்ல சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான சரத்குமார்கிட்ட பேசினோம். அப்புறம் நாடாளும் மக்கள் ('நாம') கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக்கோட பேசினோம். புதிய தமிழகம் கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி யோடவும் பேசினோம். ஆனாலும், யாரும் எங்க கூட்டணிக்கு ஒத்துவரலை.

பி.ஜே.பி. , ம.ம.க-னு அவங்க மூலைக்கு ஒருத்தரா பிரிஞ்சு போயிட்டாங்க. கூட்டணிக்கு ஆள் கிடைக்கலைங்கிறதுக்காக நாங்க சும்மா இருக்க முடியுமா என்ன..? இந்தத் தேர்தல்ல அஞ்சு தொகுதியில ஆள் நிறுத்திட்டேன்ல. நானும்கூட போட்டியிடறேன். ஆள் கிடைச்சா எட்டு தொகுதிகள்ல போட்டியிடுற ஐடியாவும் இருக்கு... எப்படி நம்ம செயல்பாடு?!'' - இதாங்க டி.ஆரோட ஒளிவு மறைவில்லாத பேச்சு! என்னதான் காமெடி பண்ணினாலும் இப்படி தடாலடியா பேசவும் ஒரு தில்லு வேணும்தானே!

'ஆரம்பமே அபசகுனமா இருக்கே..!''

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காலையில் முதல் ஆளாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார் ஷாஜகான். அவர் கையெழுத்துப் போடப்போன நேரம் பார்த்து மின்சாரம் தடைப்பட, ''ஆரம்பமே அபசகுனமாஇருக்கே... ஒருவேளை தோத்துப் போயிடுவோமோ...'' என்று உடன் வந்தவர்களிடன் கவலையோடு கேட்டார்.''அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீங்கதான் எம்.பி. தைரியமா கையெழுத்துப் போடுங்க!'' என்று அவர்கள் உற்சாகமூட்ட, கையெழுத்துப் போட்டார் ஷாஜகான்.

வெளியே வந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ''போன நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டி போட்டு எட்டாயிரத்து சொச்சம் ஓட்டு வாங்கினேன். காதலர்களின் நலனுக்காக அப்போ நான் நல்ல பல திட்டங்களை அறிவிச்சதால, காதலிக்கிறவங்க எல்லோருமே எனக்கு ஓட்டுப் போட்டாங்க. இந்த முறையும் பிரசாரத்தில் கட்டாயம் நான் காதலர்களுக்குக் குரல் கொடுப்பேன். அதேபோல 'வேலைக்குப் போறவங்க எல்லோருமே ஒருநாள் வேலையை விட்டுட்டுத்தான் ஓட்டுப் போட வர்றாங்க. அதனால அந்த இழப்பை சரிக்கட்ட ஓட்டுப் போடும் மக்களுக்கு அலவன்ஸ் குடுக்கணும். இப்படி பணம் கொடுப்பதால், மக்கள் ஆர்வத்தோடு ஓட்டுப் போட வருவாங்க. இந்தக் கோரிக்கையை நான் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியிருக்கேன். அவங்க நடவடிக்கை எடுக்கலைன்னாலும், நான் ஜெயிச்சு நாடாளுமன்றம் போனதும் கண்டிப்பா குரல் கொடுப்பேன்!'' என்று அசத்தினார்.


சரத் குமார் கட்சி வேட்பாளர் எஸ்கேப்!  

சரத்குமாரின் ச.ம.க சார்பில் ஸ்ரீ பெரும்பதூர் தொகுதியில் 'ராவணன்' (!) ராமசாமி என்பவர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப் பட்டது. கடைசி நாள் கூட மனு தாக்கல் செய்ய வரதாவரிடம் ஏன் என்று கேட்ட பொது, நான் கட்சியிலேயே இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட விலகிவிட்டேன் என்று 'குண்டை' தூக்கி போட்டார்!


டெல்லிக்கு டவுன் பஸ்!

