Sunday, April 19, 2009

அரசு பள்ளி , பெண்கள், அடிப்படை வசதி ?

இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த 'நாஞ்சில் நாடன்' கட்டுரை மிகவும் பாதித்தது. பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் மாதவிடாய் காலத்தில் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லாமல் தவிப்பதை பற்றி எழுதி இருந்தார். நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படித்தவன். அந்த மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை இருந்தது. பத்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் மட்டுமே. மற்ற இரு வகுப்புகளும் ஆண்- பெண் என இரு பாலருக்குமாக இருந்தது. ஆனால் எல்லா நேரமும் வகுப்பறையில் மாணவியர் இருக்க மாட்டர்கள். அவர்களுக்கென்று தனியாக ஒரு அறை. அந்த அறையிலிருந்து பாடம் நடத்தும் வகுப்பரைக்கோ, ஆய்வுக் கூடங்களுக்கோ வந்து போவர். வகுப்பறையில் பெஞ்ச் பற்றகுறையினால் பல மாணவியர் தரையில் தான் அமருவார்கள். 

பெண்களுக்கு அந்த பள்ளியில் பல பிரச்சனைகள். ஆண்கள் பள்ளி என்பதால் எங்கு பாத்தாலும் பசங்கதான். அதிலும் நாலஞ்சு வருஷம் பெயிலாகி ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்கள் கொடுக்கும் தொல்லைகள் அதிகம். ஒருமுறை ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த ஒருவன் மாணவியர் அமரும் அறையின் முன் ஒரு காதல் கடிதத்தை வைத்து விட்டு வந்து விட்டன். இந்தப் பார்த்த உதவி தலைமை ஆசிரியர், அவனை கண்டித்து அனுப்பி விட்டார். அதற்கப்புறம் மாணவியர்களுக்கு பல கட்டுப்பாடுகள். பசங்களிடம் பேசக் கூடாது; அருகருகே (!) நடந்து செல்லக் கூடாது...
வகுப்பறையில் அவர்கள் படும் கஷ்டம் இன்னும் கொடுமை. கேள்வி கேட்கவோ, வகுப்புக்கு பின் ஆசிரியர்களை சந்தித்து சந்தேகம் கேட்கவோ மிகவும் தயங்குவார்கள். ஒரு புத்தகமோ, வினாத்தலோ, லேப் ரிப்போர்ட் ஒ மாணவர்களிடமிருந்து வாங்க படாத பாடு படுவார்கள்.
கழிப்பறை இன்னும் கொடுமை. மாணவர்களுக்கென்று தனியாக கழிப்பிடம் கிடையாது. பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு சென்று, எதாவது ஒரு மரத்தை பிடித்துக் கொள்வார்கள். கிட்டத்தட்ட 500 மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு சிறிய இடம் தான். 100 மீட்டர் வரை நாற்றம் வீசும். பெண்களுக் கென்று ஒரு சுவர் வைத்த, ஐந்தாறு பேர் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறு கழிப்பறை உண்டு (ஆசிரியைகளுக்கும் அது தான்). பெண்கள் அறையிலிருந்து கழிப்பறை செல்லவே 15 நிமிடம் ஆகிவிடும். மாணவர்கள் வகுப்பறையை தாண்டி செல்ல வேண்டும். சில சமயம் கழிப்பறைக்கு அருகில் இருந்த சிறு மைதானத்தில் கோ -கோ விளையாண்டுக் கொண்டுஇருப்பர்கள். கஷ்டம் தான்....சில நேரங்களில் வகுப்பறையிலிருந்து இரண்டு மாணவிகள் மட்டும் வெளியேறும் போது, மாணவர்களிடம் ஒரு சிறு சலசலப்பு இருக்கும். என் செல்கிறார்கள் என்று தெரிந்தாலும், அதை கிண்டல் செய்வார்கள். இது மாதிரி பலபல பிரச்சனைகள்..இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் மாணவியர் அதிக சதவிகிதம் தேர்ச்சி பெறுவர்.

இதை நினைக்கும் பொழுது நாஞ்சில் நாடனின் இந்த வரிகள் மிகவும் உண்மையனதகவே தோன்றுகிறது.

"உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் இருந்தால், நடந்து போய் வரும் தூரத்தில் இருந்தால், துணைக்கு வேறு பெண்களும் இருந்தால், தொடர்ந்து படிப்பார்கள் சிலர். அவர்களில் பலர், படிப்பில் தோளுக்கு இணையாக ஓடிவரும் கெட்டிக்காரிகளாக இருந்தும்கூட பள்ளி தாண்டி, கல்லூரி நுழைந்தது இல்லை. அவ்விதம் படிப்பை இடையில் முறித்துக்கொண்டு, சில ஆண்டுகள் வீட்டில் அடைந்து, சமையலும் பிற வீட்டு வேலைகளும் தேர்ந்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்று வளர்க்கப் போனார்கள். அவ்வாறு போனதன் காரணம் குடும்ப கௌரவமோ, சாதி மரியாதையோ, கற்பு காத்தலோ, படிக்கவைத்தால் சமமான மாப்பிள்ளை தேட வேண்டும் என்ற கவலையோ மட்டும் அல்ல என்று எனக்கு இப்போது தோன்றுகிறது."

4 comments:

  1. அருமையான பதிவு நன்பா ... நான் ஏற்கனவே இது மாதிரி ஒரு பயணத்தை பதிவு செய்திருக்கிறேன்

    # அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்.....

    http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html

    ReplyDelete
  2. //அவர்களில் பலர், படிப்பில் தோளுக்கு இணையாக ஓடிவரும் கெட்டிக்காரிகளாக இருந்தும்கூட பள்ளி தாண்டி, கல்லூரி நுழைந்தது இல்லை. //


    கொடுமைதான்

    ReplyDelete
  3. அருமையான பதிவு..

    அப்படியே வழிமொழிகிறேன்

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com