Wednesday, January 28, 2009

ஆயிரம் ஜன்னல்

'அன்பு, சந்தோஷம், பரவசம் காரணமாக உதிர்க்கும் கண்ணீரால் உங்கள் கன்னங்கள் ஈரமாகாமல் இருந்தால், நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சுவையை அறியவில்லை என்று அர்த்தம்!'

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

லியும் இசையும்...சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றிலும் இசை இருந்திருக்கிறது. என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். சிசுவாக நான் தொட்டிலில் இருந்த காலத் திலிருந்தே அவள் பாடல்களைக் கேட்டு வந்திருக்கிறேன். சமைக்கும்போது பாடுவாள். பூஜை செய்கையில் பாடுவாள். எங்களுக்குச் சாதம்  ஊட்டுகையில் பாடுவாள். பாடாத நேரங்களில் நன்றாக வீணை வாசிப்பாள்.

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சாஸ்திரிய இசையில் ஆர்வம். எங்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. எம்.எஸ்., மதுரை மணி ஐயர், சைகோல் என ஏழெட்டு இசைத் தட்டுகளை மறுபடி மறுபடி ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

என் நண்பர்களுக்கு சினிமாப் பாடல்களில் ஆர்வம். ஆங்கில இசையில் ஆர்வம். என் சகோதரர்களும் நண்பர்களும் ரேடியோவைத் திருகி பாடல்களைக் கேட்பார்கள்.

எப்போதும் காற்றில் மிதந்தபடி இருந்த இசையைத் தேடிப் போய்க் கற்க வேண்டும் என்று ஏனோ எனக்கு ஒரு போதும் ஆர்வம் வந்ததில்லை. கற்றுக் கொள்வதில் மட்டுமல்ல, எந்தக் குறிப்பிட்ட இசைத்தட்டைச் சேகரிக்கவும் எனக்கு ஆர்வம் வந்ததில்லை.சொல்லப் போனால், எந்த இரைச்சலும் இல்லாமல் அமைதியாக, நிசப்தமாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.

நண்பர்களோடு நேரத்தைச் செலவு செய்கையில், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாயிருந்த பாப் இசையைக் கேட்பது தவிர்க்க முடியாமல் போனது. இசையைக் கேட்க வேண்டும் என்று ஏக்கமில்லாமலேயே இசையைக் கேட்டுக்கொண்டு இருந்த காலம் அது. நூற்றுக்கணக்கான இசை டேப்களைச் சேகரித்த நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும். என் நண்பர்கள் மட்டுமல்ல. என் சகோதரனிடம்கூட கேசட்கள் இருந்தன. ஆனால், என்னிடம் ஒரு கேசட் கூடக் கிடையாது.

வெகு பிற்பாடு, எனக்கு 22, 23 வயதிருந்தபோது, பல மணி நேரங்கள் தியானத்தில் ஈடுபட்டேன். மிக அமைதியான இரவில், மிக நிசப்தமான சூழலில், தியானத்தில் இருக்கையில் எனக்குள் இனிமையான இசை போன்ற ஒலிகள் ஒலிப்பதைக் கவனித்தேன். எந்த இசை எனக்கு முன்பு தொந்தரவாகத் தோன்றியதோ, அதே இசை என்னைஅறியாம லேயே எனக்கு மிக இனிமையான உணர்வைத் தந்தது. அதுபற்றி நான் விவரித்துச் சொன்னால், ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாகக் கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

இசை ஓர் அற்புதமான கருவி. இசையின் துணையுடன் மற்றவர்களை அணுகுவது சுலபம் என்று அப்போதுதான் உணர்ந்தேன். அதனால்தான், என் வகுப்புகளில் இசையை அதிகம் பயன்படுத்துகிறேன்.

இசையில் நான் விற்பன்னன் அல்ல. ஆனால், கண் களை மூடி அமர்ந்தால், இசை ஓர் அற்புதமான கட்ட மைப்பு என்பதைக் கவனிக்கிறேன். நிசப்தம் போல் ஊடுருவி உள்நுழைவதல்ல, இசை. நிசப்தத்தின் ஆழத்துடன் ஒப்பிட்டால், இசை ஓரளவு மேம்போக்கா னதுதான். ஆனால், நிசப்தத்தை எவ்வளவு பேரால் ரசிக்க முடிகிறது? ஏதோ ஒரு கட்டமைப்பைத்தானே மனிதன் ரசிக்கிறான்? பேசுவதைவிட பாடினால்தான் கட்டமைப்பு இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், இசையைக் கற்றுக்கொண்டதில்லை. இனி கற்பதற்கான நேரமும் இல்லை.