தஞ்சாவூர் தொகுதியில சுயேச் சையா போட்டியிடுற சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரான கனக ராஜா, வேட்பு மனுத்தாக்கல் பண்ணிய உடனே, பிரசாரத்தை ஆரம்பிச்சிட்டார். கலெக்டர் ஆபீஸ் வாசல்ல நின்ன பொதுமக்கள்கிட்ட, ''நான் ஜனாதிபதி தேர்தலுக்கே போட்டியிட்டவன். அஞ்சு தடவை பார்லிமென்ட் தேர்தலிலும், ஆறு தடவை சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கேன். அதனால மக்களோட எல்லா பிரச்னைகளும் எனக்கு அத்துப்படி. நான் எம்.பி. ஆனேன்னா தஞ்சாவூர்லேர்ந்து டெல்லிக்கு டவுன் பஸ் விடுவேன். விளையாட்டுக்குச் சொல்லலை... உங்கள்ல எத்தனை பேரு டெல்லியை நேர்ல பார்த்திருக்கீங்க? இந்த மாதிரி யெல்லாம் யாராச்சும் உங்ககிட்ட அக்கறையா என்னிக்காவது விசாரிச்சிருக்காங்களா?'' என சீரியஸாகப் பேசிக்கொண்டே போனார். கேட்டவர் களுக்குத்தான் கிர்ர்ர்ரு!

நன்றி : ஜு.வி

Sunday, April 19, 2009

அரசு பள்ளி , பெண்கள், அடிப்படை வசதி ?

இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த 'நாஞ்சில் நாடன்' கட்டுரை மிகவும் பாதித்தது. பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் மாதவிடாய் காலத்தில் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லாமல் தவிப்பதை பற்றி எழுதி இருந்தார். நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படித்தவன். அந்த மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை இருந்தது. பத்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் மட்டுமே. மற்ற இரு வகுப்புகளும் ஆண்- பெண் என இரு பாலருக்குமாக இருந்தது. ஆனால் எல்லா நேரமும் வகுப்பறையில் மாணவியர் இருக்க மாட்டர்கள். அவர்களுக்கென்று தனியாக ஒரு அறை. அந்த அறையிலிருந்து பாடம் நடத்தும் வகுப்பரைக்கோ, ஆய்வுக் கூடங்களுக்கோ வந்து போவர். வகுப்பறையில் பெஞ்ச் பற்றகுறையினால் பல மாணவியர் தரையில் தான் அமருவார்கள். 

பெண்களுக்கு அந்த பள்ளியில் பல பிரச்சனைகள். ஆண்கள் பள்ளி என்பதால் எங்கு பாத்தாலும் பசங்கதான். அதிலும் நாலஞ்சு வருஷம் பெயிலாகி ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்கள் கொடுக்கும் தொல்லைகள் அதிகம். ஒருமுறை ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த ஒருவன் மாணவியர் அமரும் அறையின் முன் ஒரு காதல் கடிதத்தை வைத்து விட்டு வந்து விட்டன். இந்தப் பார்த்த உதவி தலைமை ஆசிரியர், அவனை கண்டித்து அனுப்பி விட்டார். அதற்கப்புறம் மாணவியர்களுக்கு பல கட்டுப்பாடுகள். பசங்களிடம் பேசக் கூடாது; அருகருகே (!) நடந்து செல்லக் கூடாது...
வகுப்பறையில் அவர்கள் படும் கஷ்டம் இன்னும் கொடுமை. கேள்வி கேட்கவோ, வகுப்புக்கு பின் ஆசிரியர்களை சந்தித்து சந்தேகம் கேட்கவோ மிகவும் தயங்குவார்கள். ஒரு புத்தகமோ, வினாத்தலோ, லேப் ரிப்போர்ட் ஒ மாணவர்களிடமிருந்து வாங்க படாத பாடு படுவார்கள்.
கழிப்பறை இன்னும் கொடுமை. மாணவர்களுக்கென்று தனியாக கழிப்பிடம் கிடையாது. பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு சென்று, எதாவது ஒரு மரத்தை பிடித்துக் கொள்வார்கள். கிட்டத்தட்ட 500 மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு சிறிய இடம் தான். 100 மீட்டர் வரை நாற்றம் வீசும். பெண்களுக் கென்று ஒரு சுவர் வைத்த, ஐந்தாறு பேர் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறு கழிப்பறை உண்டு (ஆசிரியைகளுக்கும் அது தான்). பெண்கள் அறையிலிருந்து கழிப்பறை செல்லவே 15 நிமிடம் ஆகிவிடும். மாணவர்கள் வகுப்பறையை தாண்டி செல்ல வேண்டும். சில சமயம் கழிப்பறைக்கு அருகில் இருந்த சிறு மைதானத்தில் கோ -கோ விளையாண்டுக் கொண்டுஇருப்பர்கள். கஷ்டம் தான்....சில நேரங்களில் வகுப்பறையிலிருந்து இரண்டு மாணவிகள் மட்டும் வெளியேறும் போது, மாணவர்களிடம் ஒரு சிறு சலசலப்பு இருக்கும். என் செல்கிறார்கள் என்று தெரிந்தாலும், அதை கிண்டல் செய்வார்கள். இது மாதிரி பலபல பிரச்சனைகள்..இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் மாணவியர் அதிக சதவிகிதம் தேர்ச்சி பெறுவர்.

