Monday, May 25, 2009

இணையத்தில் தமிழ் பாடநூல்கள்


நண்பர் ஒருவர் இந்த இணையதள முகவரியை அனுப்பியிருந்தார். என்னவென்று பார்த்த பொழுது, ஒண்ணாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை அணைத்து பட நூல்களும் PDF கோப்புகலாக தரவேற்றம் செய்யப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் மட்டும் அல்லாது, தெலுகு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளிலும் இருந்தன. ஸ்டேட் போர்டு தனியாகவும், Matriculation தனியாகவும் வகைப் படுத்தப் பட்டிருந்தது. இது தவிர, முக்கிய வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய வசதியிருந்தது....அருமை!

பாடங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்க பத்தாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். தமிழ் பாடம்...நிறைய மாறியிருந்தது. அப்துல் கலாம் எழுதிய ஒரு பாடம், அறிவியல் சம்பந்தமாக சில பாடங்களை காண முடிந்தது. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், நா.பார்த்தசாரதி போன்றோரின் சிறுகதைகள் இருந்தன. ஆனால் வழக்கமாக இருக்கும் செய்யும் பகுதி மட்டும் மாறவே இல்லை. அருஞ்சொற்பொருள், இலக்கணம் படிக்க சுவாரசியமாக இருந்தது. நிறைய தமிழ் சொற்களை கற்றுக் கொள்ளலாம். நல்ல தமிழ் எழுதப் பழகிக் கொள்ளலாம்! (வலைப் பதிவர்களுக்கு உதவும்).நேரம் இருந்தால் உலாவிப் பாருங்கள்.

அப்படியே, கொஞ்சம் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் பக்கம் சென்றேன். ம்ம் பரவாயில்லை. கொஞ்சம் மாறி இருக்கிறது.


இந்த முயற்சிகள் நகர் புறம் உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவும். நகர் புறங்களில் இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இணையத்துடன் கூடிய கணிப்பொறி கிடைத்துவிடுகிறது. ஆனால், கிராமப் புறங்களில் வாழும் மாணவர்கள் பயன்பெற கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பத்தாம் வகுப்பு, பணிரண்டம் வகுப்பு முடிவுகளை தெரிந்துக் கொள்ளவே கணினியை பயன்படுத்துகிறார்கள்.

என்றாலும் ..இந்த நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

Sunday, May 24, 2009

டி ராஜேந்தரின் காதல் கவிதை

Friday, May 22, 2009

இந்த ஆண்டு ஐபிஎல்

கடந்த ஒரு மாதமாக பாடாய் படுத்திக் கொண்டிருந்த ஐபிஎல் முடியப் போகிறது. கடந்த ஆண்டு ICL க்கு போட்டியாக தொடங்கப்பட்ட இந்த தொடர் நல்ல வரவேற்பை வெற்றது. BCCI க்கு, அணி முதலாளிகளுக்கும், நட்சத்திர வீரர்களுக்கும் நல்ல பணம் கொழித்தது. உள்ளூர் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாகவும், சர்வதேச வீரர்களோடு பழகவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தி முடிக்க வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிய 'மோடிக்கு' ஆரம்பத்திலேயே பிரச்னை. தேர்தல் நடப்பதால், போட்டிகளை நடத்த பாதுக்கப்பு கொடுக்க முடியாது என்று இந்திய அரசாங்கம் கைவிரித்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் நடத்தி முடிப்போம் என்று கோதாவில் இறங்கிய BCCI, ஸௌத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நாடியது. இறுதியாக, "இந்தியன்" ப்ரீமியர் லீக் சவுத் ஆப்ரிக்க சென்றது.

