Showing posts with label ஆராய்ச்சி. Show all posts
Showing posts with label ஆராய்ச்சி. Show all posts

Sunday, March 29, 2009

சீனர்களின் துப்பறியும் மென்பொருள் : கோஷ்நெட்


வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒருமுறையாவது 'வைரசினால்' பதிக்கப் பட்டிருப்பார்கள். அதிலும் ட்ரோஜன் (Trojan) எனப்படும் மால்வேரினால் (Malware) அவஸ்தையை அனுபவித்திருப்பார்கள். பெரும்பாலும் எதாவது ஒரு இணைய தலத்தில் நுழையும் போதோ அல்லது எதாவது லிங்கை சொடுக்கும் போதோ வைரஸ் எனப்படும் மென்பொருட்களை 
தெரியாமல் தரவிறக்கம் செய்து விடுகிறார்கள். Registry யில் உட்கார்ந்து கொண்டு பாடாய் படுத்திவிடும்.சரி, இந்த மாதிரி வைரசை பரப்புவதினால் என்ன லாபம்? சும்மா கடுப்பேத்த இருக்கலாம்.சாதரண Malware கள் வலுக்கட்டயமாக விளம்பரங்களை நம் மீது தினிப்பதொடு நிறுத்திக் கொள்கின்றன. சில ட்ரோஜன் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை எல்லாம் திருடிக் கொண்டு போகலாம். கிரெடிட் கார்டு எண்கள், வங்கிக் கணக்குகள், சில முக்கிய கடவு சொற்கள் களவு போகலாம். 

 ஆனால், இதையெல்லாம் விட சில ஆபத்தான வேலைகளை செய்ய இது பண்யன்படுதப் படுகிறது. முக்கிய நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களின் இணைய தளத்திற்கு சென்று கோப்புகளை திருடவும், மாற்றவும் ஒரு 'உளவாளியாக' (Cyber-espionage) இந்த ட்ரோஜன் அனுப்பப்படுகிறது. இதை சிரத்தையாக செய்துக் கொண்டிருப்பது வெறும் யாரும் இல்லை - நமது அண்டை நாடான  சீனாதான். சமீபத்தில் இணையதள உளவு  பற்றிய ஒரு ஆய்வில் 103 நாடுகளை சேர்ந்த 1295 கணினிகள் உளவுப் பார்க்கப் பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் பதிக்கப் பட்டியலில் முக்கியமாக தலாய் லாமாவின் அலுவலகம், திபெத் அரசாங்க அலுவலகங்கள், அமெரிக்காவில் உள்ள இந்தியன் எம்பசி, நட்டோவின் (NATO) தலைமை அலுவலகம் ஆகியவை அடங்கும். 

சைனாவிலிருந்து அனுப்பப்படும் இந்த வைரசுக்களுக்கு "கோஷ்நெட்" (GhostNet) என்று பெயர் வைத்துள்ளனர்.கோப்புகலை திருடுவதொடில்லாமல் , அந்த கணினியில் இருக்கும் புகைப்படக் கருவியையும்,  ஒலிக் கருவிகளையும் தானாக இயக்க செய்து அதன் மூலம்  உளவு பார்க்கும் வேலையும் நடந்து வருகிறது. இது மாதிரி வேலைகளை எல்லாம் அமெரிக்காவிம் CIA , ரஷ்யவும் தான் செய்து வந்தது. இப்போது இவர்களை எல்லாம் விஞ்சி விடுவது போல சீனா தன் வேலையே ஆரம்பித்துள்ளது. இதை வழக்கம் போல் சீன அரசாங்கம்  மறுத்துள்ளது. 

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட கனடாவில் உள்ள University of Toronto  இதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அவர்கள் கூற்றுப்படி உளவு பார்க்கப்பட்ட கணினிகளில் முப்பது சதவிகிதம் மிக முக்கியமான கோப்புகளை கொண்டிருந்தது.இந்த கணினிகளில் கோஷ் ராட் (gh0st RAT) என்னும் ட்ரோஜனை தரவிறக்கம் செய்து , அந்த கணினிகளை தான் கட்டுப் பட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்பறம் கோப்புகளை திருடுவதில் இருந்து ஆரம்பித்து மற்ற எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார்கள். இதை ஆய்வு செய்த வல்லுனர்கள் மிகவும் சிக்கலான முறையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் , கண்டுபிடித்து அழிப்பது கடினமான வேலை எண்டும் தெரிவித்துள்ளனர். இந்த இணைய தல கிருமிகளை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என்றல் , பாதுகாப்பிலாத இணையம் கொடிய அரக்கனாக மாறிவிடும்!

முழு அறிக்கையை இங்கே தரவிறக்கம் செய்யவும். 

ஆதாரம்: http://webapp.mcis.utoronto.ca/ 

Wednesday, March 25, 2009

பட்டதிலிருந்து மின்சாரம்!


