தினமலரில் வந்த 'ஒரு மணி நேரத்தில் ஆயிரம் இட்ல்லிகள் சுடச்சுட தயார்' என்கிற செய்தி என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இந்தியா தொழில்நுட்பத் துறையில் "அதிவேக வளர்ச்சி" அடைந்து வருகிறது என்று ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை அதற்குச் சான்றாக ஒருமணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இட்லி, தோசை , சப்பாத்தி போன்ற உணவுகளை சமைக்கும் இயந்திரத்தை சான்றாக காட்டுகிறது. இதற்கான ஆய்வை மேற்கொண்டு தானியங்கி இயந்திரத்தை வடிவமைத்துள்ள நிறுவனம் ' மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்.
நம் நாட்டில் உணவுக்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம் வியக்க வைக்கிறது. இத்தனை வகையான உணவுகளை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஆனால் நம் உணவுகள் நம்மக்கு தரும் ஊட்டசத்துகளைப் பற்றியோ, அங்காடிகளில் விற்கப்படும் உணவுகளின் தரத்தைப் பற்றியோ யாரும் வெகுவாக கவலைப் படுவதாக தெரியவில்லை. இதற்காக பெரிய அளவிலே ஆராய்ச்சிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை. காப்பி பொடியில் ஆரம்பித்து பால், உப்பு, மிளகாய், மஞ்சள் தூள் போன்ற அன்றாடம் பயன் படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளின் தரம் கேள்விக் குறியாகி வருகிறது. அதேநேரத்தில், நம் பண்டைய உணவு முறையிலிருந்து சிறிது சிறிதாக மாறி வருவதால் இன்று இயற்கையாக கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துகள் கூட கிடைப்பதில்லை. அரசு நியாய விலைக்கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் தரமும் மோசமாக உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, உணவு விடுதிகளின் கிடைக்கும் உணவில் தரமோ மிகவும் மோசமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையில் தினமும் இறைச்சி யை உண்டு வந்த ஒருவருக்கு புற்று நோய் வந்தது பற்று எழுதப் பட்டிருந்தது. அதற்கான காரணம் சிக்கனில் கலக்கப்படும் ஒருவித ரசாயணம் என்றுக் கண்டறியப்பட்டது. இன்று பிழைப்புக்காக பல ஊர்களின் தங்கி வேலைப் பார்க்கும் பலரது பசியைப் போக்குவது இந்த உணவு விடுதிகள் தான். சென்னை போன்ற நகரங்களில் உணவு விடுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும்.
இவ்வாறாக வீட்டில் கிடைக்கும் உணவிலும், வெளியில் கிடைக்கும் உணவிலும் கிடைக்கும் ஊட்டச்சத்து குறைபாடிலோ, தரத்திலோ நாம் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. அரசும் மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனங்களும் இது போன்ற ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதையோ அல்லது இருக்கும் விதிகளில் முறையாக செயல் படுதுவதிலோ அக்கறை காட்டுவதில்லை. ஆயிரம் இட்லிகளை கொடுக்கும் இயந்திரங்களை செய்வதோடு, மற்ற உபயோகமுள்ள பணிகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.
கிருஷ் அவர்களே,
ReplyDeleteநம் பாரம்பரிய இட்டலியின் பெருமையை நீங்கள் நிச்சயம் அரிந்திருப்பீர்கள். அது சுலப முறையில் நிறைய உற்பத்தி செய்யப்படுவது நல்லதுதானே! அதோடு தோசை மெஷினும் செய்திருக்கிறார்கள்.
KFC, Tacobel, McDonald இவைகளில்கூட இட்டலி, தோசைகள் சுடப்படும் காலம் சீக்கிறமே வரும்.
நன்றி
எஸ்.கே
எஸ்.கே,
ReplyDeleteகருத்துக்கு நன்றி. இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல், உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த முயற்சி கொண்டால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து.
அன்புடன்,
மு.கோ