இதை தொடர்ந்து, அணிகளில் பல குழப்பங்கள், மாற்றங்கள். கல்கத்தா அணியில் இருந்து கங்குலியின் காப்டன் பதவிக்கு கல்தா கொடுக்கப் பட்டது. மல்லையாவும் பீடர்சனை அதிக விலை கொடுத்து வாங்கி, கப்டனாகவும் ஆக்கினார். லட்மன் ஓரம் கட்டப் பட்டார். பிளின்ட் ஆப், டுமினி, வார்னெர், மொர்டச்சா போன்ற புதிய முகங்கள் வந்தன. மிகுந்த எதிர்ப்பார்போடு தொடங்கப்பட்ட IPLக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. இந்த முறை எல்லா அணிகளும் சம பலத்தில் இருந்ததால், அரை இறுதிக்கு முன்னேறுவதில் கடுமையான போட்டி. KKR மட்டும் அடிமேல் அடி வாங்கியது. நல்ல வீரர்கள் இருந்தும், குழுவாக ஒன்று சேர முடியாமல் தோற்றுப் போனது. "போலி" IPL வீரரின் வலைப்பதிவால் மேலும் பல குழப்பங்கள். வெறுத்துப் போனே ஷாரூக், இந்திய ஓடிவிட்டார். சச்சின் னின் மோசமான தலைமையினால், மும்பை இந்தியனும் வெளியேறியது. ஜெயா சூரிய சோபிக்காதது பெரிய இழப்பு. சென்ற வருடம் இருந்த மார்ஸ், லீ , ஹோப்ஸ் ஆகியோர் இல்லாததால், பஞ்சாப் தடுமாறியது. யுவியும் ஒரு சில போட்டிகளை தவிர , பெரிசாக ஒன்னும் செய்யவில்லை. சாதரண அணியை வைத்துக் கொண்டு போராடிய ராஜஸ்தானும் வெளியேறியது. ஸ்வப்னில், பதான், ஜடேஜா, ஸ்மித் போன்றோர் சிறப்பாக விளையாடவில்லை.

சென்ற முறை அடிவாங்கிய பெங்களுரு, டெக்கான் அரை இறுதியில். சேவாக், காம்பிர் ஜோடி சோடை போனாலும் டெல்லி நன்றாக விளையாடியது. மோசமான பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு டோனியும் கரை ஏறி விட்டார். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட டெல்லி, முதல் அரை இறுதியில் மூட்டை கட்டியது. கில்லி டெல்லியை பதம் பார்த்து விட்டார். அடுத்ததாக நாளை, சென்னை யும் பெங்களுரும் மோது கின்றன. யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனக்கென்னவோ சென்னை கோப்பையை வெல்லும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!!!

Sunday, May 17, 2009

தேர்தல் 2009 - ஒரு பார்வை

தேர்தல் முடிந்து விட்டது. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், கடினமான மேலாண்மைப் பணிகளில் ஒன்றாகக் கருதப் படும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அரசியல் வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும், விமர்சகர்களும் ஒன்று நினைக்க, மக்கள் வேறொன்று நினைத்து விட்டார்கள். ஆனால், சரியான நல்ல தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள். இந்த முடிவில் இருந்து தெரிந்துக் கொள்ளக்கூடிய நல்ல , கெட்ட விசயங்களாக எனக்குப் பட்டவை:
  • இந்திய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்தித்து தேசிய கட்சிக்கு ஓட்டு அளித்து உள்ளனர். இந்திய போன்ற மிகப் பெரிய, இன, மொழிகளால் வேறுபட்ட நாட்டில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்க முடியாது. 1991க்கு பிறகு தேசிய கட்சிகளால் பெரும்பான்மை பெற முடியாததால், மாநில கட்சிகளையும், சிறு சிறு ஜாதிக் கட்சிகளையும் நம்பியே இருந்து வந்தது. இதனால் பல பிக்கல்கள், பிடுங்கல்கள். அனைவரையும் "திருப்தி" படுத்த வேண்டிய நிலை. எந்த ஒரு முடிவையும் தெளிவாக, உறுதியாக எடுக்க முடியாத நிலை. ஆட்சியை காப்பாற்றவே அதிக நேரம் செலவிடப் படவேண்டிய கட்டாயம். இந்த முறை கங்க்ரச்ஸ் அதிக இடங்களை பெற்றதால், நிலையான, உறுதியான அரசை எதிர் பார்க்க முடியும்.
  • பழையன கழிதலும் புதியன புகுதலும் - என்கிறது நன்னூல். காலத்துக் கேற்ப கொள்கைகளில் மாற்றம் வருவதில் தவறேதும் இல்லை. ஆனால், தோழர்கள் பிடிவாதமாக "பல" கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது. அதனால் இந்த முறை வலது, இடதுகளுக்கு தக்க பாடம் புகட்டிவிட்டனர். இனிமேலாவது, தங்கள் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, கொஞ்சம் மாறினால் நல்லது. இல்லையெனில், மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் மறந்து விடவேண்டியது தான்.
  • அரசியல் பச்சோந்திகளை மக்கள் அடையாளமும் கண்டுக் கொண்டு விட்டனர். தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.
  • தென்னிந்தியாவில் அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. எம்ஜியார், என்டியார் போன்றோரின் வெற்றி பலரையும் அரசியலுக்கு வர தூண்டியது; தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிக்க முயன்ற சிரஞ்சீவி தோல்வியை சந்தித்து இருக்கிறார். வெறும் பதினெட்டு தொகுதிகளோடு கனவு கலைந்தது. மிக சாதரணமாக வெற்றி பெறுவர் என்று எதி பார்க்கப்பட்ட சிரஞ்சீவி தனது சொந்த ஊரிலேயே தோல்வியை தழுவி இருக்கிறார்.திருப்பதியில் கூட வெற்றி வித்தியாசம் மிகக் குறைவு. கட்சி ஆரம்ப விழாவில் கூடிய கூடத்தைக் கண்டு மிரண்டு போனவர்கள் இப்போது சிரிக்கிறார்கள். இவரின் தோல்வி மற்றவர்களை ஒருகணம் சிந்திக்க செய்யும்.
  • பொருளாதாரம் பாதிப்பு, விலை வாசி பிரச்னை, தொடர் குண்டு வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், காங்கிரசஸ் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சரியான எதிக் கட்சி இல்லாதது. பாரதிய ஜனதா கட்சியை இன்னும் ஒரு முழு தேசியக் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களது இந்துத்துவ கொள்கை. பல ஜாதி, மொழி, இன மக்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கட்சியாக தங்களை சித்தரித்துக் கொள்கிறது. இந்த தோல்வியின் மூலம், தங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டல் அவர்களுக்கு நல்லது.
  • இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார் செய்ய ஊழல் செய்ய தூண்டும். சாமானியர்கள் தேர்தலில் நிக்க தயங்கும் நிலை ஏற்படும். இதற்கு ஏழை மக்களை குறை சொல்ல முடியாது. பணத்தேவையை பூர்த்தி செய்ய பணத்தை வங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டும் போடுகிறார்கள், நன்றி உள்ளவர்கள்!
  • அடுத்ததாக, அரசு இயந்திரத்தை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிவகங்கை, விருது நகரில் நடந்த குழப்பங்கள் அதை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளது. அரசு பணியாளர்கள் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் , நேர்மையாக பணியாற்றினால் நல்லது.

