Saturday, February 7, 2009

காதலர் தினம் : சதிகாரர்களின் சதுரங்கம்




காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி பதினான்காம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் ஆனந்தக் கூச்சலிடஇது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினர் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  

மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ என்னும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு.வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்ததினங்கள்’. அன்னையர் தினம்தந்தையர் தினம்நண்பர் தினம்மனைவியர் தினம்எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும்,பூங்கொத்துகளிலும்சாக்லேட் பாக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.


காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்ஏதேனும் அதிகமாய்ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.

 


 

அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும்,அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ்ஈஸ்டர்ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம். ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்.

 

உணவகங்கள்கடைகள் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிற இதய வடிவ பலூண்களும்மன்மதன் அம்புடன் நிற்கும் படங்களும்பூக்களும் தான். இவையெல்லாம் காதலின் சின்னங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறப்பு உணவுகள் காதலர் தினத்துக்கென்றே தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல காதலர் தின திட்டங்களும் உள்ளன. சிறிய அளவில் ஆரம்பித்து இரண்டு கோடி ரூபாய் வரை செலவில் இவை நடைமுறையில் உள்ளன. ஹெலிகாப்டரில் சுற்றுதல்மிக மிக ஆடம்பர உணவகத்தில் உணவுஅரச மரியாதை என பணத்தை உறிஞ்சும் திட்டங்கள் அவை.

 

காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவில் பள்ளி இறுதியாண்டு முடித்து வெளியே வரும் மாணவ மாணவியர் கற்போடு இருந்தால் கேலிக்குரியவர்களாய் பார்க்கப் படுவார்கள். இந்தியாவிலும் அதே போன்ற ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிக்க ஊடகங்களும்காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.

 

நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.டிஸ்கோதேக்இரவு உணவக விடுதிகள்கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும்பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

 

காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும்தலைவர்களும் சொல்லவில்லை.பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து …. கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலாஅகநாநூறில் இல்லாத காதல் ரசமாகாமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

 

இந்த காதலர் தினத்தின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

 

கிபி இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும்காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திலும்பிரான்ஸிலும் புனித வாலண்டைன் மிகவும் பிரசித்தம்.

 

பண்டைய ரோமில் பிப்ரவரி என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம்வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் அன்றைக்கு இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

 

எப்படியெனினும்வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக ஆரம்பித்தது கவனிக்கத் தக்கது.சீனர்களிடம் ஏழின் இரவு’ எனும் பெயரில் அறியப்படும் இந்த காதலர் தினம் ஏழாம் மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல்அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ஹாம்லெட்நாடகத்திலும் நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் காணப்படுகிறது.

 

பிரிட்டனில் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் சிறிய அளவில் 1700 களிலேயே துவங்கிவிட்டதாக ஊர்ஜிதமற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கிபி 1840 ல் எஸ்தர் எ ஹாலண்ட் என்பவர் வாலண்டைன் தின விற்பனையை அமெரிக்காவில் துவங்கினார். அவருடைய வாழ்த்து அட்டையே வாலண்டைன் தினத்தைத் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான வாழ்த்து என்பது குறிப்பிடத் தக்கது.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும்பூக்கள் கொடுப்பதும்சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது.காதலர் தின வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதை அறிந்த வியாபாரிகள் மார்ச் 24ம் தியதியை வெள்ளை தினம் என்று பெயரிட்டு ஒரு புதிய விழா நாளாக்கினார்கள். அதாவது பிப்ரவரி 14ம் தியதி பரிசு வாங்கியவர்கள் மார்ச் 14ம் தியதி பதில் பரிசு வழங்க வேண்டும் எனும் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த தினம். கொரியாவில் இன்னும் ஒரு படி மேலே போய் ஏப்ரல் பதினான்காம் நாளை கருப்பு தினமாகக் கொண்டாடினார்கள். எந்த பரிசும் காதலர் தினத்தன்று கிடைக்கா தவர்கள் ஒன்று கூடி கருப்பு நிற உணவை உண்பார்களாம்.

 

தென்கொரியாவில் நவம்பர் 11ம் தியதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின் படி ஆவே மாதத்தின் பதினைந்தாம் நாள் ( ஆகஸ்ட் கடைசி பகுதி ) காதலர் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளை உடை உடுத்தி காதலியர் ஆடுவதைக் காணும் வேலை ஆண்களுக்கு.