பாடுவேன். அதில் கவிதை இருக்குமே தவிர, இசை நுணுக்கங்கள் இருக்காது. மனிதரின் நாடி நரம்புகளை ஊடுருவும் ஒலியின் அபார சக்தியைப் பயன்படுத்தும் விதத்தை அறிந்து தேர்ந்திருக்கிறேன். அதன் மூலம் அவர்களை வேறு நிலைகளுக்கு என்னால் எடுத்துச் செல்ல முடிகிறது. என் பாடலால் அதீத மகிழ்ச்சியை உண்டு பண்ண முடியும். கண்களில் கண்ணீரைக் கொண்டு வர முடியும்.

மற்றபடி எனக்கு ராகம், தாளம் இதெல்லாம் தெரியாது. சரிகமபதநிச கூட முறையாக சொல்லத் தெரியாது. எங்கள் பள்ளிக் குழந்தைகள்கூட சிறப்பாகச் சொல்கிறார்கள்.

தியானலிங்கத்தின் சுற்றுப்புறம் மிக மிக அமைதியாகவே பராமரிக்கப்படுகிறது. அந்த நிசப்தம் மிகவும் அழுத்தமாக இருப்பதாகப் பலர் சொன்னதால், அதில் ஒரு சிறு தளர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். நாளின் குறிப்பிட்ட நேரத்தில் சில ஒலிகளை எழுப்பி, அந்த ஒலிகளைச் சமர்ப்பிக்கும் நாத ஆராதனை என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சில பிரம்மசாரிகளை அழைத்தேன். ''இந்த ஆழமான நிசப்தத்தைத் தளர்த்துவதற்கு, கேட்பதற்கு இனிமையான ஒலி இருந்தால் நல்லது. ஏதாவது நல்ல பாடல்களைப் பாடுங்கள்'' என்று சொல்லிவைத்தேன்.

மிக்க ஆர்வத்துடன் இரண்டு பிரம்மசாரிகள் வந்தனர். 'நடராஜா நடராஜா' என்று பஜனைப்பாடல் களைத் தினம் பாடினர். கோவையிலிருந்து வந்திருந்த அன்பர்கள் சிலர் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு 'சத்குரு, தயவுசெய்து அந்த பிரம்மசாரிகள் பாடுவதை உடனே நிறுத்துச் சொல்லுங்கள்' என்று கோரிக்கை வைத்தனர். ஏன் என்று அறிய பாடலைக் கேட்டேன். மயக்கம் வந்தது. இசையின் இனிமையினால் அல்ல... அந்த கோரமான ஓசையால்!

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹேண்டல் என்ற பிரபல இசைக் கலைஞருக்குப் பொறுமை குறைவு. அபஸ்வரத்தை அவரால் தாங்க முடியாது.

இது பற்றித் தெரிந்திருந்த ஒரு குறும்புக்கார சிஷ்யன், இளவரசர் முன் நடக்க இருந்த கச்சேரியில் ஹேண்டலுடன் விளையாடத் தீர்மானித்தான். அவர் வரும் முன் குழுவினர் சுருதி சேர்த்து வைத்திருந்த கருவிகளில் சுருதி மாறி வைத்துவிட்டான்.

சிம்பொனி துவங்கியதும், ஒவ்வொரு இசைக் கருவி ஒவ்வொரு சுருதியில் ஒலியெழுப்ப, இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் நடக்கும் கூத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்க, ஹேண்டல் தன்னிலை இழந்தார். குழுவினரின் இசைக் கருவிகளைப் பிடுங்கி எறிந்தார். சிலவற்றை மேடையில் மோதி உடைத்தார். ஆத்திரத்தில் கால்களை மேடையில் மாறி மாறி உதைத்தார்.