Saturday, May 16, 2009

இது எப்படி இருக்கு?












Disclaimer: None of the above photos or news are intended to character assassination. These are merely the creations of a light hearted Indian cricket fan.

Thursday, May 14, 2009

விகடன் விமர்சனம் : பசங்க


'நம்ம பசங்க இவங்க!' என்று உச்சி முகர்ந்து உலகத்துக்குச் சொல்ல, சமகால வரலாற்றில் தமிழில் ஒரு சிறுவர் சினிமா!

முதல் முயற்சியிலேயே முத்திரை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாண்டிராஜ். தியேட்டரில் அந்தப் பசங்களுடனேயே பயணித்துப் பிரிய மனமில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்லும் குழந்தைகளின் 'தேங்க்ஸ்' மொத்தமும் உங்களுக்கே உங்களுக்கு!சதா சண்டைக் கோழிகளாகப் பிரிந்து நின்று முட்டி மோதி மூக்குடைக்கும் குறும்புப் 'பசங்க' கதை. லிட்டில் டெரரிஸ்ட் ஜீவா. அப்பாவே வாத்தியாராக இருப்பதால், ஜீவாவின் அட்டகாசங்கள் ஊரையே உலுக்கியெடுக்கின்றன. கூடவே, கும்மாளமடிக்கும் சக ஜபர்தஸ்துகள் பக்கடா மற்றும் குட்டிமணி. அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்கிறான் அன்புக்கரசு. ஆறாம் வகுப்பிலேயே 'அன்புக்கரசு ஐ.ஏ.எஸ்' என்று போட்டுக் கொள்ளும் ஸ்டூடன்ட் நம்பர் ஒன். முதல் நாளே அன்புக்கும் ஜீவாவுக்கும் மோதல். எதிரெதிர் வீட்டில் இருக்கும் இருவரின் குடும்பங்களும் தெருச் சண்டை போட்டுக்கொள்ளும் அளவுக்கு வினையாகிறது விளை யாட்டுச் சண்டை. இவர்களுக்கிடையே மோதல்என்றால், அன்புவின் எல்.ஐ.சி. சித்தப்பாவுக்கும் ஜீவாவின் பால்வாடி டீச்சர் அக்காவுக்கும் காதல். காதல் ஜோடி இணையத் துடிக்க, மோதல் பசங்க பிரிக்கத் துடிக்க... யார் ஜெயித்தார்கள் என்பது மீதிக் கதை!

