இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமான கேரளா, செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் படிப்பதிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேரளாவில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் எடுத்தக் கருத்துக் கணிப்பில் 90 சதவிகிதம் பேர் தொடர்ந்து படிப்பதாக தெரிவித்துள்ளனர். நம் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று தெரியவில்லை. நல்ல எழுத்தாளர்கள் இல்லையா? நல்ல எழுத்துக்களை அச்சிட பிரபல பத்திரிக்கைகள் முன் வருவதில்லையா? வேறு பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதனால் நாம் படிக்கும் பழக்கத்தை இழந்து வருகிறோமா?
எழுத்தாளர் ஒருவர் இதைப்பற்றி வருத்ததோடு அவரது இணைய தளத்தில் எழுதி இருந்தார். உலக எழுத்தாளர்களின் புத்தகங்கள் எல்லாம் லட்ச கணக்கில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் போது, தமிழ் புத்தகங்கள் மட்டும் சில ஆயிரங்களே விற்பனை ஆவதாக அவர் சொல்லியிருந்தார்.உண்மைதான். இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது பலருக்கு. தொலைக்காட்சிப் பெட்டி வருவதற்கு முன்னால் வரை, படிக்கும் பழக்கம் பலரிடம் வெகுவாக இருந்து வந்தது. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் நிறைய படித்து வந்தனர். அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரிக்கைகள் சிறுவர்களுக்காகவே வந்து கொண்டிருந்தது. மங்கையர் மலர், ராணி போன்ற வாரப் பத்திரிக்கைகள் மகளிரை மிகவும் கவர்ந்து வந்தது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு, இந்த படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. சிறுவர்கள் முதல், மகளிர், ஆண்கள் வரை அவரவர் களுக்கு தேவையான நிகழ்ச்சிகளுக்கு முன் உட்கார்ந்து விடுகின்றனர். கேரளா மக்கள் தொலைக்காட்சி மூலம் வரும் பல்வேறு உப்புச் சப்பில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்றும் ஆச்சரியத் தகவலை வெளியிட்டுள்ளனர். இதுதான் அவர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரித்து வருகிறதா என்று தெரியவில்லை. அதனால் தான் அங்கு எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. இங்கு நடிகர்களுக்கும், ஆபாசமாக நடிக்கும் நடிகைக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.கணினி விளையாட்டுகள் வந்த பிறகு நகர்புற சிறுவர்கள் எல்லாம் வீதியில் வந்து விளையாடுவதை கூட நிறுத்தி விட்டனர்.என் சம வயது உள்ள இளைநர்களில் மிகச்சிலரே படிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆங்கில புத்தகத்தை மட்டுமே விரும்பி படிக்கின்றனர். தமிழில் படிக்கும் மிகச்சிலரில் அசோக மித்திரன், ஜெய காந்தன் வரை யாரும் செல்வதில்லை.
இன்று தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க சகிக்கவில்லை. குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளும் வியாபார நிர்பந்தத்தினால் தங்களது தரத்தை குறைத்து விட்டன. எங்கு பார்த்தாலும் சினிமா பற்றிய செய்திகளே. இதை மாற்ற வேண்டுமானால் நல்ல எழுத்தாளர்கள் பலர் வர வேண்டும். பத்திரிக்கைகளும் நல்ல தரமான கட்டுரைகளுக்கு, கதைகளுக்கு சில பக்கங்களையாவது ஒதுக்க வேண்டும். இப்பொழுது வலைப்பதிவின் மூலம் பல எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்திருப்பது நல்ல விசயமே. இதன் மூலம் பலர் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வர்.
தொலைக்காட்சிப் பெட்டி வருவதற்கு முன்னால் வரை, படிக்கும் பழக்கம் பலரிடம் வெகுவாக இருந்து வந்தது. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் நிறைய படித்து வந்தனர். அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரிக்கைகள் சிறுவர்களுக்காகவே வந்து கொண்டிருந்தது. மங்கையர் மலர், ராணி போன்ற வாரப் பத்திரிக்கைகள் மகளிரை மிகவும் கவர்ந்து வந்தது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு, இந்த படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. ????
ReplyDeleteசரியான கருத்து... இப்போது டிவி பொட்டி முன்னால் பலரும் தவம் கிடக்கிறார்கள்
நன்றி!
ReplyDelete