Thursday, February 5, 2009
Wednesday, February 4, 2009
கதை ஒன்று... ஸ்டைல் நான்கு!!
காக்காய் நரி கதைதான் - காலம் மாற மாற நடை எப்படி மாறும் என்று எண்ணிப் பார்த்ததன் விளைவுதான் இது!
லோகத்திலே சகல ஜீவ ராசிகளும் க்ஷேமமாக ஜீவித் துக்கொண்டிருந்த காலம் அது. நத்தம்பட்டி நத்தம்பட்டி என்று ஒரு கிராமம். அங்கே கடைத் தெருவில் ஒரு ஏழைப் பாட்டியம்மாள் வடை சுட்டு விற்றுத் தன் ஜீவியத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது சனீஸ்வர பக வானின் வாகனமான காகம் அங்கு வந்து வடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு பறந்தது. கிராமத்திற்கு வெளியே அரச விருட்சம் ஒன்றில், சற்றே சிரம பரிகாரம் செய்து கொண்டு வடையை உண்ண லாம் என்று அமர்ந்தது.
அப்போது தந்திரங்களிலே வல்ல குள்ளநரி ஒன்று அவ் வழியே வந்தது. காக்கை தன் அலகில் வடை ஒன்று வைத் திருப்பதைக் கண்டது. உடனே அது சும்மாயிருக்குமோ? அது சும்மாயிருந்தாலும் அதன் குணம் அதைச் சும்மாயிருக்க விடுமோ?
''காகமே! பாட்டில் உனக்கு இணை யாரே உளர்! உன் சங் கீதத்தை நான் கேட்டு ஆனந் திக்கலாகாதா? என்னை சந் தோஷிக்க ஒரு பாட்டுப் பாடு வாயாக!'' என்று கேட்டது.
காகமும் புளகாங்கிதமுற்று ''தங்கள் சித்தம் என் பாக்கியம்'' என்று சொல்லிப் பாட ஆரம் பித்தது. வடை தரையில் விழ தந்திரசாலியான நரி அதைக் கல்விக்கொண்டு ஓடியது.
ஸ்தம்பித்து நின்றது காகம்!
அது நத்தம்பட்டியோ நார்த்தம்பட்டியோ... அந்த விவாத-தர்க்க-வாதங்களுக்கு யாருமே முன்வராத ஒரு கால கட்டத்தில், அந்தக் குக்கிராமத் தின் ஒரு மூலையில்...
வாழ்க்கையின் விளிம்பைத் தொட்டுக்கொண்டிருந்த கிழவி ஒருத்தி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள்.
காலையிலே கடமை தவறா மல் கரைந்து ஊரையே உசுப்பி எழுப்பித் தங்கள் தங்கள் பணி களில் அவரவர்களை அனுப்பி வைக்கும் காக்கை ஒன்று பாட்டியின் இட்லிக் கடையி லிருந்து வடை ஒன்றினை மிக நாசூக்காக, நளினமாகக் கவ்விக்கொண்டு ஓடியது.
கிராமத்திற்கு வெளியே, சிறுவர்கள் திருட்டு 'தம்' அடிக்க வாகாக இருந்த ஓர் அரச மரத்தின் கிளையில் வந்து அமர்ந்தது அக்காகம். பலரை ஏமாற்றிப் பழக்கப்பட்டே உண்டு கொழுத்த வஞ்சக நரி ஒன்று அவ்வழியே வந்தது.
''காகமே! நீ இசையில் குயிலையும் மிஞ்சிவிடுவாயாமே? எங்கே, ஒரு பாட்டு பாடு!'' என்றது.
உள்ளம் குளிர்ந்த காகம் பாட ஆரம்பித்தது. இமைப் பொழுதில் வடை கீழே விழ, வடையுடன் நரி ஓட, அந்தப் பரிதாபக் காகம் ஏமாந்து நின்றது.
அதன் பார்வை, 'உலகமே இவ்வளவுதான்! சூதும் வாதும், போலியும் நீலியும், புளிப்பும் கசப்பும் நிறைந்தது தான்' என்பதைச் சொல்லா மல் சொல்லிற்று.
செர்ரி, ஆப்பிள் மரங்கள் நிறைந்த ஒரு ஸ்மால் வில்லேஜ் நத்தம்பட்!
