Friday, April 17, 2009

லட்சுமன், திராவிடை அடுத்து கங்குலி!


ட்சுமன், திராவிடை அடுத்து கங்குலி தனது கேப்டன் பதவியை இழந்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடெர் புதிய காப்டனாக McCullum நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த வருடம் ஐபிஎல் உருவான போது, மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஸ்மன், சேவாக் போன்றோர் அவர்கள் சார்ந்த மாநிலங்கள் உள்ள அணிக்கு தலைமை பொறுப்பேற்றனர். அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. டிராவிட் ,லக்ஸ்மன் போன்றோர் எல்லாம் இந்த வேகமான ஆட்ட முறைக்கு தங்களை மாற்றிக் கொள்வதே சிரமம்; இதில் அணியை வேறு முன்னின்று வழிநடத்த வேண்டும் என்றல் அது சிரமம் தான். விமர்சனங்களை உண்மையாக்கும் வகையில், இவ்விருவரும் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப் படித்தியதோடு, அணியையும் வழிநடத்த முடியாமல் திணறினர். அதனால், இந்த வருட ஐபிஎல் தொடருக்கு டிராவிட், லக்ஸ்மனுக்கு பதிலாக பீட்டர்சனும், கில்லியும் காப்டனாக இருப்பார்கள் என்று அறிவிக்கப் பட்டது.

கொல்கத்தா அணியின் உரிமையாளர் , ஷாரூக், கங்கூலியின் மீது அதிருப்தியில் தான் இருந்தார். ஆனால், அவரை நீக்கினால் ரசிகர்கள் ரகளை செய்வார்கள், கொல்கட்டாவில் போட்டிகளை நடத்தமுடியாது என்பதினால் அமைதியாக இருந்தார். அணியின் பயிற்சியாளர் Buchanan மூலம் 'சுழற்சி முறையில் கேப்டன்' என்ற புதிய முறையை அறிமுகப் படுத்தினர். இது கங்குலியை ஓரம் கட்ட நடக்கும் வேலை என்பது தெரிந்தாலும், ஷாருக் கங்குலியை மற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார்.கடைசியாக என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென்று கங்குலி கேப்டன் பொறுப்பிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.இந்த முடிவு என்ன பொறுத்தவரை தவறானதே. கங்குலி ஒரு சிறந்த தலைமை பண்புள்ளவர். ட்வென்டி- ட்வென்டி ஆட்ட முறைக்கு ஏற்ப ஈடு கொடுத்து ஆடக்கூடியவர்.(கடந்த ஐபிஎல்'இல் பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தியது நினைவிருக்கலாம்). அணியில் பல 'தலைகள்' இருக்கும் போது அவர்களை எல்லாம் வழிநடத்தி செல்ல தகுதியுள்ளவர்.அவர் காப்டனாக இல்லாதது அணிக்கு பின்னடைவே! இந்த முறையும் அணி தோற்றால், அடுத்து ஷாரூக் பயிற்சியாளரை தூக்குவார என்று தெரியவில்லை. இப்படியே போனால் கடைசியில் அவர் மட்டும் தான் மிஞ்சுவார்.
இந்த முடிவு சரியானதா, தவறானதா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com