 

பிரேசில் நாட்டில் டயா டாஸ் நமோரதாஸ் எனும் தினம் ஜூன் பன்னிரண்டாம் தியதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வாழ்த்து அட்டைகள் பூக்கள் கொடுத்து நாளை சிறப்பிப்பது அவர்கள் வழக்கம். அதற்கு அடுத்த நாள் திருமணங்களின் பாதுகாவலனான புனித அந்தோணியார் தினம் அங்கே கொண்டாடப்படுகிறது.

 

கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. அமீகோ சீக்ரட்டினோ - எனப்படும் ரகசிய ஸ்நேகிதனே விழாவும் அங்கே பிரபலம். பின்லாந்தில் நண்பர்கள் தினமாக இது கொண்டாடப்படுவதால் காதலுக்கு உரிய முக்கியத்துவம் இந்த விழாவிற்கு இல்லை. ரொமானியாவில் பிப்ரவரி 24ம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர். வாழ்த்து அட்டை தயாரிக்கும் ஹால்மார்க் போன்ற நிறுவனங்களுக்கு இது வேட்டை நாள். ஏதேனும் நான்கு காதல் வரிகளைப் போட்டு ஒரு அம்பை இதயத்தில் சொருகி விட்டால் அவர்களுடைய விற்பனை சூடு பிடித்துவிடும்.

 

தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும்பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து டாஸ்மார்க் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

வாழ்த்து அட்டைகள்பரிசுகள்பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா காதல் என்பது மைல் கல்லா பயணமா சிந்திப்போம். வர்த்தக வலையில் விழுந்து விடாமலும்சதிகாரர்களின் சதுரங்கத்தில் வெட்டுப்படாமலும் நம்மைக் காத்துக் கொள்வோம்.

நன்றி : அ.சேவியர்

 

Friday, February 6, 2009

2009 IPL Auction

Seventeen slots were filled in over two hours of the 2009 IPL auction in Goa. Here is a list of the players who have been bought at the auction (base price in brackets; all numbers in US$):



Pool A
Shaun Tait to Rajasthan Royals 375,000 (250,000)
JP Duminy to Mumbai Indians 950,000 (300,000)

Andrew Flintoff to Chennai Super Kings 1.55 million (950,000)
Kevin Pietersen to Bangalore Royal Challengers 1.55 million (1.35 million)

Pool B
Fidel Edwards to Deccan Chargers 150,000 (150,000)
Owais Shah to Delhi Daredevils 275,000 (150,000)
Paul Collingwood to Delhi 275,000 (250,000) 

Stuart Clark, Brad Haddin and Chamara Kapugedara were unsold.

Pool C
Tyron Henderson to Rajasthan 650,000 (100,000)
Ravi Bopara to Kings XI Punjab 450,000 (150,000)
Thilan Thushara to Chennai 140,000 (100,000)
Jesse Ryder to Bangalore 160,000 (100,000)
Kyle Mills to Mumbai 150,000 (150,000).

Ashwell Prince, Phil Jaques, Andre Nel, Luke Wright and Nuwan Kulasekara were unsold.

Pool D
Dwayne Smith to Deccan Chargers 100,000 (100,000)
Jerome Taylor to Punjab 150,000 (150,000)
Mohammad Ashraful to Mumbai 75,000 (75,000)

Samit Patel, Shakib Al Hasan, Morne van Wyk, Steven Smith, Ashley Noffke, Gulam Bodi and Daren Powell were unsold.

Pool E
Tamim Iqbal, Jon Moss, Bryce McGain, James Franklin, Aiden Blizzard, Ramnaresh Sarwan, Michael Klinger, Kaushalya Weeraratne, Prasanna Jayawardene and Dominic Thornley were unsold.

Pool F
Mashrafe Mortaza to Kolkata Knight Riders 600,000 (50,000)
George Bailey to Chennai 50,000 (50,000)

Yusuf Abdulla, Daniel Harris, Kemar Roach, Aaron Bird, Michael Dighton, Michael Hill and Brett Geeves were unsold.

Thanks : Cricinfo

Thursday, February 5, 2009

சமீபத்தில் சென்னையில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து ஆற்றிய உரையின் தொகுப்பு....

