Saturday, February 21, 2009

ஆஸ்கார், A R ரஹ்மான்



ஸ்கார் விருது (ஒஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகடமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் தொடங்கும் ஆஸ்கார் அலை, முடிவுகள் தெரிவிக்கப்படும் நாள் வரை தொடர்கிறது. சினிமா துறை 25 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்த தனி நபர்களுக்கும், குழுக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. சுமார் 6000 உறுப்பினர்களைக் கொண்ட அகாடமி ஒப் மோசன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சாஸ் (Academy of Motion Picture Arts and Sciences) இந்த ஆஸ்கார் விருதுகளை கொடுக்கிறது. இந்த 6000 உறுப்பினர்களும் அவரவர் துறை களை, சார்ந்த விருதுகளை தேர்தெடுக்கிறார்கள். உதரணமாக, நடிகர்களாக உள்ள உறுப்பினர்கள், சிறந்த நடிகரை ஓட்டு போட்டு தேர்வு செய்கின்றனர்.வேற்று மொழி திரைப்படங்கள், அனிமேசன் தெயரைப்படங்களை மட்டும் அனைவரும் சேர்த்து தேர்ந்து எடுக்கிறார்கள்.

தேர்வு முறை:

ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த திரைப்படங்களை பார்க்கும் உறுப்பினர்கள்,  டிசம்பர் இறுதியில் சிறந்த ஐந்து நபர்களை , படங்களை ஒவ்வொரு துறைக்கும் பரிந்துரைகிறார்கள். இந்த முடிவுகளை ஓட்டு சீட்டுகளில் பதிவு செய்து அதை, ப்ரைஸ் வட்டார் கோபெர் (PricewaterCooper) என்ற ஆடிட்டிங் நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முடிவுகள் ஜனவரி மூன்றாம் வாரம் அறிவிக்கப் படுகிறது. 


இரண்டாம் கட்டமாக, ஐந்து பேரில் ஒருவரை தேர்வு செய்து அதை ப்ரைஸ் வட்டார் க்கு அனுப்பி வைக்கிறார்கள். ப்ரைஸ் வட்டார் நிறுவனத்தின் இரண்டு பேர்கள் மட்டும் ஓட்டுகளை சேகரித்து, முடிவுகளை ரகசியமாக வைத்திருந்து, விழாவில் அறிவிக்கிறார்கள். (இந்த வருடம் அந்த லிஸ்ட் லீக் ஆகி விட்டதாக வதந்தி!).


ஆஸ்கார் சிலை:


விருதுக்காக கொடுக்கப்படும் சிலை, 13 1/2 இன்ச் உயரமுடையது. பிரிட்டனியாம் என்ற உலோகக் கலவையால் செய்யப்படும் இந்த சிலைக்கு தங்க முலம் பூசப் படுகிறது.




சரி....இந்த ஞாயிறு அன்று அறிவிக்க படப்போகும் 81 வது விருதுகளை இந்தியர்கள் அனைவரும் ஆர்வத்தோடு கவனிக்க காரணம், ரஹ்மான்!!! ரஹ்மனோடு சிறந்த பின்னணி இசைக்கு போட்டியில் இருப்பவர்கள்...
 
  • Alexandre Desplat - “The Curious Case of Benjamin Button”
  • James Newton Howard - “Defiance” 
  • Danny Elfman - “Milk”
  • Thomas Newman - “WALL-E”

சிறந்த பாடலுக்கான போட்டியில் இருப்பவர்கள்:

  • “Down to Earth” from “WALL-E”  Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
  • “Jai Ho” from “Slumdog Millionaire” , Music by A.R. Rahman, Lyric by Gulzar
  • “O Saya” from “Slumdog Millionaire” , Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam  

பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் ஆஸ்கார் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வெல்வாரா என்பது தெரிந்துவிடும்.  இதற்கு முன் இந்திய அளவில் எந்த ஒரு  இசையமைப்பாளரும் அல்லது எந்த திரைப்படக் கலைஞரும்  மூன்று பிரிவுகளில் தேர்வு  செய்யப்பட்டு கிடையாது இதுவே முதல் முறையாகும். Slumdog Millionaire திரைப்படம்10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.சிறந்த இசை அமைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  போட்டியிருந்தாலும்சிறந்த பாடலுக்கு அவரின் இரண்டு பாடல்கள் பரிந்துரைக்கப் பட்டிருப்பதும்அவருக்கு போட்டியாக இருப்பது ‘Wall –E’ என்கிற அனிமேஷன் திரைப்படம் மட்டும்தான் என்பதும்அவருக்கு விருதை உறுதி செய்வது போலதான் உள்ளது.

 

 ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துவோம்.....

2 comments:

  1. kidaikum rehamnuku oscar

    Jafir

    ReplyDelete
  2. ARR will now be oscARR.

    Also visit my site to wish him please (there is a very interesting tail piece, do not miss to read that).

    http://www.sathyamurthy.com/2009/02/22/jai-ho-wishes-to-mozart-of-madras/

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com