இளவரசரே வந்து அவரைச் சமாதானம் செய்ய வெகு நேரம் பிடித்தது.ஹேண்டல் அளவுக்கு நான் பொறுமை இழக்கவில்லை. ஆனால், உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

ஆசிரமத்தில் இருப்பவர் களில் சிலரை முறையாக இசை கற்பதில் ஈடுபடுத்தினேன். சில மாதங்களில் மெள்ள மெள்ள அவர்கள் இசையில் சிறப்பான பயிற்சி பெற்றார்கள். ஈஷாவின் அற்புதமான இசைக் குழுவாக 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' பிறப்பெடுத்தது. இன்று அபார ஆற்றலுடன் வளர்ந்துவிட்டது.

இப்படித்தான், என் வாழ்வில் இசையை நான் விரும்பித் தேர்ந் தெடுக்காதபோதும், இசை எப்போதும் என்னுடன் இசைந்து இருக்கிறது.

 நன்றி : விகடன்


Saturday, November 8, 2008

வழிகாட்டி மனிதர்

டித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.

விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.

``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.

 ``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.

2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!

கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.

அப்புறம் பள்ளிக்கூடம்.

கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.

இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.

நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

நன்றி : குமுதம்

Friday, October 10, 2008

தென்னகத்தின் சிற்பக்கலை வரலாறு

Sunday, September 28, 2008

தமிழர்களின் படிக்கும் பழக்கம்

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமான கேரளா, செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் படிப்பதிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேரளாவில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் எடுத்தக் கருத்துக் கணிப்பில் 90 சதவிகிதம் பேர் தொடர்ந்து படிப்பதாக தெரிவித்துள்ளனர். நம் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று தெரியவில்லை. நல்ல எழுத்தாளர்கள் இல்லையா? நல்ல எழுத்துக்களை அச்சிட பிரபல பத்திரிக்கைகள் முன் வருவதில்லையா? வேறு பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதனால் நாம் படிக்கும் பழக்கத்தை இழந்து வருகிறோமா? 

எழுத்தாளர் ஒருவர் இதைப்பற்றி வருத்ததோடு அவரது இணைய தளத்தில் எழுதி இருந்தார். உலக எழுத்தாளர்களின் புத்தகங்கள் எல்லாம் லட்ச கணக்கில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் போது, தமிழ் புத்தகங்கள் மட்டும் சில ஆயிரங்களே விற்பனை ஆவதாக அவர் சொல்லியிருந்தார்.உண்மைதான். இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது பலருக்கு. தொலைக்காட்சிப் பெட்டி வருவதற்கு முன்னால் வரை, படிக்கும் பழக்கம் பலரிடம் வெகுவாக இருந்து வந்தது. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் நிறைய படித்து வந்தனர். அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரிக்கைகள் சிறுவர்களுக்காகவே வந்து கொண்டிருந்தது. மங்கையர் மலர், ராணி போன்ற வாரப் பத்திரிக்கைகள் மகளிரை மிகவும் கவர்ந்து வந்தது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு, இந்த படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. சிறுவர்கள் முதல், மகளிர், ஆண்கள் வரை அவரவர் களுக்கு தேவையான நிகழ்ச்சிகளுக்கு முன் உட்கார்ந்து விடுகின்றனர். கேரளா மக்கள் தொலைக்காட்சி மூலம் வரும் பல்வேறு உப்புச் சப்பில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்றும் ஆச்சரியத் தகவலை வெளியிட்டுள்ளனர். இதுதான் அவர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரித்து வருகிறதா என்று தெரியவில்லை. அதனால் தான் அங்கு எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. இங்கு நடிகர்களுக்கும், ஆபாசமாக நடிக்கும் நடிகைக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.கணினி விளையாட்டுகள் வந்த பிறகு நகர்புற சிறுவர்கள் எல்லாம் வீதியில் வந்து விளையாடுவதை கூட நிறுத்தி விட்டனர்.என் சம வயது உள்ள இளைநர்களில் மிகச்சிலரே படிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆங்கில புத்தகத்தை மட்டுமே விரும்பி படிக்கின்றனர். தமிழில் படிக்கும் மிகச்சிலரில் அசோக மித்திரன், ஜெய காந்தன் வரை யாரும் செல்வதில்லை.

இன்று தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க சகிக்கவில்லை. குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளும் வியாபார நிர்பந்தத்தினால் தங்களது தரத்தை குறைத்து விட்டன. எங்கு பார்த்தாலும் சினிமா பற்றிய செய்திகளே. இதை மாற்ற வேண்டுமானால் நல்ல எழுத்தாளர்கள் பலர் வர வேண்டும். பத்திரிக்கைகளும் நல்ல தரமான கட்டுரைகளுக்கு, கதைகளுக்கு சில பக்கங்களையாவது ஒதுக்க வேண்டும். இப்பொழுது வலைப்பதிவின் மூலம் பல எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்திருப்பது நல்ல விசயமே. இதன் மூலம் பலர் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வர்.