வைரமுத்து உரை - பகுதி 1


வைரமுத்து உரை - பகுதி 2



வைரமுத்து உரை - பகுதி 3




வைரமுத்து உரை - பகுதி 4


Wednesday, February 4, 2009

கதை ஒன்று... ஸ்டைல் நான்கு!!

காக்காய் நரி கதைதான் - காலம் மாற மாற நடை எப்படி மாறும் என்று எண்ணிப் பார்த்ததன் விளைவுதான் இது!

லோகத்திலே சகல ஜீவ ராசிகளும் க்ஷேமமாக ஜீவித் துக்கொண்டிருந்த காலம் அது. நத்தம்பட்டி நத்தம்பட்டி என்று ஒரு கிராமம். அங்கே கடைத் தெருவில் ஒரு ஏழைப் பாட்டியம்மாள் வடை சுட்டு விற்றுத் தன் ஜீவியத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது சனீஸ்வர பக வானின் வாகனமான காகம் அங்கு வந்து வடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு பறந்தது. கிராமத்திற்கு வெளியே அரச விருட்சம் ஒன்றில், சற்றே சிரம பரிகாரம் செய்து கொண்டு வடையை உண்ண லாம் என்று அமர்ந்தது.

அப்போது தந்திரங்களிலே வல்ல குள்ளநரி ஒன்று அவ் வழியே வந்தது. காக்கை தன் அலகில் வடை ஒன்று வைத் திருப்பதைக் கண்டது. உடனே அது சும்மாயிருக்குமோ? அது சும்மாயிருந்தாலும் அதன் குணம் அதைச் சும்மாயிருக்க விடுமோ?

''காகமே! பாட்டில் உனக்கு இணை யாரே உளர்! உன் சங் கீதத்தை நான் கேட்டு ஆனந் திக்கலாகாதா? என்னை சந் தோஷிக்க ஒரு பாட்டுப் பாடு வாயாக!'' என்று கேட்டது.

காகமும் புளகாங்கிதமுற்று ''தங்கள் சித்தம் என் பாக்கியம்'' என்று சொல்லிப் பாட ஆரம் பித்தது. வடை தரையில் விழ தந்திரசாலியான நரி அதைக் கல்விக்கொண்டு ஓடியது.

ஸ்தம்பித்து நின்றது காகம்!

து நத்தம்பட்டியோ நார்த்தம்பட்டியோ... அந்த விவாத-தர்க்க-வாதங்களுக்கு யாருமே முன்வராத ஒரு கால கட்டத்தில், அந்தக் குக்கிராமத் தின் ஒரு மூலையில்...

வாழ்க்கையின் விளிம்பைத் தொட்டுக்கொண்டிருந்த கிழவி ஒருத்தி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள்.

காலையிலே கடமை தவறா மல் கரைந்து ஊரையே உசுப்பி எழுப்பித் தங்கள் தங்கள் பணி களில் அவரவர்களை அனுப்பி வைக்கும் காக்கை ஒன்று பாட்டியின் இட்லிக் கடையி லிருந்து வடை ஒன்றினை மிக நாசூக்காக, நளினமாகக் கவ்விக்கொண்டு ஓடியது.

கிராமத்திற்கு வெளியே, சிறுவர்கள் திருட்டு 'தம்' அடிக்க வாகாக இருந்த ஓர் அரச மரத்தின் கிளையில் வந்து அமர்ந்தது அக்காகம். பலரை ஏமாற்றிப் பழக்கப்பட்டே உண்டு கொழுத்த வஞ்சக நரி ஒன்று அவ்வழியே வந்தது.

''காகமே! நீ இசையில் குயிலையும் மிஞ்சிவிடுவாயாமே? எங்கே, ஒரு பாட்டு பாடு!'' என்றது.

உள்ளம் குளிர்ந்த காகம் பாட ஆரம்பித்தது. இமைப் பொழுதில் வடை கீழே விழ, வடையுடன் நரி ஓட, அந்தப் பரிதாபக் காகம் ஏமாந்து நின்றது.

அதன் பார்வை, 'உலகமே இவ்வளவுதான்! சூதும் வாதும், போலியும் நீலியும், புளிப்பும் கசப்பும் நிறைந்தது தான்' என்பதைச் சொல்லா மல் சொல்லிற்று.