அங்கே ஒரு ஓல்டு உமன் ஷூட் பண்ணிக்கொண்டி ருந்த (சுட்டுக்கொண்டிருந்த... ஹி..ஹி!) வடையை ஒரு டார்க் பிளாக் க்ரோ கவ்விச் சென்று, ஒரு மரத்தில் உட் கார்ந்தது.
அந்த வழியே ஒரு கன் னிங் ஃபாக்ஸ் வந்தது. அது க்ரோவிடம் இருந்த வடை யைப் பார்த்துவிட்டது.
''க்ரோ, க்ரோ! நீ எல்விஸ் பிரெஸ்லியைவிடப் பிரமாத மாகப் பாடுவாயாமே... கமான், ஸிங் எ ஸாங்!''
க்ரோ ரொம்ப ஹாப்பி யாகி ''ஓ.. ஷ்யூர்!'' என்று சொல்லிப் பாட ஆரம்பித்தது. வடை விழ, நரி அதை கபால் என்று கவ்விக்கொண்டு ரன்னிற்று.
புவர் க்ரோ, தான் இப்படி ஃபூலிஷாக நடந்துகொண் டோமே என்று பிறகு ரொம் பவும் ஃபீல் பண்ணிற்று!
(உங்கள் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் இதைக் கொடுங்கள். கம்ப்யூட்டர் கதையைச் சொல்லும்!)
கதையை
நன்றி : விகடன்
Tuesday, February 3, 2009
உலக புற்று நோய் தினம்

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், தடுக்கும் முறைகள், சிகிச்சை பற்றிய தகவல்களைப் பரப்பவும், புற்றுநோய் தினம் இன்று ( பிப்ரவரி 4 ) அனுசரிக்கப் படுகிறது. "உலக புற்று நோய் எதிர்ப்புக் கழகம்" என்கிற அமைப்பு இதை முன்னின்று நடத்துகிறது.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள்,சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
- புகையிலை பயன்படுத்தக்கூடாது.
- கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
- முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- இன்று மனித உயிர்களை பறிப்பதில் புற்றுநோய் க்குதான் முதலிடம்.
- உலகம் முழுவதும் 2005 இருந்து 2015 வரை புற்றுநோயால் இறக்கப் போவோரின் எண்ணிக்கை எட்டு கோடி
- சிகரட் பிடிப்பதினால் புற்றுநோய் வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 2008 ல் மட்டும் 170000 பேர்
- உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது மற்றும் சரிவிகித உணவு இல்லாதலால் மட்டும் சுமார் 200000 பேர் புற்றுநோய் வந்து 2008 ல் இறந்துள்ளனர்
- இந்தியாவில் புகைப் பிடிப்போரின் சதவிகிதம் 16%; அதில் ஆண்கள் 30% பெண்கள் 2.5%
Sunday, February 1, 2009
Wednesday, January 28, 2009
ஆயிரம் ஜன்னல்
'அன்பு, சந்தோஷம், பரவசம் காரணமாக உதிர்க்கும் கண்ணீரால் உங்கள் கன்னங்கள் ஈரமாகாமல் இருந்தால், நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சுவையை அறியவில்லை என்று அர்த்தம்!'
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஒலியும் இசையும்...சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றிலும் இசை இருந்திருக்கிறது. என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். சிசுவாக நான் தொட்டிலில் இருந்த காலத் திலிருந்தே அவள் பாடல்களைக் கேட்டு வந்திருக்கிறேன். சமைக்கும்போது பாடுவாள். பூஜை செய்கையில் பாடுவாள். எங்களுக்குச் சாதம் ஊட்டுகையில் பாடுவாள். பாடாத நேரங்களில் நன்றாக வீணை வாசிப்பாள்.
