Sunday, March 15, 2009

வினாத்தாள் குழப்பம் - பாதிக்கப்படும் மாணவர்கள்

செய்தி:  பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த வேதியியல் தேர்வில், இரண்டு கேள்விகள் குளறுபடியாக இடம் பெற்றிருந்தன. ஐந்து மதிப்பெண் கேள்வி ஒன்றும், ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்றும் தவறாகக் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேதியியல் தேர்வில் பகுதி-4ல் ஏழு கேள்விகள் தரப்பட்டு, அதில் நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கேள்விக்கும் 10 மதிப்பெண். இந்த மதிப்பெண், ஐந்து ஐந்தாகப் பிரித்து (உட்பிரிவு கேள்விகள்) தரப்பட்டன.உட்பிரிவில், -பி-சி-டி என்று நான்கு கேள்விகள் தரப்பட்டு, அதில் "-பி,' அல்லது "சி-டி' என தேர்வு செய்து இரண்டு கேள்விகளுக்கு விடை அளித்தால், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், கேள்வி எண் 70 ()வில் இடம் பெற்றிருந்த கேள்வி (கட்டாய வினா) தவறானது என்று மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.

இது குறித்து, வேதியியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கேள்வி: சி4 எச்10-0 என்ற மூலப்பொருள் வாய்ப்பாடு கொண்ட இரு மாற்றியங்கள் மற்றும் .பி. 573 கே வெப்பநிலையில் தாமிரத்துடன் தனித்தனியே வெப்பப்படுத்தும் போது, "'ஆனது சி-4எச் 8 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய ஆல்கீன் சேர்மம் "சி'யைத் தருகிறது. "பி' ஆனது சி4 எச் 8 0 என்ற சேர்மம், "டி'யைக் கொடுக்கின்றன. சேர்மம் "டி' டாலன்ட் கரணியை ஒடுக்குவதில்லை. ஆனால், அயோபார்ம் வினைக்கு உட்படுகிறது. .பி.சி மற்றும் "டி'யை கண்டுபிடித்து வினைகளைத் தருக.இதில், "' சேர்மத்தில் இருந்து "சி' சேர்மத்திற்கு உண்டான வினையானது புத்தகத்தில் இருக்கிறது. ஆனால், "பி' சேர்மத்தில் இருந்து "டி'க்கு உண்டான வினை பாடப் புத்தகத்தில் இல்லை. அதனால், பெரும்பாலான மாணவர்கள் இந்த கேள்விக்கு விடை எழுதவில்லை. இவ்வாறு ஆசிரியர் கூறினார்; மாணவர்களும் அதையே தெரிவித்தனர்.

பாடப் புத்தகத்தில் இல்லாத கேள்வியைக் கேட்டதால், அதற்குரிய ஐந்து மதிப்பெண்களையும் தேர்வுத் துறை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மற்றொரு குளறுபடி கேள்வி: கொள்குறி வகை வினா பகுதியில் (ஒரு மதிப்பெண்) கேள்வி எண் 3ல், "கீழ்கண்டவற்றுள் எது கதிரியக்க லேன்ப்பனைடு?' என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு, -Pu, பி-Ac, சி-Dh, டி-Pr என்று நான்கு விடைகள் தரப்பட்டுள்ளன. இதில், சரியான விடையை தேர்வு செய்து குறிப்பிட வேண்டும். முதல் மூன்று விடைகளும் தவறானவை. நான்காவது விடை சரி. ஆனால், "கட்' என்பதற்கு பதிலாக, "Pr' என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த கேள்விக்குரிய மதிப்பெண்ணும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மிக முக்கியமான தேர்வில் குளறுபடியான கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேள்வித்தாள் தயாரித்தவர்கள் செய்த தவறுகளுக்கு, மாணவர்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று ஆசிரியர்களும் குமுறுகின்றனர். அறிவியல் பாடங்களில் 1 மதிப்பெண் குறைந்தால் கூட, தொழிற்கல்வி சேர்க்கையில் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால், குளறுபடி கேள்விகளுக்குரிய மதிப்பெண்களை முழுமையாக மாணவர்களுக்கு தர வேண்டும்."

- ஒவ்வொரு வருடமும் பொதுத் தேர்வின் பொது எதாவது ஒரு வினாத்தாளில் தவறான கேள்விகளை கேட்டு வைப்பதே வடிக்கை யாகிவிட்டது. இதனால் பதிக்கப் படுவது மாணவர்கள் தான். இந்த வருடம் வேதியியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், பாட திட்டத்திலிருந்து இல்லாத வினாவாகவும் கேட்கப் பட்டுள்ளது. இதனால் குறைந்த பட்சம் ஆறு மதிப்பெண்களை 'இலவசமாக" கொடுக்க வேண்டியுள்ளது. இந்த ஆறு மதிப்பெண்கள் பொறியியல், மருத்துவ சேர்க்கையின் பொது பெரிய விளைவை ஏற்படுத்தும். சரியான கேள்விகளை கேட்டிருந்தால் ஒருவேளை சில மாணவர்கள் தவறான பதில்களை எழுதி இருக்கலாம். அதனால், உண்மையாகவே பதில் தெரிந்த மாணவர்களை இது வேறு படுத்திக் காட்டும். இதுமட்டும் அல்லாது, விடைத்தாள்களை திருத்தும் பணியிலும் பல குழப்பங்கள் நேரும். நன்றாக படிக்கும் மாணவன் தீடீரென்று நாற்பது மதிப்பெண்களை பெறுவான். அப்பறம், மறுமதிப்பீட்டிற்கு முறையிட்டுப் பார்த்தால், தொண்ணுறு சதவிகிதத்திற்கு மேல் வாங்கியிருப்பான்.

எப்படி இந்த மாதிரி தவறுகள் நடக்கிறது என்று தெரியவில்லை. ஒரு ஆசிரியர் வினாத்தாளை தயார் செய்கிறார் என்றால், சில பேர்களாவது அதை பார்த்து படித்து, சரி பார்ப்பார்கள். இதனை பேர்களையும் தாண்டி, ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்சனை தொடருகிறது என்றால், தேர்வுத் துறையின் முறையில் தான் எதாவது பிரச்சனை இருக்க வேண்டும். விதிமுறைகள் சரியாக இல்லையா, அல்லாது அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லையா என்று தெரிவவில்லை.

சமீபத்தில் ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவில், கொரியா அரசாங்கம் நுழைவு தேர்வை நடத்த என்ன என்ன செய்கிறது என்று எழுதிஇருந்தார். சாதாரண ஒரு வினாத்தளை கூட சரியாக தயாரிக்க முடியாத நம் அரசிடம் இருந்து, இந்த மாதிரி வசதி களை எல்லாம் எப்படி எதிபார்ப்பது? தமிழ்நாட்டு மாணவர்களின் தலைவிதி!

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com