செர்ரி, ஆப்பிள் மரங்கள் நிறைந்த ஒரு ஸ்மால் வில்லேஜ் நத்தம்பட்!

அங்கே ஒரு ஓல்டு உமன் ஷூட் பண்ணிக்கொண்டி ருந்த (சுட்டுக்கொண்டிருந்த... ஹி..ஹி!) வடையை ஒரு டார்க் பிளாக் க்ரோ கவ்விச் சென்று, ஒரு மரத்தில் உட் கார்ந்தது.

அந்த வழியே ஒரு கன் னிங் ஃபாக்ஸ் வந்தது. அது க்ரோவிடம் இருந்த வடை யைப் பார்த்துவிட்டது.

''க்ரோ, க்ரோ! நீ எல்விஸ் பிரெஸ்லியைவிடப் பிரமாத மாகப் பாடுவாயாமே... கமான், ஸிங் எ ஸாங்!''

க்ரோ ரொம்ப ஹாப்பி யாகி ''ஓ.. ஷ்யூர்!'' என்று சொல்லிப் பாட ஆரம்பித்தது. வடை விழ, நரி அதை கபால் என்று கவ்விக்கொண்டு ரன்னிற்று.

புவர் க்ரோ, தான் இப்படி ஃபூலிஷாக நடந்துகொண் டோமே என்று பிறகு ரொம் பவும் ஃபீல் பண்ணிற்று!

(உங்கள் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் இதைக் கொடுங்கள். கம்ப்யூட்டர் கதையைச் சொல்லும்!)

கதையை





நன்றி : விகடன்

Tuesday, February 3, 2009

உலக புற்று நோய் தினம்



புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், தடுக்கும் முறைகள், சிகிச்சை பற்றிய தகவல்களைப் பரப்பவும், புற்றுநோய் தினம் இன்று ( பிப்ரவரி 4 ) அனுசரிக்கப் படுகிறது. "உலக புற்று நோய் எதிர்ப்புக் கழகம்" என்கிற அமைப்பு இதை முன்னின்று நடத்துகிறது. 

புற்றுநோய் (Cancer) கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?


செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில  உணவுகள்,சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.


புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்

  • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
  • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி - புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது. ஒரே கண்டிஷன், நோயைக் கண்டுபிடிப்பதிலும் சிகிச்சை தொடங்குவதிலும் தாமதம் கூடாது. இப்போது நிறையவே மருத்துவம் முன்னேறிவிட்டது. 'போட்டோவுக்கு மாலை போட்டுக் கண்ணீர் விடுவதுதான் முடிவு' என்று சீரியல்களிலும் சினிமாக்களிலும் காட்டுவது சமூக துரோகம்!

புற்றுநோயைப் பற்றிய சில தகவல்கள்.....
  • இன்று மனித உயிர்களை பறிப்பதில் புற்றுநோய் க்குதான் முதலிடம்.
  • உலகம் முழுவதும் 2005 இருந்து 2015 வரை புற்றுநோயால் இறக்கப் போவோரின் எண்ணிக்கை எட்டு கோடி
  • சிகரட் பிடிப்பதினால் புற்றுநோய் வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 2008 ல் மட்டும் 170000 பேர்
  • உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது மற்றும் சரிவிகித உணவு இல்லாதலால் மட்டும் சுமார் 200000 பேர் புற்றுநோய் வந்து 2008 ல் இறந்துள்ளனர்
  • இந்தியாவில் புகைப் பிடிப்போரின் சதவிகிதம் 16%; அதில் ஆண்கள் 30% பெண்கள் 2.5%

Sunday, February 1, 2009

Channel Newsreader in Karachi!!!

Wednesday, January 28, 2009

ஆயிரம் ஜன்னல்

'அன்பு, சந்தோஷம், பரவசம் காரணமாக உதிர்க்கும் கண்ணீரால் உங்கள் கன்னங்கள் ஈரமாகாமல் இருந்தால், நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சுவையை அறியவில்லை என்று அர்த்தம்!'

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

லியும் இசையும்...சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றிலும் இசை இருந்திருக்கிறது. என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். சிசுவாக நான் தொட்டிலில் இருந்த காலத் திலிருந்தே அவள் பாடல்களைக் கேட்டு வந்திருக்கிறேன். சமைக்கும்போது பாடுவாள். பூஜை செய்கையில் பாடுவாள். எங்களுக்குச் சாதம்  ஊட்டுகையில் பாடுவாள். பாடாத நேரங்களில் நன்றாக வீணை வாசிப்பாள்.

