ஜோசு என்ற புத்த ஞானி, மடத்தின் வரவேற்பறைக்குள் நுழைந் தார். தான் சந்தித்த முதல் துறவியைப் பார்த்து, ''உங்களை இதற்கு முன் சந் தித்திருக்கிறேனா?'' என்று கேட்டார். துறவி, ''இல்லை'' என்று பதிலிறுக்கவே, ''அப்படியானால் என்னுடன் தேநீர் அருந்துங்கள், வாருங்கள்!'' என்றார் ஞானி.
அடுத்து, உள்ளே நுழைந்த மற் றொரு துறவியைக் கண்ட ஜோசு, ''உங்களை இதற்கு முன் சந்தித்திருக் கிறேனா?'' என்ற அதே கேள்வியை எழுப்பினார். ''ஆம் சுவாமி! நான் உங்களை முன்பே சந்தித்திருக்கிறேன்!'' என்றார் துறவி. ''அப்படியானால் மிகவும் மகிழ்ச்சி! வாருங்கள், என்னு டன் தேநீர் அருந்துங்கள்!'' என்றார் ஞானி.
இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்த புத்த மடத்து நிர்வாகியான துறவி, ஞானி ஜோசுவைப் பார்த்து, ''சுவாமி! இரண்டு துறவிகளின் இரண்டு வித மான பதில்களுக்கும் நீங்கள் ஒரே விதமாகப் பதில் கூறி, அவர்களைத் தேநீர் அருந்த அழைத்தீர்கள்! உங்கள் செயல் எனக்குப் புரியவில்லையே?'' என்று தயங்கியபடி கேட்டார்.
''நீங்கள் இன்னும் இங்கேயேதான் இருக்கிறீர்களா?''
''ஆம் சுவாமி!''
''அப்படியானால் வாருங்கள். என் னுடன் கொஞ்சம் தேநீர் அருந்துங் கள்!'' என்று புன்னகைத்தார் ஞானி.
இப்படி ஒரு கதை 'ஜென்' கதை உண்டு.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் இன்னமும் இங்குதான் இருக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள், கொஞ்சம் தேநீர் அருந்துங் கள். பேசுவோம்...
ஒரு மனிதன் தன்னைத்தானே எப்படி மதிக்கிறான் (உள்ளுறவு), பிற ருடன் எப்படிப் பழகுகிறான் (உலக உறவு) என்பதை வைத்துத்தான் அவனை ஊரும் உலகமும் எடை போடுகிறது!
அமெரிக்காவில் நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தீர்களா னால், இந்தியா போல யாரும் அங்கு பாட சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு உங்கள் அறிவை மீண்டும் சோதிப்பதில்லை. நிறுவனத்திலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காணச் செய்கிறார்கள். அதன் மூலம், பிறரு டன் அவரால் எளிதாகப் பழக முடி யுமா, அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப்போக முடியுமா என்று பார்க்கிறார்கள்.
'என்னைப் பாராட்டும் ஒருவனை, உலகின் இரண்டாவது பெரிய மனித னாக நான் நினைக்கிறேன்!' என்றொரு வாசகம் உண்டு. இனிமையாகப் பழகும் ஒருவனிடம் எல்லோரும் இனிமையாகப் பழகத் துவங்குகிறார் கள். ஹாஸ்யமாகப் பேசும் ஒருவனு டன் இருப்பதை எல்லோரும் விரும்பி வரவேற்கிறார்கள். பிறருக்கு உதவும் ஒரு மனிதனுக்கு உலகமே உதவ முன் வருகிறது.
அறிவு, திறமை, கற்பனை, துணிச்சல், முடிவெடுக்கும் திறன், வியூகம் என்ற இவற்றுடன் வாழ்வின் வெற்றிக்குத் தேவையான மிக முக்கிய குணம் 'பழகும் தன்மை'தான்.
அதிகாரத்தின் முன்னிலையிலோ, செல்வாக்கின் முன்னிலையிலோ, பணத்தின் பின்பலத்திலோ, ஒரு தலைவனின் செல்வாக்கு நிழலிலோ நீங்கள் ஒரு பதவியைப் பெறக்கூடும். ஆனால், பிறருடன் உங்களால் அனு சரித்துப்போக முடியவில்லை என் றால், சுமுகமாகப் பழக முடியவில்லை என்றால், உங்கள் பதவி நிலைக்காது. அரசியல் உலகில் இத்தகைய ஆர்ப் பாட்டக்காரர்களின் பதவி ஆட்டம் காண்பதையும், பிறகு அவர்கள் பிறர் காலில் விழுவதையும் அன்றாடக் காட்சியாகக் காண்கிறோமே!
பிறருடன் பழகுதல் என்பது ஒரு கலை. வாருங்கள், பழகுவோம்!
நன்றி : விகடன்
No comments:
Post a Comment