கடந்த வாரம் 'லக்மே ஃபேஷன் வீக்' நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்டு பிரபல ஜீன்ஸ் ரெடிமேட் நிறுவன விளம்பரத்துக்காக 'கேட் வாக்' நடை போட்டார். பிறகு அப்படியே, கீழே இறங்கிமுன் வரிசையில் அமர்ந்திருந்த தன் மனைவி 'டிவிங்கிள் கன்னா'வின் முன்பாக நின்றவர், ஜீன்ஸ் கம்பெனியின் லேட்டஸ்ட் தாரக மந்திரமான 'ஜீன்ஸின் பட்டனைக் கழட்டு' என்று சைகை செய்தார். இதற்கு வெட்கப்பட்டு டிவிங்கிள் மறுக்க (அதுவும் டிராமா?)... மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார் அக்ஷய். வேறு வழியின்றி டிவிங்கிள் பட்டனை கழற்றிய பிறகே, திரும்பி மேடை ஏறினார் அக்ஷய். ஏராளமான பார்வையாளர்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என பிரச்னை கிளப்பத் திட்டமிட்டது சிவசேனா. ஆனால், 'பட்டனைக் கழற்றியது அவருடைய மனைவிதானே' என அக்ஷய் தரப்பிலிருந்து பதில் தந்து இதை 'குடும்ப' விவகாரமாக்கிவிட... இது தேர்தல் சமயத்தில் எடுபடாது என விவகாரத்தை கழற்றிவிட்டதாம் சிவசேனா. இதற்கிடையில், இந்த அநாகரிக செயல் வெளிப்படையாக நடந்ததால், அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் சிலர் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து அக்ஷய் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
எப்படியோ! 'நல்லா' விளம்பர படுத்திட்டாங்க
நன்றி : ஜூவி
No comments:
Post a Comment