என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சாஸ்திரிய இசையில் ஆர்வம். எங்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. எம்.எஸ்., மதுரை மணி ஐயர், சைகோல் என ஏழெட்டு இசைத் தட்டுகளை மறுபடி மறுபடி ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். என் நண்பர்களுக்கு சினிமாப் பாடல்களில் ஆர்வம். ஆங்கில இசையில் ஆர்வம். என் சகோதரர்களும் நண்பர்களும் ரேடியோவைத் திருகி பாடல்களைக் கேட்பார்கள். எப்போதும் காற்றில் மிதந்தபடி இருந்த இசையைத் தேடிப் போய்க் கற்க வேண்டும் என்று ஏனோ எனக்கு ஒரு போதும் ஆர்வம் வந்ததில்லை. கற்றுக் கொள்வதில் மட்டுமல்ல, எந்தக் குறிப்பிட்ட இசைத்தட்டைச் சேகரிக்கவும் எனக்கு ஆர்வம் வந்ததில்லை.சொல்லப் போனால், எந்த இரைச்சலும் இல்லாமல் அமைதியாக, நிசப்தமாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும். நண்பர்களோடு நேரத்தைச் செலவு செய்கையில், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாயிருந்த பாப் இசையைக் கேட்பது தவிர்க்க முடியாமல் போனது. இசையைக் கேட்க வேண்டும் என்று ஏக்கமில்லாமலேயே இசையைக் கேட்டுக்கொண்டு இருந்த காலம் அது. நூற்றுக்கணக்கான இசை டேப்களைச் சேகரித்த நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும். என் நண்பர்கள் மட்டுமல்ல. என் சகோதரனிடம்கூட கேசட்கள் இருந்தன. ஆனால், என்னிடம் ஒரு கேசட் கூடக் கிடையாது. வெகு பிற்பாடு, எனக்கு 22, 23 வயதிருந்தபோது, பல மணி நேரங்கள் தியானத்தில் ஈடுபட்டேன். மிக அமைதியான இரவில், மிக நிசப்தமான சூழலில், தியானத்தில் இருக்கையில் எனக்குள் இனிமையான இசை போன்ற ஒலிகள் ஒலிப்பதைக் கவனித்தேன். எந்த இசை எனக்கு முன்பு தொந்தரவாகத் தோன்றியதோ, அதே இசை என்னைஅறியாம லேயே எனக்கு மிக இனிமையான உணர்வைத் தந்தது. அதுபற்றி நான் விவரித்துச் சொன்னால், ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாகக் கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். இசை ஓர் அற்புதமான கருவி. இசையின் துணையுடன் மற்றவர்களை அணுகுவது சுலபம் என்று அப்போதுதான் உணர்ந்தேன். அதனால்தான், என் வகுப்புகளில் இசையை அதிகம் பயன்படுத்துகிறேன். இசையில் நான் விற்பன்னன் அல்ல. ஆனால், கண் களை மூடி அமர்ந்தால், இசை ஓர் அற்புதமான கட்ட மைப்பு என்பதைக் கவனிக்கிறேன். நிசப்தம் போல் ஊடுருவி உள்நுழைவதல்ல, இசை. நிசப்தத்தின் ஆழத்துடன் ஒப்பிட்டால், இசை ஓரளவு மேம்போக்கா னதுதான். ஆனால், நிசப்தத்தை எவ்வளவு பேரால் ரசிக்க முடிகிறது? ஏதோ ஒரு கட்டமைப்பைத்தானே மனிதன் ரசிக்கிறான்? பேசுவதைவிட பாடினால்தான் கட்டமைப்பு இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், இசையைக் கற்றுக்கொண்டதில்லை. இனி கற்பதற்கான நேரமும் இல்லை. பாடுவேன். அதில் கவிதை இருக்குமே தவிர, இசை நுணுக்கங்கள் இருக்காது. மனிதரின் நாடி நரம்புகளை ஊடுருவும் ஒலியின் அபார சக்தியைப் பயன்படுத்தும் விதத்தை அறிந்து தேர்ந்திருக்கிறேன். அதன் மூலம் அவர்களை வேறு நிலைகளுக்கு என்னால் எடுத்துச் செல்ல முடிகிறது. என் பாடலால் அதீத மகிழ்ச்சியை உண்டு பண்ண முடியும். கண்களில் கண்ணீரைக் கொண்டு வர முடியும். மற்றபடி எனக்கு ராகம், தாளம் இதெல்லாம் தெரியாது. சரிகமபதநிச கூட முறையாக சொல்லத் தெரியாது. எங்கள் பள்ளிக் குழந்தைகள்கூட சிறப்பாகச் சொல்கிறார்கள். தியானலிங்கத்தின் சுற்றுப்புறம் மிக மிக அமைதியாகவே பராமரிக்கப்படுகிறது. அந்த நிசப்தம் மிகவும் அழுத்தமாக இருப்பதாகப் பலர் சொன்னதால், அதில் ஒரு சிறு தளர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். நாளின் குறிப்பிட்ட நேரத்தில் சில ஒலிகளை எழுப்பி, அந்த ஒலிகளைச் சமர்ப்பிக்கும் நாத ஆராதனை என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சில பிரம்மசாரிகளை அழைத்தேன். ''இந்த ஆழமான நிசப்தத்தைத் தளர்த்துவதற்கு, கேட்பதற்கு இனிமையான ஒலி இருந்தால் நல்லது. ஏதாவது நல்ல பாடல்களைப் பாடுங்கள்'' என்று சொல்லிவைத்தேன். மிக்க ஆர்வத்துடன் இரண்டு பிரம்மசாரிகள் வந்தனர். 