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சாஸ்திரிய இசையில் ஆர்வம். எங்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. எம்.எஸ்., மதுரை மணி ஐயர், சைகோல் என ஏழெட்டு இசைத் தட்டுகளை மறுபடி மறுபடி ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

என் நண்பர்களுக்கு சினிமாப் பாடல்களில் ஆர்வம். ஆங்கில இசையில் ஆர்வம். என் சகோதரர்களும் நண்பர்களும் ரேடியோவைத் திருகி பாடல்களைக் கேட்பார்கள்.

எப்போதும் காற்றில் மிதந்தபடி இருந்த இசையைத் தேடிப் போய்க் கற்க வேண்டும் என்று ஏனோ எனக்கு ஒரு போதும் ஆர்வம் வந்ததில்லை. கற்றுக் கொள்வதில் மட்டுமல்ல, எந்தக் குறிப்பிட்ட இசைத்தட்டைச் சேகரிக்கவும் எனக்கு ஆர்வம் வந்ததில்லை.சொல்லப் போனால், எந்த இரைச்சலும் இல்லாமல் அமைதியாக, நிசப்தமாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.

நண்பர்களோடு நேரத்தைச் செலவு செய்கையில், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாயிருந்த பாப் இசையைக் கேட்பது தவிர்க்க முடியாமல் போனது. இசையைக் கேட்க வேண்டும் என்று ஏக்கமில்லாமலேயே இசையைக் கேட்டுக்கொண்டு இருந்த காலம் அது. நூற்றுக்கணக்கான இசை டேப்களைச் சேகரித்த நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும். என் நண்பர்கள் மட்டுமல்ல. என் சகோதரனிடம்கூட கேசட்கள் இருந்தன. ஆனால், என்னிடம் ஒரு கேசட் கூடக் கிடையாது.

வெகு பிற்பாடு, எனக்கு 22, 23 வயதிருந்தபோது, பல மணி நேரங்கள் தியானத்தில் ஈடுபட்டேன். மிக அமைதியான இரவில், மிக நிசப்தமான சூழலில், தியானத்தில் இருக்கையில் எனக்குள் இனிமையான இசை போன்ற ஒலிகள் ஒலிப்பதைக் கவனித்தேன். எந்த இசை எனக்கு முன்பு தொந்தரவாகத் தோன்றியதோ, அதே இசை என்னைஅறியாம லேயே எனக்கு மிக இனிமையான உணர்வைத் தந்தது. அதுபற்றி நான் விவரித்துச் சொன்னால், ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாகக் கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

இசை ஓர் அற்புதமான கருவி. இசையின் துணையுடன் மற்றவர்களை அணுகுவது சுலபம் என்று அப்போதுதான் உணர்ந்தேன். அதனால்தான், என் வகுப்புகளில் இசையை அதிகம் பயன்படுத்துகிறேன்.

இசையில் நான் விற்பன்னன் அல்ல. ஆனால், கண் களை மூடி அமர்ந்தால், இசை ஓர் அற்புதமான கட்ட மைப்பு என்பதைக் கவனிக்கிறேன். நிசப்தம் போல் ஊடுருவி உள்நுழைவதல்ல, இசை. நிசப்தத்தின் ஆழத்துடன் ஒப்பிட்டால், இசை ஓரளவு மேம்போக்கா னதுதான். ஆனால், நிசப்தத்தை எவ்வளவு பேரால் ரசிக்க முடிகிறது? ஏதோ ஒரு கட்டமைப்பைத்தானே மனிதன் ரசிக்கிறான்? பேசுவதைவிட பாடினால்தான் கட்டமைப்பு இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், இசையைக் கற்றுக்கொண்டதில்லை. இனி கற்பதற்கான நேரமும் இல்லை.

பாடுவேன். அதில் கவிதை இருக்குமே தவிர, இசை நுணுக்கங்கள் இருக்காது. மனிதரின் நாடி நரம்புகளை ஊடுருவும் ஒலியின் அபார சக்தியைப் பயன்படுத்தும் விதத்தை அறிந்து தேர்ந்திருக்கிறேன். அதன் மூலம் அவர்களை வேறு நிலைகளுக்கு என்னால் எடுத்துச் செல்ல முடிகிறது. என் பாடலால் அதீத மகிழ்ச்சியை உண்டு பண்ண முடியும். கண்களில் கண்ணீரைக் கொண்டு வர முடியும்.

