Sid இடம் அவனது மடிக் கணினியை எடுத்துக் கொண்டு ஹால் க்கு வரச் சொன்னேன். அவன் அச்சிடப்போவதாக சொல்லி காகிதத்தை எடுத்தான். அவனிடம் elimination of waste என்ற Lean Concept ஐ சொல்லி பேப்பரில் அச்சிடப்படுவதை தடுக்க முயன்றேன். முடியவில்லை! :-)
Sid -ன் தமிழறிவின் மீது நம்பிக்கை வைத்து(!), அவனிடம் செயல் முறை இருந்த காகிதத்தை கொடுத்துவிட்டு, பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தேன். "வெங்காயத்தையும், பூண்டையும் அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்" என்பதை படித்து விட்டு வெங்காயத்தையும், பூண்டையும் எடுத்து Mixy யில் போட்டு நன்றாக அரைத்து விட்டான். அவனது அரைக்கும் திறமையை பற்றி வேறு என்னிடம் சிலாகித்துக்கொண்டன். பின்னர் படித்து விளக்கினேன். தமிழ்க்கொலையை தடுக்க எண்ணி அவனிடமிருந்த காகிதத்தை பிடுங்கிக்கொண்டு நான் Instruction கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது அங்கு வந்த நட்டு என்ற நடராஜனிடம் அம்மியைப் பற்றிய பேச்சுத் தொடர்ந்தது. Sid அவனது பாட்டி காலத்திலேயே (!) அம்மி வழக்கொழிந்து விட்டதாகச் சொன்னான். நட்டு, அவனது வீட்டில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை இருந்ததையும், நான் எனது வீட்டில் இன்றும் புழக்கத்தில் இருப்பதையும் பற்றிச் சொன்னோம். Sid -ஐ பொறுத்தவரை அம்மிக்கல்,ஆட்டுக்கல், வெண்கல பானை போன்றவை எல்லாம் அருங்காட்சிப் பொருட்களே!!!
Sid சமையல் நன்றாகச் செய்வன். ஆனால்....இந்த உப்பு, புளி, காரம் எவ்வளவு போடவேண்டும் என்பது மட்டும் அவனுக்கு ஒரு புரியாத புதிர். யாராவது சொல்லவேண்டும், இல்லை, செய்ய வேண்டும். ஒருவழியாக குழம்பு செய்து முடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்தோம். Sid அவனது வீட்டுச் சமையலைப் பற்றி அசைபோடத் தொடங்கினான். தினமும் ஒரு குழம்பு, ஒரு கறி அவ்வபோது பஜ்ஜி போன்றவற்றை உட்கார்ந்த இடத்திலிருந்தே சாப்பிட்டு வந்ததை நினைவு கூர்ந்தான்.ஹும் ...என்ன செய்ய?
சிக்கன் விருந்தை ஒரு கட்டு கட்டிவிட்டு வந்த ஹேமந்த் சுவைத்து பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக சொன்னான். Sid முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. நன்றாக இல்லை என்றால் என்னை கை காட்டிவிடுவான். இரண்டுமணி நேர போராட்டத்திற்குப் பிறகு இந்த குழம்பை ருசிக்க முடிந்தது.
இரண்டு வருடங்களில் Master of Science என்ற பட்டத்தை Industrial Engineering -ல் வாங்குகிரோமோ இல்லையோ, Master in Samayal கண்டிப்பாக ஆகிவிடுவோம்.
No comments:
Post a Comment