Sunday, September 14, 2008

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு


சமீபத்தில் நடந்த இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள்...

நன்றி : இந்தியா டுடே

Friday, September 12, 2008


தினமலரில் வந்த 'ஒரு மணி நேரத்தில் ஆயிரம் இட்ல்லிகள் சுடச்சுட தயார்' என்கிற செய்தி என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இந்தியா தொழில்நுட்பத் துறையில் "அதிவேக வளர்ச்சி" அடைந்து வருகிறது என்று ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை அதற்குச் சான்றாக ஒருமணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இட்லி, தோசை , சப்பாத்தி போன்ற உணவுகளை சமைக்கும் இயந்திரத்தை சான்றாக காட்டுகிறது. இதற்கான ஆய்வை மேற்கொண்டு தானியங்கி இயந்திரத்தை வடிவமைத்துள்ள நிறுவனம் ' மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்.

நம் நாட்டில் உணவுக்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம் வியக்க வைக்கிறது. இத்தனை வகையான உணவுகளை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஆனால் நம் உணவுகள் நம்மக்கு தரும் ஊட்டசத்துகளைப் பற்றியோ, அங்காடிகளில் விற்கப்படும் உணவுகளின் தரத்தைப் பற்றியோ யாரும் வெகுவாக கவலைப் படுவதாக தெரியவில்லை. இதற்காக பெரிய அளவிலே ஆராய்ச்சிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை. காப்பி பொடியில் ஆரம்பித்து பால், உப்பு, மிளகாய், மஞ்சள் தூள் போன்ற அன்றாடம் பயன் படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளின் தரம் கேள்விக் குறியாகி வருகிறது. அதேநேரத்தில், நம் பண்டைய உணவு முறையிலிருந்து சிறிது சிறிதாக மாறி வருவதால் இன்று இயற்கையாக கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துகள் கூட கிடைப்பதில்லை. அரசு நியாய விலைக்கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் தரமும் மோசமாக உள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, உணவு விடுதிகளின் கிடைக்கும் உணவில் தரமோ மிகவும் மோசமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையில் தினமும் இறைச்சி யை உண்டு வந்த ஒருவருக்கு புற்று நோய் வந்தது பற்று எழுதப் பட்டிருந்தது. அதற்கான காரணம் சிக்கனில் கலக்கப்படும் ஒருவித ரசாயணம் என்றுக் கண்டறியப்பட்டது. இன்று பிழைப்புக்காக பல ஊர்களின் தங்கி வேலைப் பார்க்கும் பலரது பசியைப் போக்குவது இந்த உணவு விடுதிகள் தான். சென்னை போன்ற நகரங்களில் உணவு விடுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும்.  

இவ்வாறாக வீட்டில் கிடைக்கும் உணவிலும், வெளியில் கிடைக்கும் உணவிலும் கிடைக்கும் ஊட்டச்சத்து குறைபாடிலோ, தரத்திலோ நாம் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. அரசும் மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனங்களும் இது போன்ற ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதையோ அல்லது இருக்கும் விதிகளில் முறையாக செயல் படுதுவதிலோ அக்கறை காட்டுவதில்லை. ஆயிரம் இட்லிகளை கொடுக்கும் இயந்திரங்களை செய்வதோடு, மற்ற உபயோகமுள்ள பணிகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.

Tuesday, September 2, 2008

Knowledge@Wharton

Wharton Businees School, University of Pennsylvania, came up with a program called "knowledge@wharton. They interview eminent people from all the profession and upload it in YouTube videos.I saw the interview with Former Indian President APJ Abdul Kalam. Wharton invited him for the 2008 Wharton India Economic Conference.He talks about his experience in ISRO and as a President. He said the Rashtrapathi Bhavan is powered by solar energy. This is the first building in India powered by only solar energy. He talks about his Pura project and the 2020 vision.

Here is the video for you:



Here is the link for Wharton Knowledge site for INDIA:

http://knowledge.wharton.upenn.edu/india/index.cfm
 
Watch the latest videos on YouTube.com