இதை நினைக்கும் பொழுது நாஞ்சில் நாடனின் இந்த வரிகள் மிகவும் உண்மையனதகவே தோன்றுகிறது.

"உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் இருந்தால், நடந்து போய் வரும் தூரத்தில் இருந்தால், துணைக்கு வேறு பெண்களும் இருந்தால், தொடர்ந்து படிப்பார்கள் சிலர். அவர்களில் பலர், படிப்பில் தோளுக்கு இணையாக ஓடிவரும் கெட்டிக்காரிகளாக இருந்தும்கூட பள்ளி தாண்டி, கல்லூரி நுழைந்தது இல்லை. அவ்விதம் படிப்பை இடையில் முறித்துக்கொண்டு, சில ஆண்டுகள் வீட்டில் அடைந்து, சமையலும் பிற வீட்டு வேலைகளும் தேர்ந்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்று வளர்க்கப் போனார்கள். அவ்வாறு போனதன் காரணம் குடும்ப கௌரவமோ, சாதி மரியாதையோ, கற்பு காத்தலோ, படிக்கவைத்தால் சமமான மாப்பிள்ளை தேட வேண்டும் என்ற கவலையோ மட்டும் அல்ல என்று எனக்கு இப்போது தோன்றுகிறது."

Saturday, April 18, 2009

மும்பை சென்னை - ஹை லைட்ஸ்


மும்பை பேட்டிங்:



சென்னை பேட்டிங்:


Friday, April 17, 2009

லட்சுமன், திராவிடை அடுத்து கங்குலி!


ட்சுமன், திராவிடை அடுத்து கங்குலி தனது கேப்டன் பதவியை இழந்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடெர் புதிய காப்டனாக McCullum நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த வருடம் ஐபிஎல் உருவான போது, மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஸ்மன், சேவாக் போன்றோர் அவர்கள் சார்ந்த மாநிலங்கள் உள்ள அணிக்கு தலைமை பொறுப்பேற்றனர். அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. டிராவிட் ,லக்ஸ்மன் போன்றோர் எல்லாம் இந்த வேகமான ஆட்ட முறைக்கு தங்களை மாற்றிக் கொள்வதே சிரமம்; இதில் அணியை வேறு முன்னின்று வழிநடத்த வேண்டும் என்றல் அது சிரமம் தான். விமர்சனங்களை உண்மையாக்கும் வகையில், இவ்விருவரும் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப் படித்தியதோடு, அணியையும் வழிநடத்த முடியாமல் திணறினர். அதனால், இந்த வருட ஐபிஎல் தொடருக்கு டிராவிட், லக்ஸ்மனுக்கு பதிலாக பீட்டர்சனும், கில்லியும் காப்டனாக இருப்பார்கள் என்று அறிவிக்கப் பட்டது.

கொல்கத்தா அணியின் உரிமையாளர் , ஷாரூக், கங்கூலியின் மீது அதிருப்தியில் தான் இருந்தார். ஆனால், அவரை நீக்கினால் ரசிகர்கள் ரகளை செய்வார்கள், கொல்கட்டாவில் போட்டிகளை நடத்தமுடியாது என்பதினால் அமைதியாக இருந்தார். அணியின் பயிற்சியாளர் Buchanan மூலம் 'சுழற்சி முறையில் கேப்டன்' என்ற புதிய முறையை அறிமுகப் படுத்தினர். இது கங்குலியை ஓரம் கட்ட நடக்கும் வேலை என்பது தெரிந்தாலும், ஷாருக் கங்குலியை மற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார்.கடைசியாக என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென்று கங்குலி கேப்டன் பொறுப்பிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.இந்த முடிவு என்ன பொறுத்தவரை தவறானதே. கங்குலி ஒரு சிறந்த தலைமை பண்புள்ளவர். ட்வென்டி- ட்வென்டி ஆட்ட முறைக்கு ஏற்ப ஈடு கொடுத்து ஆடக்கூடியவர்.(கடந்த ஐபிஎல்'இல் பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தியது நினைவிருக்கலாம்). அணியில் பல 'தலைகள்' இருக்கும் போது அவர்களை எல்லாம் வழிநடத்தி செல்ல தகுதியுள்ளவர்.அவர் காப்டனாக இல்லாதது அணிக்கு பின்னடைவே! இந்த முறையும் அணி தோற்றால், அடுத்து ஷாரூக் பயிற்சியாளரை தூக்குவார என்று தெரியவில்லை. இப்படியே போனால் கடைசியில் அவர் மட்டும் தான் மிஞ்சுவார்.
இந்த முடிவு சரியானதா, தவறானதா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Wednesday, April 15, 2009