'நடராஜா நடராஜா' என்று பஜனைப்பாடல் களைத் தினம் பாடினர். கோவையிலிருந்து வந்திருந்த அன்பர்கள் சிலர் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு 'சத்குரு, தயவுசெய்து அந்த பிரம்மசாரிகள் பாடுவதை உடனே நிறுத்துச் சொல்லுங்கள்' என்று கோரிக்கை வைத்தனர். ஏன் என்று அறிய பாடலைக் கேட்டேன். மயக்கம் வந்தது. இசையின் இனிமையினால் அல்ல... அந்த கோரமான ஓசையால்! பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹேண்டல் என்ற பிரபல இசைக் கலைஞருக்குப் பொறுமை குறைவு. அபஸ்வரத்தை அவரால் தாங்க முடியாது. இது பற்றித் தெரிந்திருந்த ஒரு குறும்புக்கார சிஷ்யன், இளவரசர் முன் நடக்க இருந்த கச்சேரியில் ஹேண்டலுடன் விளையாடத் தீர்மானித்தான். அவர் வரும் முன் குழுவினர் சுருதி சேர்த்து வைத்திருந்த கருவிகளில் சுருதி மாறி வைத்துவிட்டான். சிம்பொனி துவங்கியதும், ஒவ்வொரு இசைக் கருவி ஒவ்வொரு சுருதியில் ஒலியெழுப்ப, இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் நடக்கும் கூத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்க, ஹேண்டல் தன்னிலை இழந்தார். குழுவினரின் இசைக் கருவிகளைப் பிடுங்கி எறிந்தார். சிலவற்றை மேடையில் மோதி உடைத்தார். ஆத்திரத்தில் கால்களை மேடையில் மாறி மாறி உதைத்தார். இளவரசரே வந்து அவரைச் சமாதானம் செய்ய வெகு நேரம் பிடித்தது.ஹேண்டல் அளவுக்கு நான் பொறுமை இழக்கவில்லை. ஆனால், உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். ஆசிரமத்தில் இருப்பவர் களில் சிலரை முறையாக இசை கற்பதில் ஈடுபடுத்தினேன். சில மாதங்களில் மெள்ள மெள்ள அவர்கள் இசையில் சிறப்பான பயிற்சி பெற்றார்கள். ஈஷாவின் அற்புதமான இசைக் குழுவாக 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' பிறப்பெடுத்தது. இன்று அபார ஆற்றலுடன் வளர்ந்துவிட்டது. இப்படித்தான், என் வாழ்வில் இசையை நான் விரும்பித் தேர்ந் தெடுக்காதபோதும், இசை எப்போதும் என்னுடன் இசைந்து இருக்கிறது. | ||
| நன்றி : விகடன் |
Saturday, November 8, 2008
வழிகாட்டி மனிதர்
படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...
பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.
`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.
விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?
முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.
பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.
வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.
``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.
``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.
2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!
கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.
அப்புறம் பள்ளிக்கூடம்.
கல்விக்கூடத்தை இயந்திரம இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம். நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார். நன்றி : குமுதம் யமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.
கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.