Friday, July 10, 2009
திருந்தாத தமிழ் சினிமா!
Tuesday, June 16, 2009
யாரை நம்புவது?
ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டு. ஒரு வருடத்திற்கு முன்னால் எதேச்சையாக யூடுபில் தென்பட்டது. சில வாரங்கள் மொக்கையாக இருந்தாலும், சிலது ரொம்ப நன்றாக இருக்கும். இப்படியும் மக்கள் இருக்கிறார்களா என்று வியப்பூட்டும். இந்த வாரம், எல்லோரிடமும் நம்பிக்கை வைக்கலாமா? கூடாதா? என்று ஒரு விவாதம். இதில் யாரையும் நம்பக்கூடாது என்ற பிரிவில் சிலர் பேசியது கொடுமையாக இருந்தது. ஒரு பெண் சொல்கிறார்: "அமாவாசையில் பொறந்தவனை நம்பமாட்டேன்! ஏன்னா, எங்க பாட்டி சொல்லியிருக்காங்க, அமாவாசையில பொறந்தவன் திருடனா இருப்பன்னு!". இன்னும் சிலர் குறிப்பிட ராசியில் பொறந்தவனை நம்பமாட்டேன் என்று சொன்னார்கள். ஏன்னா அந்த ராசிக்கும் அவங்களுக்கும் ஒத்துக்காதான்! ஒரு கணிப்பொறியாளர் சொல்கிறார் "ஆந்திர காரனையும், பெங்கலியையும் நம்ப மாட்டேன். இப்படி ஒவ்வொருவரும் சொன்ன காரணங்களை பார்த்த போது, ரொம்ப வேதனையாக இருந்தது.
இது மாதிரி நம்பிக்கை இல்லாதவங்களை அவ்வபோது பார்ப்பதுண்டு. அண்மையில், நண்பர் ஒருவருடன் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நாளே அவர் சொன்னார், "இந்த உலகத்துல யாரையும் நம்ப மாட்டேன். யாருமே நல்லவங்க இல்லை". அவருடைய நடவடிக்கைகளை பார்த்தல் ஒரு மாதிரி restless ஆகா இருக்கும். வெளியே கிளம்பறேன் ன்னு சொல்லிட்டு, திரும்பி தீடீர்ன்னு வந்து பார்ப்பார். எப்போதும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார். யாராவது நம்மளை நம்பிக்கை இல்லாமல் பார்க்கும் போது ஒரே எரிச்சலா வ்ரும். இந்த நம்பிக்கை இல்லா தன்மை முத்திப் போயி ஒரு மான நோயாளி மாதிரி ஆயிடறாங்க.
ஒன்றரை வருடமாக கல்லூரியில் கூடப் படித்த, ஒரே வீட்டில் வசித்த நண்பர், திடீரென்று யாரிடமும் பேசாமல் சற்று ஒதுங்கினர். என்னடாவென்று பார்த்தால், அவருடைய வேலை வாய்ப்பை நான் பறித்து விடுவேன் என்று அஞ்சி, பேசுவதை தவிர்த்து வந்தார்! நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஷாலினி சொன்னதுபோல், ஏதோ ஒரு சில கசப்பான நிகழ்ச்சிகளை மனதில் வைத்துக்கொண்டு, ஒட்டு மொத்த மக்களையும் அதே பார்வையில் பார்க்கின்றனர். ஒரு மலையாளி தவறு செய்தால், ஒட்டு மொத்த மல்லுக்களும் கேவலமானவர்கள் என்று நினைப் பவர்கள்! அடுத்தடுத்து சில மோசமான அனுபவங்கள் நேரும் போது, யார் மேலும் நம்பிக்கை இல்லாமல் போக, தனிமையில் கொஞ்சம் கொஞ்சம் ஆக மன வியாதிக்கு உட்படுபவர்களும் உண்டு. எல்லாரிடமும் அதீத நம்பிக்கை வைப்பது இந்த காலத்தில், இயலாத காரியம் என்றாலும், ஒரு சில நம்பிக்கைக்குரிய நண்பர்களையாவது பெறுவது அவசியம். கேட்காமலேயே பணம் வேண்டுமா என்று கேக்கும் நண்பனும், தன்னுடைய கடவுச் சொல்லகூட அவசரத்துக்கு என்னிடம் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர்கள் எனக்கு இருப்பதை நினைக்கும் பொது நிறைவாக உள்ளது.