தேர்தலில் போட்டியிடும் ‘டிராஃபிக்’ ராமசாமி!


வெள்ளைச் சட்டை - காக்கி பேன்ட்; அகலக் கறுப்புக் கண்ணாடி; சட்டைப் பாக்கெட்டுகளில் கத்தைகத்தையாகப் பேப்பர்கள்; ஆறேழு பேனாக்கள்; கையில் ஒரு விசில்; பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கேமரா; எந் நேரமும் பாதுகாப்புக்கு ஏ.கே-47 இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு காவலர் என வீதிகளில் கூட்டத்தில் ஒருவராக உலவுகிற இவர்... ‘டிராஃபிக்’ ராமசாமி!
வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர் வரை யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பொதுநல வழக்குகளை ஏவி வருபவர்,  கே.ஆர். ராமசாமி என்ற டிராஃபிக் ராமசாமி. தள்ளாத வயதிலும் தளராமல்போராடும் இவர் மீதும் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். அப்படியும் ஜாமீனில் வெளியே வந்ததும் புதுத் தெம்புடன் கேஸ் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு நீதிமன்றப் படிகளை ஏறத் தொடங்கி விடுவார். தற்போது கூட வக்கீல்களின் உண்ணாவிரதத்தை எதிர்த்து வழக்கு போட சென்றவரை , ஒரு ரவ்டி வக்கீல்கள் கும்பல் அடித்து நொறுக்கியது.
 
இருந்தாலும் விடாமுயற்சியாக தன் பணியை செவ்வனே செய்துகொண்டு வரும் இவர், இப்பொழுது "தேசிய ஜனநாயக கட்சி' என்ற கட்சியை ஆரம்பித்து வட சென்னை, மதிய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். மத்திய சென்னை யில் - வசீகரன், வட சென்னை யில் - சந்தோஷ்குமார் மற்றும் தென் சென்னையில் ராமசாமி ஆகியோர் போட்டி இடுகின்றனர்.

ஜு.வீ க்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து:
'மக்கள் பிரச்னைகளுக்காக நான் போரா டுறது புதுசு இல்லை. டிராஃபிக்லருந்து முதலமைச்சரின் பாதுகாப்பு பிரச்னைகள் வரை எத்தனையோ விவகாரங்களை கையிலெடுத்துப் போராடி இருக்கேன். சட்டரீதியா தண்டனைகளையும் வாங்கிக் கொடுத்திருக்கேன். ஆனாலும், சென்னையில நாளுக்கு நாள் பிரச்னைகள் பெருகிட்டு இருக்கே தவிர... யாரும் தவறு செய்ய அச்சப் படுறதே இல்லை. மக்கள் பிரதிநிதிகளா தேர்ந்தெடுக்கப்படுறவங்களும் 'சம்பாரிச்சா போதும்... சொத்து சேர்த்தால் போதும்'னு நினைச்சு மக்களை மறந்துடுறாங்க. இதையெல்லாம் இனியும் வேடிக்கை பார்க்கத் தயா ரில்லை. அதனாலதான் இப்படி இறங்கிட்டோம். நாங்க சொல்ற கருத்துகளை ஆமோதிச்சு ஏத்துகிற மக்கள் கூல்டிரிங்க்ஸ், டீ, பிஸ்கட் வாங்கிக் கொடுக்கிறாங்க. கஷ்டங்கள்ல அல்லாடுற மக்களோட ஓட்டு கண்டிப்பா எங்களுக்குக் கிடைக்கும்கிற நம்பிக்கை இருக்கு. அதனால வெற்றிக் கனவுல மிதக்கிற பெரிய கட்சிகள் திண்டாடுற நிலை எங்களாலேயே உருவாகும்.

