சுவிச்லேர்லாந்து சாக்லேட்டுக்கும், Cheese க்கு மட்டும் அல்ல, ரகசிய வங்கி கணக்குகளுக்கும் பெயர்போனதே. உலகத்தில் உள்ள அணைத்து திருடர்களின் கருப்பு பணங்கள் பத்திரமாக வைக்கப் பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலகில் நிலவும் பொருளாதார மந்த நிலையினால் பதிக்கப்பட்ட அமெரிக்க புது முடிவை எடுத்துள்ளது. அதன் படி சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் வைத்திருப்பவர்கள், தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டு சரியான வரி செலுத்தினால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அதோடு இல்லாமல் சுவிஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அமெரிக்கர்கள் வைத்திருக்கும் ரகசிய வங்கி கணக்குகளை தருமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே ஒரு சுவிஸ் வங்கி அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, வங்கிக் கணக்குகளை தருவதாகவும், இத்தனை நாள் மறைத்து வைத்ததற்காக அபராதமும் கட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகளும் தங்கள் குடிமக்களின் வங்கி கணக்குகளை கேட்க முன்வந்துள்ளது.
இந்த நேரத்தில் தான் இந்தியாவிலும் இந்த பிரச்சனைப் பற்றி பேசப்பட்டது. நிதிஷ் குமார்தான் இதை முதலில் ஆரம்பித்தார். பல்லாயிரக் கோடிகள் இந்தியர்களில் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகவும் , அதனை மீட்க வேண்டும் என்றும் சொன்னார். அதை தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் அத்வானியும் இதை பற்றி பேசினார். G-20 மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்க், இதை பற்றி பேச வேண்டும் என்றும், இந்தியர்களின் கணக்கு வழக்கு களைப் பெற்று, அணைத்து பணத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினர். மேலும், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நடவடிக்கை எடுக்கப்பட்டு, கருப்பு பணம் மீட்கப் படும் என்று கூறினர். இதற்காக பி ஜெ பி, குருமூர்த்தி, IIM ப்ரோபாசர் வைத்தியநாதன், வக்கீல் மகேஷ் ஜெத்மலானி மற்றும் முன்னால் உளவுத்துறை தலைவர் அஜித் டொவல் ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவை அமைத்து இது பற்றி ஆராய்ந்து வருகிறது.
சரி...அப்படி எவ்ளோதான் பணம் இருக்கிறது என்று தேடினால்..... Swiss Banking Association ரிபோர்டின் படி சுமார் 1,456 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கிறது. இது இந்தியாவின் மொத கடன் தொகையை விட 13 மடங்கு அதிகம். இதை வைத்து இந்தியாவின் கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள தொகையை ஒரு லட்சமாக பங்கிட்டால் சுமார் 45 கோடி பேருக்கு கொடுக்கலாம் என்கிறது ஒரு புள்ளி விபரம். மற்ற நாடுகளின் பண இருப்பை பார்க்கும் போது, இந்திய எங்கேயோ இருக்கிறது...
INDIA $1,456 BILLION
RUSSIA $470 BILLION
U.K. $390 BILLION
UKRAINE $100 BILLION
CHINA $96 BILLION
ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து சுமார் 6௦,௦௦௦ பேர் சுவிசெர்லாந்து செல்வதாகவும் அதில் 20,௦௦௦ பேர் அடிக்கடி செல்வதாகவும் கூறப்படுகிறது. குறைந்தப் பட்சம் பத்து மில்லியன் டாலர்கள் இருப்பு வைக்க வேண்டி உள்ள, சுவிஸ் வங்கிகளில் அனைத்து நாட்டு மக்களை விட இந்தியர்கள் தான் அதிக பணம் வைத்துள்ளனர்.
இந்த பணத்தை எல்லாம் கொண்டு வர எந்த அரசியல் வாதியும் முழுமையான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த பணத்தை வைத்திருப்பர்வர்களே பெரும்பாலும் அவர்கள் தான். ஒரு வேளை, அப்படி யாராவது ஒரு நல்ல அரசியல்வாதி வந்து, பணத்தை எல்லாம் மீட்பாரேயனால், அப்போது தான் உண்மையாகவே "இந்திய ஒளிரும்"
இந்தியா ஒளிர இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை!!
ReplyDeleteAll politicians are culprits.
ReplyDeleteSo nothing will happen.
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை ஆகாது எட்வின். :) :)
ReplyDeleteநன்றி செந்தில் , எட்வின் , பாலா . மாற்றங்கள் மெதுவாக தான் நிகழும். எதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே 2020, 2060 எல்லாம் சாத்தியம்.
ReplyDelete