தென்சென்னையில் 'முன்னேற்ற' கழகங்களுக்கு போட்டியாக ஒரு சுயேச்சை வேட்பாளர் களம் இறங்கி உள்ளார். பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்தவர், நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். மாதம் இலட்சக் கணக்கில் சம்பளம் தரும் வேலைகளை உதறி தள்ளிவிட்டு சொந்தமாக இட்லி கடை நடத்துபவர், வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்தவர், 'யூத் ஐகான்' விருது பெற்றவர்......
அவர் 'சரத்பாபு' என்ற 29 வயது இளைஞர். சென்னை, மடிப்பாக்கத்தில் பிறந்து, குடிசையில் வளர்ந்து பல இன்னல்களுக்கு நடுவில் கல்வி பயின்று, இன்று சொந்த காலில் நிற்கும் இந்த இளைஞர், தன் மக்களுக்காக சேவை செய்ய தேர்தல் களத்தில் குதித்துள்ளார். அரசியல் எல்லாம் ரவுடிங்க பண்ற வேலை, இந்தியாவ திருத்த முடியாதுன்னு சொல்லிக்கிட்டு அமெரிக்க வில போயி, ஒபாமா புகழ் பாடற கும்பல் ஒரு பக்கம். எப்படியாவது இந்தியா மாறதா? யாராவது ஒரு நல்லவன் வந்து எல்லாத்தையும் மாத்திட மட்டான? ன்னு புலம்பிகிட்டு, வலைப்பதிவிலையும், ஒர்கிட்லயும், அயோக்யத்தனம் பண்ற அரசியல் வாதிகளை திட்டிகிட்டு பொழுதைக் கழிக்கிற கும்பல் ஒரு பக்கம். இதுக்கு நடுவில படிச்ச சிலர்தான், இந்த மாதிரி துணிஞ்சு முயற்சியாவது எடுக்கறாங்க. அரசியல் பலம், பண பலம் ன்னு எதுவுமே இல்லாம, மக்களை மட்டுமே நம்பி வர இவங்கள , மக்கள் கூட சில சமயம் கைவிட்டர்ரங்க!(லோக் பரிதன் ன்னு கட்சி ஆரம்பிச்ச ஐ ஐ டி மாணவர்கள் , போன தேர்தலுக்கு அபாரம் என்ன பன்றங்கன்னே தெரியல).
இந்த தடவை அதுமாதிரி நடக்காம , நல்ல வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது நம்ம கடமை. அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் இவரை மக்களிடம் கொண்டு செல்ல நாம் உதவ வேண்டும். இவர் போட்டியிடும் தென்சென்னையில் தொண்ணுறு சதவிகிதம் படித்தவர்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். இதில் பாதி பேர் ஓட்டுப் போட்ட கூட போதும். சரத் ஜெயிக்கலாம். மாற்றம் வருமா என்று பார்க்கலாம்!
No comments:
Post a Comment