உண்மையான ஹீரோவான இவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, எதிர் காலத்தில் பல நல்லவர்கள் அரசியலுக்கு வர இது வழி வகுக்கும்.

நன்றி : ஜூ வி

Monday, April 13, 2009

தென்சென்னை சுயேச்சை வேட்பாளர்

தென்சென்னையில் 'முன்னேற்ற' கழகங்களுக்கு போட்டியாக ஒரு சுயேச்சை வேட்பாளர் களம் இறங்கி உள்ளார். பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்தவர், நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். மாதம் இலட்சக் கணக்கில் சம்பளம் தரும் வேலைகளை உதறி தள்ளிவிட்டு சொந்தமாக இட்லி கடை நடத்துபவர், வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்தவர், 'யூத் ஐகான்' விருது பெற்றவர்......

அவர் 'சரத்பாபு' என்ற 29 வயது இளைஞர். சென்னை, மடிப்பாக்கத்தில் பிறந்து, குடிசையில் வளர்ந்து பல இன்னல்களுக்கு நடுவில் கல்வி பயின்று, இன்று சொந்த காலில் நிற்கும் இந்த இளைஞர், தன் மக்களுக்காக சேவை செய்ய தேர்தல் களத்தில் குதித்துள்ளார். அரசியல் எல்லாம் ரவுடிங்க பண்ற வேலை, இந்தியாவ திருத்த முடியாதுன்னு சொல்லிக்கிட்டு அமெரிக்க வில போயி, ஒபாமா புகழ் பாடற கும்பல் ஒரு பக்கம். எப்படியாவது இந்தியா மாறதா? யாராவது ஒரு நல்லவன் வந்து எல்லாத்தையும் மாத்திட மட்டான? ன்னு புலம்பிகிட்டு, வலைப்பதிவிலையும், ஒர்கிட்லயும், அயோக்யத்தனம் பண்ற அரசியல் வாதிகளை திட்டிகிட்டு பொழுதைக் கழிக்கிற கும்பல் ஒரு பக்கம். இதுக்கு நடுவில படிச்ச சிலர்தான், இந்த மாதிரி துணிஞ்சு முயற்சியாவது எடுக்கறாங்க. அரசியல் பலம், பண பலம் ன்னு எதுவுமே இல்லாம, மக்களை மட்டுமே நம்பி வர இவங்கள , மக்கள் கூட சில சமயம் கைவிட்டர்ரங்க!(லோக் பரிதன் ன்னு கட்சி ஆரம்பிச்ச ஐ ஐ டி மாணவர்கள் , போன தேர்தலுக்கு அபாரம் என்ன பன்றங்கன்னே தெரியல).

இந்த தடவை அதுமாதிரி நடக்காம , நல்ல வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது நம்ம கடமை. அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் இவரை மக்களிடம் கொண்டு செல்ல நாம் உதவ வேண்டும். இவர் போட்டியிடும் தென்சென்னையில் தொண்ணுறு சதவிகிதம் படித்தவர்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். இதில் பாதி பேர் ஓட்டுப் போட்ட கூட போதும். சரத் ஜெயிக்கலாம். மாற்றம் வருமா என்று பார்க்கலாம்!

Friday, April 10, 2009

அயன் - விகடன் விமர்சனம்

திருட்டு விசிடி, தங்க பிஸ்கட், வைரம் என்று சர்வதேச அளவிலான கடத்தல் நிபுணராகி வாழ்க்கையைச் சாகசமாகக் கடத்துபவனே அயன்!

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தாலும், கடத்தல் சாகசங்கள் மீதுதான் சூர்யாவுக்கு அதீத ஆர்வம். ஆப்பிரிக்காவின் காங்கோ வரை வேர் பரப்பிக் கிளை விரித்து வைரங்களைக் கடத்தும் பிரபுவிடம், விசுவாச ஊழியராக இருக்கிறார். பிரபுவுக்கு எதிரியான வில்லன் அவருடைய கடத்தல் கம்பெனியைக் காலி செய்ய அடுத்தடுத்து சதித் திட்டங்கள் தீட்டுகிறார். அதிலிருந்து பிரபுவும் சூர்யாவும் தப்பிக்கிறார்களா என்பது கிளைமாக்ஸ். கடத்தல், பிளாக் மார்க்கெட் உலகின் வெளிச்சம் படாத பக்கங்களைப் பிடித்து பரபர, விறுவிறு ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