'தோளில் கை போட்டால் குட்டையாகிவிடுவேன்' என்கிற பயம், 'இந்த அடியை நாளைக்கு வரைக்கும் மறக்காதே' என்று அன்பைச் செல்ல அடியாக வெளிப்படுத்தும் பிரியம், 'அது எப்படிடா ஒருத்தனுக்கு ஒண்ணுக்கு வந்தா எல்லாத்துக்கும் வருது?' என்கிற சந்தேகம் என... பால்ய காலத்தின் பக்கங்களை ஜாலியாகப் புரட்டும் கதைநான் தயிர்சாதம்', 'நான் சர்க்கரைப் பொங்கல்', 'நான் புளியோதரை' என்று எதிரி வீட்டு முற்றத்தை நாசம் பண்ணும் ஜீவா அண்ட் கோ ஒரு பக்கம், இல்லாத பைக்கைக் கற்பனை யாக ஓட்டிக் கனவு காணும் அன்புக்கரசு இன்னொரு பக்கம் என அறிமுகக் காட்சிகளும் அவர்களுக்கான 'ஓப்பனிங் ஸாங்'கும் அசத்தல்.

கைத்தட்டலுக்கும் பாராட்டுக்கும் ஏங்கும் அன்புக்கரசு கேரக்டர் தமிழ் சினிமாவுக்கே புதிது. 'பெர்ஃபெக்ட் ஸ்டூடன்ட்' கேரக்டரில் கிஷோர் பக்கா பாந்தம். சதா சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் அப்பா - அம்மாவைச் சமாதானப்படுத்த முயற்சிக்கும்போதும், வம்புக்கார ஜீவாவைச் சரிக்குச் சரி நின்று சமாளிக்கும்போதும் கிஷோரின் கண்களில் அத்தனை எக்ஸ் பிரஷன்கள்!

'குழந்தை வில்லன்' ஜீவாவாக ராம். அரசுப் பள்ளி வாத்தியார் பையன்களுக்கே இருக்கும் இயல்பான திமிர். வகுப்பில் தன்னைக் கண்டிக்கும் அப்பாவை, 'அவனை விட்டுட்டு என்னையத் திட்ற... இரு, அம்மாகிட்ட சொல்றேன்!' என்று எகிறும்போதும், அதே அப்பாவிடம் 'சிகரெட்டை விட்ருப்பா... எல்லாம் உன்னைக் கிண்டல் பண்றாங்க' என்று வரம் வாங்கும்போதும் தேர்ந்த நடிப்பு. தன் அப்பா, அன்புக்கரசுவைப் பாராட்டும்போதெல்லாம் ஜீவா முகத்தில் தெரிவது அக்னி நட்சத்திரச் சூடு!

ஜீவாவின் கைத்தடிகளாக வருகிற பக்கடா (பாண்டியன்), குட்டிமணி(முருகேஷ்) இருவரும் காªமடி ரவுடிகள். 'ஜீவா கோபமாயிட்டான். அவன் பணக் காரன்டா. சட்டைப் பையைக் கிழிச்சுக்குவான்டா!' என்று ஜீவாவை உசுப்பேத்தி, சில்லறைகளைச் சிதற வைக்கிற பக்கடாவின் ஐடியாக்கள் அத்தனையும் சிரிப்பு பாஸ்பரஸ். பக்கடா ஏத்திவிட... 'ம்ம்' என்று அதற்கு ஜால்ரா வாசிக்கிற குட்டிமணியின் பக்க வாத்தியம் அவ்வளவு அழகு. 'அம்மா... குஞ்சுமணி வெளியே வந்திருச்சு!' என்று ஓட்டை ஜட்டியுடன் அறிமுகமாகும் 'புஜ்ஜிமா' கார்த்திக் ராஜா குறும்பு ஹைக்கூ. இரு குடும்பங்களும் நடுத்தெருவில் சண்டை போடும்போது, வாத்தியாரைப் பார்த்துக் 'கொன்னுருவேன்' என்று பிஞ்சு விரல் காட்டுவதும், பெண் குழந்தைகளிடம் அன்பு காட்டி ஆண் குழந்தைகளை அடித்துவைத்து 'எப்பூடி?' என்று கேள்வி கேட்டும், படம் முழுக்க ரகளை செய்கிறான். ஜீவாவின் அத்தைப் பெண் புவனேஸ்வரியாக வரும் தாரிணியின் கண்களில் கள்ளமில்லா சில்மிஷ காந்தம்!

