உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார தேக்கம் பற்றியும் அதனின் தாக்கம் பற்றியும் தினம் தினம் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இந்த பொருளாதார தேக்கத்தால் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோபிய நாடுகள். ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். அமெரிக்க மக்களிடையே ஒருவிதமான பயம் நிலவி வந்தாலும், புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஒபாமா எதாவது செய்வர் என்று சிறிது நம்பிக்கையோடு இருக்கின்றனர். ஒபமாவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். முதல் கட்டமாக திவாலாகிக் கொண்டிருக்கும் நிதி மற்றும் தொழில் உற்பத்தி நிறுவனங்களை மீட்டு எடுக்க சுமார் 787 பில்லியன் டாலர்களை வரி பணத்தில் இருந்து வாரி வழங்கி உள்ளார். நல்ல விஷயம் தான். சரிந்து வரும் பொருளாதார நிலையை மாற்ற இது உதவும். ஆனால், நிதி உதவி பெரும் நிறுவனங்களுக்கு அவர் விதித்த கட்டுப்பாடுகள் பல பிரச்சனைகளை கிளப்பி வருகிறது.
நிதி உதவி பெரும் நிறுவனங்கள் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமட்டும் அல்லாது, அவர்கள் அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும். உதரணமாக அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட இரும்பு, மற்றும் கட்டுமான பொருட்களையே அவர்கள் வாங்க வேண்டும். "பைய் அமெரிக்கா " (Buy America) என்ற கோஷம் பரவலாக ஒலிக்க தொடங்கியுள்ளது. இது தான் பல்வேறு நாடுகளையும், குறிப்பாக சைனா, இந்திய மற்றும் தெற்கு ஆசியா நாடுகளை கடுப்படையை செய்துள்ளது. இது உலகமயமாக்கலுக்கு எதிரான கோட்பாடு என்று இந்த நாடுகள் கூச்சலிடுகின்றன. அமெரிக்காவில் கூட அரசியல் வாதிகளும், மக்களும் இதை ஆதரித்தாலும், சில நிறுவனங்கள் குறிப்பாக Caterpillar, GE போன்ற நிறுவனகள் இதை எதிர்கின்றன. அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் "இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு உகந்ததல்ல என்றும், மற்ற நாடுகளும் இதே கொள்கையை பின்பற்றினால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கும் " என்றும் கூறியுள்ளனர்.
இது மிகவும் உண்மையான கூற்று. ஏனென்றால், அமெரிக்காவிற்கு முக்கியமான சந்தைகளே இந்தியாவும் சீனாவும் தான். கோக கோளாவில் ஆரம்பித்து Colgate, டெல், எச்பி, இன்டெல்,போர்ட்,GM என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அமெரிக்கர்களுக்கு அவர்களுடைய பொருட்களை விற்க உலக சந்தையும், தாராள பொருளாதாரக் கொள்கையும் தேவைப் படுகிறது. ஆனால், அவர்கள் மட்டும் மற்ற நாட்டு பொருட்களுக்கும், மனித ஆற்றலுக்கும் தடை விதிக்கின்றனர். உலக வங்கியின் தலைவர் இதை "அபாயகரமானது" என்று வர்ணித்துள்ளார். இது ஒரு "அசிங்கமான" கொள்கை என்று டைம்ஸ் ஒப் லண்டன் வர்ணிக்க, சீன அதிபரோ இதை ஒரு "விஷம்" என்று கூறியுள்ளார்.
இதனால் அமெரிக்காவையே நம்பி வாழும் இந்திய, சீனா போன்ற நாடுகளுக்கு சில நன்மையும் உண்டு. இந்த பொருளாதாரக் கொள்கையினால் அமெரிக்க மோகம் குறைந்து, அவரவர்கள் தங்கள் தாய் நாடுகளுக்கே திரும்பி வருகின்றனர். தங்கள் நாட்டிலேயே "நல்ல " வேலை வைப்புகள் பெருகி வருவதாக இந்தியர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் வந்த ஒரு கருத்துக்கணிப்பு, புதிய வேலை வாய்ப்புகளை பெருக்கி வரும் நாடுகளில் இந்திய முதலிடத்தில் இருப்பதாக கூறுகிறது. இரண்டாவது இடத்தில் தென்னாப்ரிக்கா உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பாவும் கதி கலங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த செய்தி மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய போன்ற நாடுகள் தங்கள் பொருளாதரத்தை வளர்த்துக் கொண்டல் நன்றாக இருக்கும். ஒரு காலத்தில் அமெரிக்கர்களும், இங்கிலாந்து காரர்களும் இந்தியாவில் வந்து வேலை செய்ய வேண்டி வந்தாலும் வரலாம்!
No comments:
Post a Comment