Friday, May 22, 2009

இந்த ஆண்டு ஐபிஎல்

கடந்த ஒரு மாதமாக பாடாய் படுத்திக் கொண்டிருந்த ஐபிஎல் முடியப் போகிறது. கடந்த ஆண்டு ICL க்கு போட்டியாக தொடங்கப்பட்ட இந்த தொடர் நல்ல வரவேற்பை வெற்றது. BCCI க்கு, அணி முதலாளிகளுக்கும், நட்சத்திர வீரர்களுக்கும் நல்ல பணம் கொழித்தது. உள்ளூர் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாகவும், சர்வதேச வீரர்களோடு பழகவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தி முடிக்க வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிய 'மோடிக்கு' ஆரம்பத்திலேயே பிரச்னை. தேர்தல் நடப்பதால், போட்டிகளை நடத்த பாதுக்கப்பு கொடுக்க முடியாது என்று இந்திய அரசாங்கம் கைவிரித்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் நடத்தி முடிப்போம் என்று கோதாவில் இறங்கிய BCCI, ஸௌத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நாடியது. இறுதியாக, "இந்தியன்" ப்ரீமியர் லீக் சவுத் ஆப்ரிக்க சென்றது.

இதை தொடர்ந்து, அணிகளில் பல குழப்பங்கள், மாற்றங்கள். கல்கத்தா அணியில் இருந்து கங்குலியின் காப்டன் பதவிக்கு கல்தா கொடுக்கப் பட்டது. மல்லையாவும் பீடர்சனை அதிக விலை கொடுத்து வாங்கி, கப்டனாகவும் ஆக்கினார். லட்மன் ஓரம் கட்டப் பட்டார். பிளின்ட் ஆப், டுமினி, வார்னெர், மொர்டச்சா போன்ற புதிய முகங்கள் வந்தன. மிகுந்த எதிர்ப்பார்போடு தொடங்கப்பட்ட IPLக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. இந்த முறை எல்லா அணிகளும் சம பலத்தில் இருந்ததால், அரை இறுதிக்கு முன்னேறுவதில் கடுமையான போட்டி. KKR மட்டும் அடிமேல் அடி வாங்கியது. நல்ல வீரர்கள் இருந்தும், குழுவாக ஒன்று சேர முடியாமல் தோற்றுப் போனது. "போலி" IPL வீரரின் வலைப்பதிவால் மேலும் பல குழப்பங்கள். வெறுத்துப் போனே ஷாரூக், இந்திய ஓடிவிட்டார். சச்சின் னின் மோசமான தலைமையினால், மும்பை இந்தியனும் வெளியேறியது. ஜெயா சூரிய சோபிக்காதது பெரிய இழப்பு. சென்ற வருடம் இருந்த மார்ஸ், லீ , ஹோப்ஸ் ஆகியோர் இல்லாததால், பஞ்சாப் தடுமாறியது. யுவியும் ஒரு சில போட்டிகளை தவிர , பெரிசாக ஒன்னும் செய்யவில்லை. சாதரண அணியை வைத்துக் கொண்டு போராடிய ராஜஸ்தானும் வெளியேறியது. ஸ்வப்னில், பதான், ஜடேஜா, ஸ்மித் போன்றோர் சிறப்பாக விளையாடவில்லை.

சென்ற முறை அடிவாங்கிய பெங்களுரு, டெக்கான் அரை இறுதியில். சேவாக், காம்பிர் ஜோடி சோடை போனாலும் டெல்லி நன்றாக விளையாடியது. மோசமான பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு டோனியும் கரை ஏறி விட்டார். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட டெல்லி, முதல் அரை இறுதியில் மூட்டை கட்டியது. கில்லி டெல்லியை பதம் பார்த்து விட்டார். அடுத்ததாக நாளை, சென்னை யும் பெங்களுரும் மோது கின்றன. யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனக்கென்னவோ சென்னை கோப்பையை வெல்லும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!!!

1 comment:

  1. பார்க்கலாம், சகா..
    வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்!!
    அப்படியே, நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com