மற்றபடி எனக்கு ராகம், தாளம் இதெல்லாம் தெரியாது. சரிகமபதநிச கூட முறையாக சொல்லத் தெரியாது. எங்கள் பள்ளிக் குழந்தைகள்கூட சிறப்பாகச் சொல்கிறார்கள்.

தியானலிங்கத்தின் சுற்றுப்புறம் மிக மிக அமைதியாகவே பராமரிக்கப்படுகிறது. அந்த நிசப்தம் மிகவும் அழுத்தமாக இருப்பதாகப் பலர் சொன்னதால், அதில் ஒரு சிறு தளர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். நாளின் குறிப்பிட்ட நேரத்தில் சில ஒலிகளை எழுப்பி, அந்த ஒலிகளைச் சமர்ப்பிக்கும் நாத ஆராதனை என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சில பிரம்மசாரிகளை அழைத்தேன். ''இந்த ஆழமான நிசப்தத்தைத் தளர்த்துவதற்கு, கேட்பதற்கு இனிமையான ஒலி இருந்தால் நல்லது. ஏதாவது நல்ல பாடல்களைப் பாடுங்கள்'' என்று சொல்லிவைத்தேன்.

மிக்க ஆர்வத்துடன் இரண்டு பிரம்மசாரிகள் வந்தனர். 'நடராஜா நடராஜா' என்று பஜனைப்பாடல் களைத் தினம் பாடினர். கோவையிலிருந்து வந்திருந்த அன்பர்கள் சிலர் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு 'சத்குரு, தயவுசெய்து அந்த பிரம்மசாரிகள் பாடுவதை உடனே நிறுத்துச் சொல்லுங்கள்' என்று கோரிக்கை வைத்தனர். ஏன் என்று அறிய பாடலைக் கேட்டேன். மயக்கம் வந்தது. இசையின் இனிமையினால் அல்ல... அந்த கோரமான ஓசையால்!

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹேண்டல் என்ற பிரபல இசைக் கலைஞருக்குப் பொறுமை குறைவு. அபஸ்வரத்தை அவரால் தாங்க முடியாது.

இது பற்றித் தெரிந்திருந்த ஒரு குறும்புக்கார சிஷ்யன், இளவரசர் முன் நடக்க இருந்த கச்சேரியில் ஹேண்டலுடன் விளையாடத் தீர்மானித்தான். அவர் வரும் முன் குழுவினர் சுருதி சேர்த்து வைத்திருந்த கருவிகளில் சுருதி மாறி வைத்துவிட்டான்.

சிம்பொனி துவங்கியதும், ஒவ்வொரு இசைக் கருவி ஒவ்வொரு சுருதியில் ஒலியெழுப்ப, இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் நடக்கும் கூத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்க, ஹேண்டல் தன்னிலை இழந்தார். குழுவினரின் இசைக் கருவிகளைப் பிடுங்கி எறிந்தார். சிலவற்றை மேடையில் மோதி உடைத்தார். ஆத்திரத்தில் கால்களை மேடையில் மாறி மாறி உதைத்தார்.

இளவரசரே வந்து அவரைச் சமாதானம் செய்ய வெகு நேரம் பிடித்தது.ஹேண்டல் அளவுக்கு நான் பொறுமை இழக்கவில்லை. ஆனால், உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

ஆசிரமத்தில் இருப்பவர் களில் சிலரை முறையாக இசை கற்பதில் ஈடுபடுத்தினேன். சில மாதங்களில் மெள்ள மெள்ள அவர்கள் இசையில் சிறப்பான பயிற்சி பெற்றார்கள். ஈஷாவின் அற்புதமான இசைக் குழுவாக 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' பிறப்பெடுத்தது. இன்று அபார ஆற்றலுடன் வளர்ந்துவிட்டது.

இப்படித்தான், என் வாழ்வில் இசையை நான் விரும்பித் தேர்ந் தெடுக்காதபோதும், இசை எப்போதும் என்னுடன் இசைந்து இருக்கிறது.

 நன்றி : விகடன்


 
Watch the latest videos on YouTube.com