சாஃப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா , அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.
நாரதர் நாயுடு : வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா , அம்மாவுக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.
வித்யா : நான் MCA படிச்சிருக்கேன்.
நா. நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்
வித்யா : B.E படிச்ச பையனா ? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே
நா. நா : சரிம்மா ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம் .
வித்யா : ME MCA வைவிட பெரிய படிப்புன்னு என்னை மட்டம் தட்டுவாரே .
நா. நா : சரிம்மா . அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்
வித்யா : எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா , என் மதிப்பு குறைஞ்சிடுமே
நா. நா : என்னம்மா , BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற , ME, MCA வும் வேண்டாங்கற.அப்ப என்னதான் படிச்சிருக்கனும்.
வித்யா : PG பண்ணியிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்கக் கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.
நா. நா : முதல் கண்டிஷனே சூப்பரா இருக்கே. அடுத்து
வித்யா : எனக்கு என் கெரியர் தான் முக்கியம் ?
நா. நா : டிபன் கெரியரா ? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.
வித்யா : அங்கிள் , நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.
நா. நா : சரிம்மா. அதுக்கென்ன , வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது .
வித்யா : அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.
நா. நா : சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு
வித்யா : கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும் , பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும் , டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும் , பேசறதுல அஜித் மாதிரி தெரியனும் , டேலண்ட்ல ரவி கிருஷணா மாதிரி இருக்கனும்.
நா. நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே ?
வித்யா : ஆமாம்.மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும் . ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க . அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும் . நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன் . அதனால பயப்பட வேண்டாம் .
நா. நா : ஹிம்ம்ம் ... கேஷ்மீரி பிரியாணில இருந்து செட்டி நாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்
வித்யா : கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்டல பேச தெரிஞ்சிருக்கனும் .
நா. நா : ஏம்மா , நீ என்ன கால் செண்டருக்கா ஆள் எடுக்கற ? விட்டா மதர் டங்க் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல
வித்யா : அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.
நா. நா : சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.
வித்யா : கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்ட்ண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.
நா. நா : சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே.அப்பறம் என்ன ?
வித்யா : இப்பவெல்லாம் விசா , லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.
நா. நா : சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
வித்யா : இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.
நா. நா : உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்டஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.
வித்யா : அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க , மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி , ஜாலியா மொக்கை போடுவாங்க.
நா. நா : சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம , அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.
வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா , அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.
நா. நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா ?
வித்யா : இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா
நா. நா : ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.
வித்யா : இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.
நா. நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற
வித்யா : அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்
நா. நா மயக்கம் போட்டு விழுகிறார்.
* * * * *
நன்றி : K. முரளிதரன்
Assistant Professor,
Department of Mechanical Engineering,
PSNA College of Engineering & Technology,
Dindigul
கலைஞர் பெண்ணுக்கு சொத்து
11 months ago
i understand
ReplyDeletes
ReplyDelete