Monday, May 25, 2009
இணையத்தில் தமிழ் பாடநூல்கள்
நண்பர் ஒருவர் இந்த இணையதள முகவரியை அனுப்பியிருந்தார். என்னவென்று பார்த்த பொழுது, ஒண்ணாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை அணைத்து பட நூல்களும் PDF கோப்புகலாக தரவேற்றம் செய்யப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் மட்டும் அல்லாது, தெலுகு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளிலும் இருந்தன. ஸ்டேட் போர்டு தனியாகவும், Matriculation தனியாகவும் வகைப் படுத்தப் பட்டிருந்தது. இது தவிர, முக்கிய வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய வசதியிருந்தது....அருமை!
பாடங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்க பத்தாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். தமிழ் பாடம்...நிறைய மாறியிருந்தது. அப்துல் கலாம் எழுதிய ஒரு பாடம், அறிவியல் சம்பந்தமாக சில பாடங்களை காண முடிந்தது. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், நா.பார்த்தசாரதி போன்றோரின் சிறுகதைகள் இருந்தன. ஆனால் வழக்கமாக இருக்கும் செய்யும் பகுதி மட்டும் மாறவே இல்லை. அருஞ்சொற்பொருள், இலக்கணம் படிக்க சுவாரசியமாக இருந்தது. நிறைய தமிழ் சொற்களை கற்றுக் கொள்ளலாம். நல்ல தமிழ் எழுதப் பழகிக் கொள்ளலாம்! (வலைப் பதிவர்களுக்கு உதவும்).நேரம் இருந்தால் உலாவிப் பாருங்கள்.
அப்படியே, கொஞ்சம் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் பக்கம் சென்றேன். ம்ம் பரவாயில்லை. கொஞ்சம் மாறி இருக்கிறது.
இந்த முயற்சிகள் நகர் புறம் உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவும். நகர் புறங்களில் இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இணையத்துடன் கூடிய கணிப்பொறி கிடைத்துவிடுகிறது. ஆனால், கிராமப் புறங்களில் வாழும் மாணவர்கள் பயன்பெற கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பத்தாம் வகுப்பு, பணிரண்டம் வகுப்பு முடிவுகளை தெரிந்துக் கொள்ளவே கணினியை பயன்படுத்துகிறார்கள்.
என்றாலும் ..இந்த நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.
Friday, August 29, 2008
தமிழ் அகராதி
1. தமிழ் அகராதி
தேடும் முறை:
நீங்கள் பொருள் காண விரும்பும் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலமாகவோ இருக்கலாம். படிவத்தின் இடது புறம் காணும் தொங்கு பட்டியலில் இருந்து தேடும் சொல் எந்த வகையைச் சார்ந்தது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது தேடுதலை விரைவாக்கும். நீங்கள் தேட கொடுக்கும் எழுத்துக்கள் சொல்லின் தொடக்கமாக இருந்தால் சிறிய சதுரத்தைச் சொடுக்கிக் கொள்ளுங்கள். இது தேடுதலை எளிதாக்கும். தேடும் சொல்லை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தரலாம்.
2. தமிழ் ஆங்கில அகராதி பதிவிறக்கம் செய்ய
ஆங்கிலக் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.
3. தமிழ் ஆங்கில அகராதி - 16462 சொற்கள்
தமிழ் -> ஆங்கிலம் , ஆங்கிலம் -> தமிழ் மற்றும் தமிழ் -> ஜெர்மன்,
ஜெர்மன் -> தமிழ்
4. இலவச தமிழ் அகராதி பதிவிறக்கம் செய்ய