'இங்கிட்டு மீனாட்சி... அங்கிட்டு யாரு?' என்று சதா மொபைல் மொக்கையில் பிஸியாகத் திரியும் எல்.ஐ.சி. ஏஜென்ட்டாக வரும் விமல், அறிமுகமா? ஆச்சர்யப்படுத்துகிறார். 'ஒரு பாலிஸிகூடக் கிடைக்கலை. எப்படியும் உங்கப்பா நம்ம காதலைச் சேர்த்துவைக்க மாட்டாரு. பழகுன பழக்கத்துக்கு ஒரு பாலிஸி யாவது போடேன்!' என்று காதலியிடமே கையெழுத்துக் கேட்பதில், டிரேட் மார்க் தமிழக விடலையைக் கண் முன் நிறுத்துகிறார். அட, 'சரோஜா' வேகாவா இது? பால்வாடியில் தூங்கி வழியும் சோப்ளாங்கி டீச்சராக, 'நீங்க என்னைப் பாராட்டுறீங்களா... இல்லை, ஓட்டுறீங்களா?' என்று குழம்புகிற அசட்டு அழகு ஃபிகராகப் பின்னியிருக்கிறார். 'கேணப் பய! கிறுக்கச்சி மாதிரி என்னைத் தனியாப் பேசவெச்சிட்டானே' என்று புலம்புவதும், புருவ நெளிவுசுளிவுகளிலேயே கதை பேசுவதுமாக... வேகா-ஆஹா!

செல்போன்களையே காதலுக்கு உதவும் உருப்படிகளாகக் காட்சிப்படுத்தியிருப்பது லவ்லி. 'மாமோய்! நீங்க எங்க இருக்க்க்க்க்க்கீங்க?' என்று ஆரம்பித்து, விதவிதமாகக் கதறும் ரிங்டோன்களையே காதல் காட்சிகளுக் குப் பின்னணி இசையாகச் சேர்த்திருப்பது ரசனை.ஜீவாவின் அப்பாவாக வரும் வாத்தியார் சொக்கலிங்கத்துக்கு (ஜெயப்பிரகாஷ்), ரோல்மாடல் வாத்தியார் கேரக்டர். தேவையான பாவனைகளைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார். அன்புக்கரசுவின் அப்பாவாக வரும் சிவக்குமாரும், அம்மாவாக வரும் செந்திகுமாரியும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான படியிலிருக்கும் வர்க்கங்களின் பெற்றோர்களைக் கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறார்கள்.

ஒரு நடுவாந்தர நகரம், அதன் மனிதர்கள், அதன் வருட முழுமைக்குமான இயக்கங்களை (தீபாவளித் தள்ளுபடி வண்டி, 'சார், கொஞ்சம் ஓரமா நின்னு சண்டை போடுங்க சார்' என்று அறிவித்து நகர்ந்து செல்வது வரை... பிரமாதம்!) அச்சு அசலாகப் படியெடுத்திருப்பதில், கலை இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சரிசம சபாஷ்! பருவங்களாக நகர்கிற கதையில் மழை, வெயில், வசந்தம் என்று கால நிலைகளைக் கச்சிதக் காட்சிகளாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில், 'அன்பாலே அழகாகும் வீடு...' மனதைப் பஞ்சாக இழையவைக்கிறது.