குறும்புக் காதலன், சின்ஸியர் ஸ்மக்ளர், தோள் கொடுக்கும் தோழன் என அத்தனை அம்சங்களிலும் 'பார்யா' என்று அசரவைக்கிறார் சூர்யா. பீட்டர் இங்கிலீஷ் பீலா, கஸ்டம்ஸ் அதிகாரிகள் கிழித்த ஷூவைக் கேட்டு அடம்பண்ணுவது, ஆக்ஷன் காட்சிகளில் பொளேரெனப் பொளப்பது என ஸ்க்ரீனில் தட்டுப்படும்போதெல்லாம் தடாலடிதான். காட்ஃபாதர் வேடத்தில் பிரபு அத்தனை கச்சிதம். ஆவேசமான சூர்யாவை அடக்குவதும், போலீஸ் ஸ்டேஷனில் அவரே வெடித்துத் துடிப்பதுமாக, தான் நடிப்பிலும் சீனியர் என்பதை நிரூபிக்கிறார். கட்டடங்கள், ஜன்னல்கள், கூரைகள், நெருக்கடியான வீதிகளில் ஆள் மாற்றி ஆள் மாற்றி வைரம் கைமாறிக்கொண்டே இருக்க, ஒவ்வொருவரையும் விடாமல் சூர்யா தொட்டுத் துரத்திப் பிடிக்கும் காங்கோ ரேஸிங் சண்டைக் காட்சி நம்மையே மூச்சு வாங்க வைக்கிறது. 'கடவுள் பாதி, மிருகம் பாதி' ஜெகன், 'நண்பன் பாதி, துரோகி பாதி'யாகத் தூள் கிளப்பியிருக்கிறார். அழகிய பார்பி பொம்மை ஷோ கேஸில் 'சும்மாச்சுக்கும்' இடம் பிடித்திருப்பது போல, தமன்னா படத்தில் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களிலாவது அம்மணி நடிக்கலாம்.

விழி மூடி யோசித்தால்' பாடலில் விழி மூடி ரசிக்க வைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், 'நெஞ்சே நெஞ்சே... நீ எங்கே?' என்று உள்ளுக்குள் கிடார் மீட்டுகிறார். ஆனால், காட்சிகளுக்குச் சம்பந்தமில்லாத அவரது பின்னணி இசை படுத்தியெடுக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆச்சர்யமாகப் பலப் பல நாடுகளுக்குக் கதை பயணித்தாலும் அது திணிப்பாகத் தெரியாமல் கதைப் போக்கோடு இணைந்து பயணிக்கிறது. எம்.எஸ்.பிரபுவின் கேமரா காங்கோ, சென்னை, மலேசியா என்று ஏரியாக்களின் அழகை ஒரிஜினாலிட்டி கெடாமல் சுட்டு வந்திருக்கிறது. சேஸிங் காட்சிகள், வைரங்களை எடுக்க வயிற்றைக் கிழிப்பது என ஆங்காங்கே உலக சினிமா தட்டுப்பட்டாலும், உள்ளூர் கலருடன் ஒரு கடத்தல் சேஸிங் கதையை டெக்னிக்கலாக விவரித்திருப்பது படத்தின் சுவாரஸ்ய பிளஸ்.

ஆனால், ஒரு அழுக்கு குடோன், மூன்று இளைஞர்கள், ஒற்றை கார் வைத்துக்கொண்டு பிரபு கோடிகளில் டீலிங் செய்வது கொஞ்சம் பலமாகவே உதைக்கிறது. சூர்யா வுக்கும் தன் தங்கை தமன்னாவுக்கும் இடையேயான சந்தோஷ சல்லாபங்களுக்கு ஜெகன் மெனக்கெடுவது, சூர்யா ஜெகனின் வீட்டை, 'பலான வீடோ?' என்று சந்தேகப்படும்போது, 'அவன் உன்னை 'அயிட்டம்'னு நினைச்சுட்டான்டி!' என்று ஜெகன் சிரித்து ரசிப்பது எல்லாம் ரொம்பவே ஓவர் சாரே!


