Tuesday, June 16, 2009

யாரை நம்புவது?

வ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டு. ஒரு வருடத்திற்கு முன்னால் எதேச்சையாக யூடுபில் தென்பட்டது. சில வாரங்கள் மொக்கையாக இருந்தாலும், சிலது ரொம்ப நன்றாக இருக்கும். இப்படியும் மக்கள் இருக்கிறார்களா என்று வியப்பூட்டும். இந்த வாரம், எல்லோரிடமும் நம்பிக்கை வைக்கலாமா? கூடாதா? என்று ஒரு விவாதம். இதில் யாரையும் நம்பக்கூடாது என்ற பிரிவில் சிலர் பேசியது கொடுமையாக இருந்தது. ஒரு பெண் சொல்கிறார்: "அமாவாசையில் பொறந்தவனை நம்பமாட்டேன்! ஏன்னா, எங்க பாட்டி சொல்லியிருக்காங்க, அமாவாசையில பொறந்தவன் திருடனா இருப்பன்னு!". இன்னும் சிலர் குறிப்பிட ராசியில் பொறந்தவனை நம்பமாட்டேன் என்று சொன்னார்கள். ஏன்னா அந்த ராசிக்கும் அவங்களுக்கும் ஒத்துக்காதான்! ஒரு கணிப்பொறியாளர் சொல்கிறார் "ஆந்திர காரனையும், பெங்கலியையும் நம்ப மாட்டேன். இப்படி ஒவ்வொருவரும் சொன்ன காரணங்களை பார்த்த போது, ரொம்ப வேதனையாக இருந்தது.
இது மாதிரி நம்பிக்கை இல்லாதவங்களை அவ்வபோது பார்ப்பதுண்டு. அண்மையில், நண்பர் ஒருவருடன் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நாளே அவர் சொன்னார், "இந்த உலகத்துல யாரையும் நம்ப மாட்டேன். யாருமே நல்லவங்க இல்லை". அவருடைய நடவடிக்கைகளை பார்த்தல் ஒரு மாதிரி restless ஆகா இருக்கும். வெளியே கிளம்பறேன் ன்னு சொல்லிட்டு, திரும்பி தீடீர்ன்னு வந்து பார்ப்பார். எப்போதும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார். யாராவது நம்மளை நம்பிக்கை இல்லாமல் பார்க்கும் போது ஒரே எரிச்சலா வ்ரும். இந்த நம்பிக்கை இல்லா தன்மை முத்திப் போயி ஒரு மான நோயாளி மாதிரி ஆயிடறாங்க.

ஒன்றரை வருடமாக கல்லூரியில் கூடப் படித்த, ஒரே வீட்டில் வசித்த நண்பர், திடீரென்று யாரிடமும் பேசாமல் சற்று ஒதுங்கினர். என்னடாவென்று பார்த்தால், அவருடைய வேலை வாய்ப்பை நான் பறித்து விடுவேன் என்று அஞ்சி, பேசுவதை தவிர்த்து வந்தார்! நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஷாலினி சொன்னதுபோல், ஏதோ ஒரு சில கசப்பான நிகழ்ச்சிகளை மனதில் வைத்துக்கொண்டு, ஒட்டு மொத்த மக்களையும் அதே பார்வையில் பார்க்கின்றனர். ஒரு மலையாளி தவறு செய்தால், ஒட்டு மொத்த மல்லுக்களும் கேவலமானவர்கள் என்று நினைப் பவர்கள்! அடுத்தடுத்து சில மோசமான அனுபவங்கள் நேரும் போது, யார் மேலும் நம்பிக்கை இல்லாமல் போக, தனிமையில் கொஞ்சம் கொஞ்சம் ஆக மன வியாதிக்கு உட்படுபவர்களும் உண்டு. எல்லாரிடமும் அதீத நம்பிக்கை வைப்பது இந்த காலத்தில், இயலாத காரியம் என்றாலும், ஒரு சில நம்பிக்கைக்குரிய நண்பர்களையாவது பெறுவது அவசியம். கேட்காமலேயே பணம் வேண்டுமா என்று கேக்கும் நண்பனும், தன்னுடைய கடவுச் சொல்லகூட அவசரத்துக்கு என்னிடம் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர்கள் எனக்கு இருப்பதை நினைக்கும் பொது நிறைவாக உள்ளது.

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com