ஒரு சின்ன நகரத்தில் இப்படி ஒரு ஜோடி ஸ்கூட்டியில் வளைய வரும் விஷயம் வீடு வந்து சேர எத்தனை நாளாகும்? முதல் பாதியில் வேடிக்கை வினோதக் காட்சிகளே தொடர்வது, ட்விஸ்ட் அண்ட் டர்ன் எதிர்பார்க்கும் யுகத்தில், கொஞ்சம் நீளமே. அன்புவின் அப்பா குடம் தயாரிக்கும் ஃபேக்டரி ஆரம்பிக்கும்போதே கணவன்-மனைவி இருவரும் ராசியாகிவிடுகிறார்கள். அதற்கடுத்தும்விவாகரத்து அளவுக்கு வரும் குடும்பச் சண்டையும், சொக்கலிங்க வாத்தியாரின் அட்வைஸூம் திணிக்கப்பட்ட உணர்வையே தருகின்றன. படத்தின் பெரும்பான்மைக் காட்சிகளில் இல்லாத சினிமாத்தனம், அன்புக்கு ஆக்ஸிடென்ட் ஆவதில் இருந்து எட்டிப் பார்த்து, 'உள்ளேன் ஐயா' சொல்கிறது.பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இருவேறு உலகங்களை இணைத்து அத்தனை நல்ல விஷயங்களையும் சொல்கின்றன ஒவ்வொரு காட்சியும் வசனமும். பஞ்ச் பேசி, பறந்து அடித்து, ரிப்பீட் கதைகளால் ரிவிட் அடிக்கும் அத்தனை ஆல் கிளாஸ் மாஸ் ஹீரோக்களுக்கும் அலாரம் அடிக்கிறார்கள் இந்தக் குட்டிப் 'பசங்க.                                       

நன்றி : விகடன்           

Thursday, May 7, 2009

பள்ளிக்கூடங்கள் சித்ரவதை கூடங்களா?

கொஞ்ச நாள் முன்னாடி கழிப்பறை வசதி இல்லாமல் , பள்ளிகளில் படிக்கும் மாணவியர் எப்படி கஷ்டபடுரங்க ன்னு எழுதி இருந்தேன். இந்த மாதிரி விசயங்களை அரசுக்கு புரிய வைக்க இதுதான் சரியான நேரம். இளம் வக்கீல்களை கொண்டு நடத்தப் படும் பீப்பிள்ஸ் கார்டியன்' என்கிற அமைப்பு இந்த பிரச்சினை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

இதைப் பற்றி இந்த வரம் ஜூ.வீ யில் வந்த கட்டுரை:

''கழிப்பிடம் கட்டித்தருவோம்னு எந்தக் கட்சி வாக்குறுதி குடுக்குதோ, அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டு!'' என்றொரு வித்தியாசமான கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்காக 'கழிவறை கட்டிக்கொடு' என்கிற இயக்கம் ஆரம்பித்து, சென்னையில் பிரசாரத்தையும் ஆரம்பித்திருக்கிறது 'பீப்பிள்ஸ் கார்டியன்' என்கிற இளம் வழக்கறிஞர்கள் குழு. அதன் செயலாளர் பச்சைமுத்துவை சந்தித்துப் பேசினோம்.''பொது சுகாதாரம் சம்பந்தமான கருத்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போதுதான், பொதுக் கழிவறை இல்லாததன் பயங்கரங்களை உணர முடிந்தது.விடுதியும் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், வில்லிவாக்கத்தில் இருக்கும் மாணவர்கள் விடுதிகளும் மனிதர்கள் வசிக்கவே லாயக்கில்லாதவை.

கட்டணக் கழிப்பறைகள் பற்றிச் சொல்லத் தேவை யில்லை. ஒரு ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால்,ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பதற்கான நோய்களை வாங்கி வரலாம். அப்படியிருந்தும், துர்நாற்றம் பிடித்த கழிவறைகள் மொத்தத் தையும் அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். 'ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வரும் அவர்கள், காசு வரும் என்பதற்காக கழிவறைகளையே ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்களே... அவர்களுக்கா நம்முடைய ஓட்டு?' என்பதுதான் எங்கள் பிரசாரம். பல்வேறு பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எங்களோடு களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் இந்தக் கோரிக்கையை கையிலெடுத்தால் பலன் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னதும் அவர்கள்தான். சென்னையில் மட்டுமே இந்தப் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். ஒருவேளை அரசியல் கட்சிகள் இது குறித்து செவிசாய்க்கவில்லை என்றால், எங்கள் வழக்கறிஞர்கள் குழு நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரும்!'' என்றார்.

'சூழல் சுகாதாரக் கல்விக் கருவூலம்' அமைப்பின் இயக்குநர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, ''2008-ம் வருடத்தை உலக சுகாதார ஆண்டாக ஐ.நா அறிவித்திருந்தது. இதன்மூலம் பல்வேறு நாடுகளிடமிருந்து பல கோடி ரூபாய் நமக்கு நிதியுதவி கிடைத்தது. ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கழிப்பிடம் இல்லாததால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முறையான கழிப்பிடம் இல்லாததால்... மாதவிலக்கு சமயங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களை மாணவிகள் இழக்கிறார்கள். இது கல்வி மறுக்கப்படுவதற்கு இணையான செயல். கழிவறை இல்லையென்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் படிப்பைப் பெற்றோர்களே நிறுத்தியிருக்கிறார்கள். இது, 'பெண் கல்வியை மேம்படுத்தவேண்டும்!' என்கிற அரசின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது.

