- இந்திய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்தித்து தேசிய கட்சிக்கு ஓட்டு அளித்து உள்ளனர். இந்திய போன்ற மிகப் பெரிய, இன, மொழிகளால் வேறுபட்ட நாட்டில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்க முடியாது. 1991க்கு பிறகு தேசிய கட்சிகளால் பெரும்பான்மை பெற முடியாததால், மாநில கட்சிகளையும், சிறு சிறு ஜாதிக் கட்சிகளையும் நம்பியே இருந்து வந்தது. இதனால் பல பிக்கல்கள், பிடுங்கல்கள். அனைவரையும் "திருப்தி" படுத்த வேண்டிய நிலை. எந்த ஒரு முடிவையும் தெளிவாக, உறுதியாக எடுக்க முடியாத நிலை. ஆட்சியை காப்பாற்றவே அதிக நேரம் செலவிடப் படவேண்டிய கட்டாயம். இந்த முறை கங்க்ரச்ஸ் அதிக இடங்களை பெற்றதால், நிலையான, உறுதியான அரசை எதிர் பார்க்க முடியும்.
- பழையன கழிதலும் புதியன புகுதலும் - என்கிறது நன்னூல். காலத்துக் கேற்ப கொள்கைகளில் மாற்றம் வருவதில் தவறேதும் இல்லை. ஆனால், தோழர்கள் பிடிவாதமாக "பல" கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது. அதனால் இந்த முறை வலது, இடதுகளுக்கு தக்க பாடம் புகட்டிவிட்டனர். இனிமேலாவது, தங்கள் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, கொஞ்சம் மாறினால் நல்லது. இல்லையெனில், மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் மறந்து விடவேண்டியது தான்.
- அரசியல் பச்சோந்திகளை மக்கள் அடையாளமும் கண்டுக் கொண்டு விட்டனர். தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.
- தென்னிந்தியாவில் அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. எம்ஜியார், என்டியார் போன்றோரின் வெற்றி பலரையும் அரசியலுக்கு வர தூண்டியது; தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிக்க முயன்ற சிரஞ்சீவி தோல்வியை சந்தித்து இருக்கிறார். வெறும் பதினெட்டு தொகுதிகளோடு கனவு கலைந்தது. மிக சாதரணமாக வெற்றி பெறுவர் என்று எதி பார்க்கப்பட்ட சிரஞ்சீவி தனது சொந்த ஊரிலேயே தோல்வியை தழுவி இருக்கிறார்.திருப்பதியில் கூட வெற்றி வித்தியாசம் மிகக் குறைவு. கட்சி ஆரம்ப விழாவில் கூடிய கூடத்தைக் கண்டு மிரண்டு போனவர்கள் இப்போது சிரிக்கிறார்கள். இவரின் தோல்வி மற்றவர்களை ஒருகணம் சிந்திக்க செய்யும்.
- பொருளாதாரம் பாதிப்பு, விலை வாசி பிரச்னை, தொடர் குண்டு வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், காங்கிரசஸ் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சரியான எதிக் கட்சி இல்லாதது. பாரதிய ஜனதா கட்சியை இன்னும் ஒரு முழு தேசியக் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களது இந்துத்துவ கொள்கை. பல ஜாதி, மொழி, இன மக்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கட்சியாக தங்களை சித்தரித்துக் கொள்கிறது. இந்த தோல்வியின் மூலம், தங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டல் அவர்களுக்கு நல்லது.
- இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார் செய்ய ஊழல் செய்ய தூண்டும். சாமானியர்கள் தேர்தலில் நிக்க தயங்கும் நிலை ஏற்படும். இதற்கு ஏழை மக்களை குறை சொல்ல முடியாது. பணத்தேவையை பூர்த்தி செய்ய பணத்தை வங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டும் போடுகிறார்கள், நன்றி உள்ளவர்கள்!
- அடுத்ததாக, அரசு இயந்திரத்தை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிவகங்கை, விருது நகரில் நடந்த குழப்பங்கள் அதை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளது. அரசு பணியாளர்கள் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் , நேர்மையாக பணியாற்றினால் நல்லது.
Sunday, May 17, 2009
தேர்தல் 2009 - ஒரு பார்வை
Tuesday, April 7, 2009
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) என்பது வாக்கைப் பதிவு செய்யும் வசதியளித்து, அப்பதிவைச் சேமித்து, பின்னர் வாக்குப்பதிவின் இறுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஓட்டுச் சீட்டு அடிப்படையிலேயே, தேர்தல் நடைமுறைகள் துவங்கின. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கடந்த சில தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்ததன் அவசியம் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்வோம். பல கோடி மக்கள் பங்கேற்ற இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகளால் ஏற்பட்ட கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் தடுக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின் னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகின்றன. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்படுத் தப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஒரு ஓட்டுச்சீட்டு மட்டுமே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது.
இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு யூனிட், ஓட்டுப்பதிவு யூனிட் என இரு யூனிட்களை கொண்டது. கட்டுப்பாட்டு யூனிட் தேர்தல் அதிகாரி இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு யூனிட் வாக்காளர் ஓட்டளிக்கும் இடத்திலும் இருக்கும். இந்த இரு யூனிட்களும் ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக் கும். ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக் கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத் தானை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய் யும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப் பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத் தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற் கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். 'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும். இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித் திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட் பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
விளக்க படங்கள்:
நன்றி : http://ta.wikipedia.org/விக்கி, www.eci.gov.in/