இரண்டாம் பகுதி முழுக்க அம்மா அன்பு, ஜெகன் கொலை, வில்லனின் துரத்தல், வில்லனின் மரணம் என பாதி ரீல் ரீ-வைண்டிங்லேயே ஓடுகிறதே! இத்தனை ஆக்ஷன் கதைக்குத் தேவையான டெம்போவை ஒரு பவர்ஃபுல் வில்லன்தான் முழுமையாக்க முடியும். ஆனால், வில்லனாக வரும் ஆகாஷ் தீப் தனது தொழில் எதிரிகளான பிரபு - சூர்யாவுக்கு டார்ச்சர் கொடுப்பதைக் காட்டிலும் நம்மையே அதிகம் கொல்கிறார். என்னதான் சூர்யா மாஸ்டர் மைண்டாக இருந்தாலும் கஸ்டம்ஸ் அதிகாரியான பொன்வண்ணன் அவருக்காகக் கை கட்டி காத்திருந்து அவரது உத்தரவுகளுக்கு 'ஆகட்டும் எஜமான்!' என்று செயல்படுவதும் டூ மச். (சுங்கத் துறை அதிகாரிகள் சங்கம் வைத்திருந்தால் சங்கடம்தான்!) உலகின் சகல மூலைக்கும் சவாரி அடிக்கிற ஒருவன் தம்மாத்தூண்டு வீட்டில் வசிப்பதும், அவன் அம்மா பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பதும்... போங்க, ரொம்பத்தான் குறும்பு!

காட்சிகளை லாஜிக் மீறாமலும் புத்திசாலித் தனமாகவும் அமைக்க மெனக்கெட்டு இருப்பதற்குப் பாராட்டுக்கள். ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் ஓவர்டோஸ் அலர்ஜி ஏற்படுத்துவதுதான் அயனின் பின்பாதி 'பயன்'!

 நன்றி : ஆ.வி

Thursday, April 9, 2009

பட்டனை கழற்று!

டந்த வாரம் 'லக்மே ஃபேஷன் வீக்' நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்டு பிரபல ஜீன்ஸ் ரெடிமேட் நிறுவன விளம்பரத்துக்காக 'கேட் வாக்' நடை போட்டார். பிறகு அப்படியே, கீழே இறங்கிமுன் வரிசையில் அமர்ந்திருந்த தன் மனைவி 'டிவிங்கிள் கன்னா'வின் முன்பாக நின்றவர், ஜீன்ஸ் கம்பெனியின் லேட்டஸ்ட் தாரக மந்திரமான 'ஜீன்ஸின் பட்டனைக் கழட்டு' என்று சைகை செய்தார். இதற்கு வெட்கப்பட்டு டிவிங்கிள் மறுக்க (அதுவும் டிராமா?)... மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார் அக்ஷய். வேறு வழியின்றி டிவிங்கிள் பட்டனை கழற்றிய பிறகே, திரும்பி மேடை ஏறினார் அக்ஷய். ஏராளமான பார்வையாளர்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என பிரச்னை கிளப்பத் திட்டமிட்டது சிவசேனா. ஆனால், 'பட்டனைக் கழற்றியது அவருடைய மனைவிதானே' என அக்ஷய் தரப்பிலிருந்து பதில் தந்து இதை 'குடும்ப' விவகாரமாக்கிவிட... இது தேர்தல் சமயத்தில் எடுபடாது என விவகாரத்தை கழற்றிவிட்டதாம் சிவசேனா. இதற்கிடையில், இந்த அநாகரிக செயல் வெளிப்படையாக நடந்ததால், அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் சிலர் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து அக்ஷய் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.


எப்படியோ! 'நல்லா' விளம்பர படுத்திட்டாங்க

நன்றி : ஜூவி


Tuesday, April 7, 2009

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) என்பது வாக்கைப் பதிவு செய்யும் வசதியளித்து, அப்பதிவைச் சேமித்து, பின்னர் வாக்குப்பதிவின் இறுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஓட்டுச் சீட்டு அடிப்படையிலேயே, தேர்தல் நடைமுறைகள் துவங்கின. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கடந்த சில தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்ததன் அவசியம் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்வோம். பல கோடி மக்கள் பங்கேற்ற இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகளால் ஏற்பட்ட கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் தடுக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின் னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகின்றன. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்படுத் தப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஒரு ஓட்டுச்சீட்டு மட்டுமே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது.

இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு யூனிட், ஓட்டுப்பதிவு யூனிட் என இரு யூனிட்களை கொண்டது. கட்டுப்பாட்டு யூனிட் தேர்தல் அதிகாரி இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு யூனிட் வாக்காளர் ஓட்டளிக்கும் இடத்திலும் இருக்கும். இந்த இரு யூனிட்களும் ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக் கும். ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக் கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத் தானை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய் யும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப் பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத் தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற் கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். 'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும். இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித் திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட் பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

விளக்க படங்கள்:

  


நன்றி : http://ta.wikipedia.org/விக்கி, www.eci.gov.in/

Sunday, April 5, 2009

இந்தியா ஏழை நாடா?