சுகாதாரமற்ற கழிவறையைப் பயன்படுத்தும் மாணவிகளுக்கு முதலில் சிறுநீரகத் தடத் தொற்று ஏற்பட்டு, அது கருப்பாதைக்குப் பரவி, வெள்ளைப்படுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது. சிலருக்கு மலட்டுத் தன்மையும் உண்டாகிறது. மேலும், மாணவிகளின் இயல்பான உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இது நோஞ்சானாக்குகிறது. ஆக, 'ஒரு கழிவறை, நேரடியாக ஒரு பெண்ணின் கல்வி, உடல்நலம் ஆகியவற்றை பாதிப்பதோடு அவளுடைய அடுத்த தலைமுறையையும் பாதிக்கிறது' என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும், எட்டு லட்சியங்கள் அடங்கிய 'புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்குகள்' ஒன்றையும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதன்படி, 2015-ம் ஆண்டுக்குள் உலகின் அனைத்து நாடுகளும் இந்த லட்சியங்களை அடைந்திருக்கவேண்டும். அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில், ஏழு லட்சியங்கள் பொது சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்டவை.'ஒருவருக்கு வயிற்றுப் போக்கு. ஒரு வாரம் வேலைக்குப் போகவில்லை. கந்துவட்டிக்குக் கடன் வாங்குகிறார். கடனை அடைப்பதற்காக கிராமத்தை காலி செய்துவிட்டு நகரத்தில், பிளாட்பாரத்தில் குடியேறுகிறார். இந்த நிகழ்வுகள், பொது சுகாதாரம் இல்லாததால் ஒருவர் வறுமைக்குத் தள்ளப்பட்டதையே காட்டுகிறது. இது முதல் லட்சியமான 'வறுமை ஒழிப்பை' காலி செய்கிறது. இரண்டாவது லட்சியம், 'அனைவருக்கும் கல்வி' என்பது. கடந்த மாதம் மறைமலை நகர் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் மாணவிகள் இருவர், கழிவறை இல்லாததால் பக்கத்தில் இருந்த குளத்துக்குச் சென்று அதிலேயே மூழ்கி இறந்துவிட்டனர். கல்வியே கிடைக்காத பட்சத்தில் மூன்றாவது லட்சியமான 'பெண்கள் மேம்பாடு'ம் நிறைவேறாமல் இருக்கிறது. மேலும், சுகாதாரக் குறைவால் இந்தியாவில் இதுவரை 15 லட்சம் சிசு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது நான்காவது லட்சியமான 'சிசு மரணத் தடுப்பு'க்கு எதிரானது. கழிவறை இல்லாமல் மலம், சிறுநீரை அடக்குவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்பப்பை வெளியேறிவிடுகிறது. இது ஐந்தாவது லட்சியமான 'கர்ப்ப கால ஆரோக்கியத்தை' பாதிக்கிறது. இப்படியாக பொது சுகாதாரம் எட்டப்படாததால்... அனைத்து லட்சியங்களும் நிறைவேறாமல் கிடக்கின்றன. 'நிர்மல் கிராம் புரஸ்கார்' என்னும் விருதை, திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 15 ஆயிரம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் பல கிராமங்கள் சுத்தமாகியிருக்கிறது. ஆனால், நகர சுகாதாரம் படுமோசமாக உள்ளது. எனவே, இதேபோன்ற விருதை நகர்ப்புறங்களுக்கும் வழங்கினால், சென்னை மாநகரமும் சுத்தமாகும். அந்த வகையில், கழிவறையைக் கட்டிக்கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை!'' என்றார்.

சுகாதாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாடுகளே தொற்று நோய்களின் வீரியம் கண்டு கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிகமிக அதிகம். அப்படியிருக்க, மிகமிக அடிப்படையான விஷயங்களில் மளமளவென்று அடியெடுத்து வைத்து நாம் போவதுதானே புத்திசாலித்தனம்!

நன்றி : ஜூ வி


 
Watch the latest videos on YouTube.com