Sunday, May 17, 2009

தேர்தல் 2009 - ஒரு பார்வை

தேர்தல் முடிந்து விட்டது. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், கடினமான மேலாண்மைப் பணிகளில் ஒன்றாகக் கருதப் படும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அரசியல் வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும், விமர்சகர்களும் ஒன்று நினைக்க, மக்கள் வேறொன்று நினைத்து விட்டார்கள். ஆனால், சரியான நல்ல தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள். இந்த முடிவில் இருந்து தெரிந்துக் கொள்ளக்கூடிய நல்ல , கெட்ட விசயங்களாக எனக்குப் பட்டவை:
  • இந்திய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்தித்து தேசிய கட்சிக்கு ஓட்டு அளித்து உள்ளனர். இந்திய போன்ற மிகப் பெரிய, இன, மொழிகளால் வேறுபட்ட நாட்டில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்க முடியாது. 1991க்கு பிறகு தேசிய கட்சிகளால் பெரும்பான்மை பெற முடியாததால், மாநில கட்சிகளையும், சிறு சிறு ஜாதிக் கட்சிகளையும் நம்பியே இருந்து வந்தது. இதனால் பல பிக்கல்கள், பிடுங்கல்கள். அனைவரையும் "திருப்தி" படுத்த வேண்டிய நிலை. எந்த ஒரு முடிவையும் தெளிவாக, உறுதியாக எடுக்க முடியாத நிலை. ஆட்சியை காப்பாற்றவே அதிக நேரம் செலவிடப் படவேண்டிய கட்டாயம். இந்த முறை கங்க்ரச்ஸ் அதிக இடங்களை பெற்றதால், நிலையான, உறுதியான அரசை எதிர் பார்க்க முடியும்.
  • பழையன கழிதலும் புதியன புகுதலும் - என்கிறது நன்னூல். காலத்துக் கேற்ப கொள்கைகளில் மாற்றம் வருவதில் தவறேதும் இல்லை. ஆனால், தோழர்கள் பிடிவாதமாக "பல" கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது. அதனால் இந்த முறை வலது, இடதுகளுக்கு தக்க பாடம் புகட்டிவிட்டனர். இனிமேலாவது, தங்கள் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, கொஞ்சம் மாறினால் நல்லது. இல்லையெனில், மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் மறந்து விடவேண்டியது தான்.
  • அரசியல் பச்சோந்திகளை மக்கள் அடையாளமும் கண்டுக் கொண்டு விட்டனர். தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.
  • தென்னிந்தியாவில் அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. எம்ஜியார், என்டியார் போன்றோரின் வெற்றி பலரையும் அரசியலுக்கு வர தூண்டியது; தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிக்க முயன்ற சிரஞ்சீவி தோல்வியை சந்தித்து இருக்கிறார். வெறும் பதினெட்டு தொகுதிகளோடு கனவு கலைந்தது. மிக சாதரணமாக வெற்றி பெறுவர் என்று எதி பார்க்கப்பட்ட சிரஞ்சீவி தனது சொந்த ஊரிலேயே தோல்வியை தழுவி இருக்கிறார்.திருப்பதியில் கூட வெற்றி வித்தியாசம் மிகக் குறைவு. கட்சி ஆரம்ப விழாவில் கூடிய கூடத்தைக் கண்டு மிரண்டு போனவர்கள் இப்போது சிரிக்கிறார்கள். இவரின் தோல்வி மற்றவர்களை ஒருகணம் சிந்திக்க செய்யும்.
  • பொருளாதாரம் பாதிப்பு, விலை வாசி பிரச்னை, தொடர் குண்டு வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், காங்கிரசஸ் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சரியான எதிக் கட்சி இல்லாதது. பாரதிய ஜனதா கட்சியை இன்னும் ஒரு முழு தேசியக் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களது இந்துத்துவ கொள்கை. பல ஜாதி, மொழி, இன மக்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கட்சியாக தங்களை சித்தரித்துக் கொள்கிறது. இந்த தோல்வியின் மூலம், தங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டல் அவர்களுக்கு நல்லது.
  • இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார் செய்ய ஊழல் செய்ய தூண்டும். சாமானியர்கள் தேர்தலில் நிக்க தயங்கும் நிலை ஏற்படும். இதற்கு ஏழை மக்களை குறை சொல்ல முடியாது. பணத்தேவையை பூர்த்தி செய்ய பணத்தை வங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டும் போடுகிறார்கள், நன்றி உள்ளவர்கள்!
  • அடுத்ததாக, அரசு இயந்திரத்தை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிவகங்கை, விருது நகரில் நடந்த குழப்பங்கள் அதை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளது. அரசு பணியாளர்கள் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் , நேர்மையாக பணியாற்றினால் நல்லது.

2 comments:

  1. நல்லா வருவீங்க..தம்பி!
    உங்கள மய்ன்ட்ல வச்சிருக்கேன்.

    ReplyDelete
  2. நன்றி அண்ணா!!!

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com