Wednesday, April 15, 2009

தேர்தலில் போட்டியிடும் ‘டிராஃபிக்’ ராமசாமி!


வெள்ளைச் சட்டை - காக்கி பேன்ட்; அகலக் கறுப்புக் கண்ணாடி; சட்டைப் பாக்கெட்டுகளில் கத்தைகத்தையாகப் பேப்பர்கள்; ஆறேழு பேனாக்கள்; கையில் ஒரு விசில்; பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கேமரா; எந் நேரமும் பாதுகாப்புக்கு ஏ.கே-47 இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு காவலர் என வீதிகளில் கூட்டத்தில் ஒருவராக உலவுகிற இவர்... ‘டிராஃபிக்’ ராமசாமி!
வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர் வரை யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பொதுநல வழக்குகளை ஏவி வருபவர்,  கே.ஆர். ராமசாமி என்ற டிராஃபிக் ராமசாமி. தள்ளாத வயதிலும் தளராமல்போராடும் இவர் மீதும் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். அப்படியும் ஜாமீனில் வெளியே வந்ததும் புதுத் தெம்புடன் கேஸ் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு நீதிமன்றப் படிகளை ஏறத் தொடங்கி விடுவார். தற்போது கூட வக்கீல்களின் உண்ணாவிரதத்தை எதிர்த்து வழக்கு போட சென்றவரை , ஒரு ரவ்டி வக்கீல்கள் கும்பல் அடித்து நொறுக்கியது.
 
இருந்தாலும் விடாமுயற்சியாக தன் பணியை செவ்வனே செய்துகொண்டு வரும் இவர், இப்பொழுது "தேசிய ஜனநாயக கட்சி' என்ற கட்சியை ஆரம்பித்து வட சென்னை, மதிய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். மத்திய சென்னை யில் - வசீகரன், வட சென்னை யில் - சந்தோஷ்குமார் மற்றும் தென் சென்னையில் ராமசாமி ஆகியோர் போட்டி இடுகின்றனர்.

ஜு.வீ க்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து:
'மக்கள் பிரச்னைகளுக்காக நான் போரா டுறது புதுசு இல்லை. டிராஃபிக்லருந்து முதலமைச்சரின் பாதுகாப்பு பிரச்னைகள் வரை எத்தனையோ விவகாரங்களை கையிலெடுத்துப் போராடி இருக்கேன். சட்டரீதியா தண்டனைகளையும் வாங்கிக் கொடுத்திருக்கேன். ஆனாலும், சென்னையில நாளுக்கு நாள் பிரச்னைகள் பெருகிட்டு இருக்கே தவிர... யாரும் தவறு செய்ய அச்சப் படுறதே இல்லை. மக்கள் பிரதிநிதிகளா தேர்ந்தெடுக்கப்படுறவங்களும் 'சம்பாரிச்சா போதும்... சொத்து சேர்த்தால் போதும்'னு நினைச்சு மக்களை மறந்துடுறாங்க. இதையெல்லாம் இனியும் வேடிக்கை பார்க்கத் தயா ரில்லை. அதனாலதான் இப்படி இறங்கிட்டோம். நாங்க சொல்ற கருத்துகளை ஆமோதிச்சு ஏத்துகிற மக்கள் கூல்டிரிங்க்ஸ், டீ, பிஸ்கட் வாங்கிக் கொடுக்கிறாங்க. கஷ்டங்கள்ல அல்லாடுற மக்களோட ஓட்டு கண்டிப்பா எங்களுக்குக் கிடைக்கும்கிற நம்பிக்கை இருக்கு. அதனால வெற்றிக் கனவுல மிதக்கிற பெரிய கட்சிகள் திண்டாடுற நிலை எங்களாலேயே உருவாகும்.

உண்மையான ஹீரோவான இவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, எதிர் காலத்தில் பல நல்லவர்கள் அரசியலுக்கு வர இது வழி வகுக்கும்.

நன்றி : ஜூ வி

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com