Monday, May 25, 2009

இணையத்தில் தமிழ் பாடநூல்கள்


நண்பர் ஒருவர் இந்த இணையதள முகவரியை அனுப்பியிருந்தார். என்னவென்று பார்த்த பொழுது, ஒண்ணாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை அணைத்து பட நூல்களும் PDF கோப்புகலாக தரவேற்றம் செய்யப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் மட்டும் அல்லாது, தெலுகு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளிலும் இருந்தன. ஸ்டேட் போர்டு தனியாகவும், Matriculation தனியாகவும் வகைப் படுத்தப் பட்டிருந்தது. இது தவிர, முக்கிய வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய வசதியிருந்தது....அருமை!

பாடங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்க பத்தாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். தமிழ் பாடம்...நிறைய மாறியிருந்தது. அப்துல் கலாம் எழுதிய ஒரு பாடம், அறிவியல் சம்பந்தமாக சில பாடங்களை காண முடிந்தது. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், நா.பார்த்தசாரதி போன்றோரின் சிறுகதைகள் இருந்தன. ஆனால் வழக்கமாக இருக்கும் செய்யும் பகுதி மட்டும் மாறவே இல்லை. அருஞ்சொற்பொருள், இலக்கணம் படிக்க சுவாரசியமாக இருந்தது. நிறைய தமிழ் சொற்களை கற்றுக் கொள்ளலாம். நல்ல தமிழ் எழுதப் பழகிக் கொள்ளலாம்! (வலைப் பதிவர்களுக்கு உதவும்).நேரம் இருந்தால் உலாவிப் பாருங்கள்.

அப்படியே, கொஞ்சம் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் பக்கம் சென்றேன். ம்ம் பரவாயில்லை. கொஞ்சம் மாறி இருக்கிறது.


இந்த முயற்சிகள் நகர் புறம் உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவும். நகர் புறங்களில் இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இணையத்துடன் கூடிய கணிப்பொறி கிடைத்துவிடுகிறது. ஆனால், கிராமப் புறங்களில் வாழும் மாணவர்கள் பயன்பெற கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பத்தாம் வகுப்பு, பணிரண்டம் வகுப்பு முடிவுகளை தெரிந்துக் கொள்ளவே கணினியை பயன்படுத்துகிறார்கள்.

என்றாலும் ..இந்த நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

3 comments:

 
Watch the latest videos on YouTube.com