னேகமாக நாம் எல்லோரும் ஒருமுறையாவது பட்டம் விட்டு மகிழ்ந்திருப்போம். அல்லது பட்டம் விடுவதை அருகில் இருந்தாவது பார்த்திருப்போம். மேமாத விடுமுறை வந்துவிட்டால் வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறப்பதை பார்க்கலாம். ஈர் குச்சி என அழைக்கப்படும், மெல்லிய , வளையக்கூடிய கொச்சியை எடுத்துக் கொண்டு அதை வளைத்து, கலர் காகிதங்களால் அலங்கரித்து, அதற்கு வால் ஒன்று இணைத்து...இப்படி அதை தயார் செய்வதே ஒரு பெரிய கலை தான். அப்பறம் நூலில் கட்டி இணைத்து, உயர உயர பறக்க விட்டு, யார் பட்டம் அதிக உயரம் பறக்கிறது என்று போட்டிபோடுவதும் ஒரு சுகம் தான்...ஓகே மேட்டருக்கு வருவோம்...

இந்த பட்டதை வைத்து மின் ஆற்றலை உருவாக்க முடியும் என்று கண்டுப் பிடித்துள்ளனர். காற்றில் உள்ள ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது புதிதல்ல. காற்றாலை கொண்டு மின்சாரம் தயாரிக்கப் பட்டு வருகிறது. காற்றின் விசையால் உந்தப்பட்டு பட்டம் மேலே பறக்கும் போது, அதன் மறு முனையில் உருவாகும் ஆற்றலை வைத்து மின்சாரம் தயாரிக்க படுகிறது. நாம் பட்டம் விடும் பொழுது இதை உணர்ந்திருப்போம். நம் பட்டம் மிக உயரமாக பறக்கும் பொது, நம்மை அது இழுத்து செல்லும். பத்து மீட்டர் சுற்றளவுள்ள பட்டதை வைத்துக்கொண்டு பத்து கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் அது பத்து வீடுகளின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கணக் கிட்டுள்ளனர் நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். மிக உயரத்தில் பறக்க விட்டு , அதிக பட்சமாக நூறு மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் சுமார் ஒரு லட்சம் வீடுகளின் மின்சார தேவை பூர்த்தி செய்ய படும். இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தின் செலவு மிகக் குறைவு. இதனால் ஆராய்ச்சிகள் மும்முரமாக நடைப் பெற்று வருகிறது. அமெரிக்காவில் சால் கிரிபித் என்பவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரது சொந்த நிறுவனமான மகனி பவர் மிகபெரிய் அளவில் மின்சாரத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கூகிள் கூட சுமார் பத்து மில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இந்த வீடியோவை பாருங்க: புரியும்.

Friday, September 12, 2008


தினமலரில் வந்த 'ஒரு மணி நேரத்தில் ஆயிரம் இட்ல்லிகள் சுடச்சுட தயார்' என்கிற செய்தி என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இந்தியா தொழில்நுட்பத் துறையில் "அதிவேக வளர்ச்சி" அடைந்து வருகிறது என்று ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை அதற்குச் சான்றாக ஒருமணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இட்லி, தோசை , சப்பாத்தி போன்ற உணவுகளை சமைக்கும் இயந்திரத்தை சான்றாக காட்டுகிறது. இதற்கான ஆய்வை மேற்கொண்டு தானியங்கி இயந்திரத்தை வடிவமைத்துள்ள நிறுவனம் ' மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்.

நம் நாட்டில் உணவுக்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம் வியக்க வைக்கிறது. இத்தனை வகையான உணவுகளை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஆனால் நம் உணவுகள் நம்மக்கு தரும் ஊட்டசத்துகளைப் பற்றியோ, அங்காடிகளில் விற்கப்படும் உணவுகளின் தரத்தைப் பற்றியோ யாரும் வெகுவாக கவலைப் படுவதாக தெரியவில்லை. இதற்காக பெரிய அளவிலே ஆராய்ச்சிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை. காப்பி பொடியில் ஆரம்பித்து பால், உப்பு, மிளகாய், மஞ்சள் தூள் போன்ற அன்றாடம் பயன் படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளின் தரம் கேள்விக் குறியாகி வருகிறது. அதேநேரத்தில், நம் பண்டைய உணவு முறையிலிருந்து சிறிது சிறிதாக மாறி வருவதால் இன்று இயற்கையாக கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துகள் கூட கிடைப்பதில்லை. அரசு நியாய விலைக்கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் தரமும் மோசமாக உள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, உணவு விடுதிகளின் கிடைக்கும் உணவில் தரமோ மிகவும் மோசமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையில் தினமும் இறைச்சி யை உண்டு வந்த ஒருவருக்கு புற்று நோய் வந்தது பற்று எழுதப் பட்டிருந்தது. அதற்கான காரணம் சிக்கனில் கலக்கப்படும் ஒருவித ரசாயணம் என்றுக் கண்டறியப்பட்டது. இன்று பிழைப்புக்காக பல ஊர்களின் தங்கி வேலைப் பார்க்கும் பலரது பசியைப் போக்குவது இந்த உணவு விடுதிகள் தான். சென்னை போன்ற நகரங்களில் உணவு விடுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும்.  

இவ்வாறாக வீட்டில் கிடைக்கும் உணவிலும், வெளியில் கிடைக்கும் உணவிலும் கிடைக்கும் ஊட்டச்சத்து குறைபாடிலோ, தரத்திலோ நாம் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. அரசும் மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனங்களும் இது போன்ற ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதையோ அல்லது இருக்கும் விதிகளில் முறையாக செயல் படுதுவதிலோ அக்கறை காட்டுவதில்லை. ஆயிரம் இட்லிகளை கொடுக்கும் இயந்திரங்களை செய்வதோடு, மற்ற உபயோகமுள்ள பணிகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.
 
Watch the latest videos on YouTube.com