சுவிச்லேர்லாந்து சாக்லேட்டுக்கும், Cheese க்கு மட்டும் அல்ல, ரகசிய  வங்கி கணக்குகளுக்கும் பெயர்போனதே. உலகத்தில் உள்ள அணைத்து திருடர்களின் கருப்பு பணங்கள் பத்திரமாக வைக்கப் பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலகில் நிலவும் பொருளாதார மந்த நிலையினால் பதிக்கப்பட்ட அமெரிக்க புது முடிவை எடுத்துள்ளது. அதன் படி சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் வைத்திருப்பவர்கள், தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டு சரியான வரி செலுத்தினால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அதோடு இல்லாமல் சுவிஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அமெரிக்கர்கள் வைத்திருக்கும் ரகசிய வங்கி கணக்குகளை தருமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே ஒரு சுவிஸ் வங்கி அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, வங்கிக் கணக்குகளை தருவதாகவும், இத்தனை நாள் மறைத்து வைத்ததற்காக அபராதமும்  கட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகளும் தங்கள் குடிமக்களின் வங்கி கணக்குகளை கேட்க முன்வந்துள்ளது. 

இந்த நேரத்தில் தான் இந்தியாவிலும் இந்த பிரச்சனைப் பற்றி பேசப்பட்டது. நிதிஷ் குமார்தான் இதை முதலில் ஆரம்பித்தார். பல்லாயிரக் கோடிகள் இந்தியர்களில் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகவும் , அதனை மீட்க வேண்டும் என்றும் சொன்னார். அதை தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் அத்வானியும்  இதை பற்றி  பேசினார். G-20 மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்க், இதை பற்றி பேச வேண்டும் என்றும், இந்தியர்களின் கணக்கு வழக்கு களைப் பெற்று, அணைத்து பணத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினர். மேலும், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நடவடிக்கை எடுக்கப்பட்டு, கருப்பு பணம் மீட்கப் படும் என்று கூறினர். இதற்காக பி ஜெ பி, குருமூர்த்தி, IIM ப்ரோபாசர் வைத்தியநாதன், வக்கீல் மகேஷ் ஜெத்மலானி மற்றும் முன்னால் உளவுத்துறை தலைவர் அஜித் டொவல் ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவை அமைத்து இது பற்றி ஆராய்ந்து வருகிறது.

சரி...அப்படி எவ்ளோதான் பணம் இருக்கிறது என்று தேடினால்..... Swiss Banking Association ரிபோர்டின் படி சுமார் 1,456 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கிறது. இது இந்தியாவின் மொத கடன் தொகையை விட 13 மடங்கு அதிகம். இதை வைத்து இந்தியாவின் கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள தொகையை ஒரு லட்சமாக பங்கிட்டால் சுமார் 45 கோடி பேருக்கு கொடுக்கலாம் என்கிறது ஒரு புள்ளி விபரம். மற்ற நாடுகளின் பண இருப்பை பார்க்கும் போது, இந்திய எங்கேயோ இருக்கிறது...

INDIA $1,456 BILLION
RUSSIA $470 BILLION
U.K. $390 BILLION
UKRAINE $100 BILLION
CHINA $96 BILLION

ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து சுமார் 6௦,௦௦௦ பேர் சுவிசெர்லாந்து செல்வதாகவும் அதில் 20,௦௦௦ பேர் அடிக்கடி செல்வதாகவும் கூறப்படுகிறது. குறைந்தப் பட்சம் பத்து மில்லியன் டாலர்கள் இருப்பு வைக்க வேண்டி உள்ள, சுவிஸ் வங்கிகளில் அனைத்து நாட்டு மக்களை விட இந்தியர்கள் தான் அதிக பணம் வைத்துள்ளனர்.

இந்த பணத்தை எல்லாம் கொண்டு வர எந்த அரசியல் வாதியும் முழுமையான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த பணத்தை வைத்திருப்பர்வர்களே பெரும்பாலும் அவர்கள் தான். ஒரு வேளை, அப்படி யாராவது ஒரு நல்ல அரசியல்வாதி வந்து, பணத்தை எல்லாம் மீட்பாரேயனால், அப்போது தான் உண்மையாகவே "இந்திய ஒளிரும்"
 
Watch the latest videos on YouTube.com